ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47

ஒருமதமாகுவதின்னுரப்பதெல்லா வருமிது வாதிகளாருமோர்க்குவீல; பரமதவாதமொழிஞ்ஞ பண்டிதன்மா ரறியுமிதின்றெ ரஹஸ்யமிங்கஶேஷம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 47) எல்லோரும் சொல்வது ஒருமதமாதலே தம்மதம்பரப்புவோர் இதை எண்ணுவதில்லையே பிறர்மதம் மறுக்காத அறிஞர் இம்மறையை அறிவர் குறைவொன்றுமின்றியே * இப்பாடலின் முதன்மைச் சொல் ரகசியம்-மறை என்பது. அறிவர் அறிந்ததும், மதம் பரப்புவோர் மறப்பதுமான மந்தணம் ஒன்றுள்ளது என்கிறார் குரு. பதஞ்சலியின் யோக சூத்திரம் அகமல்லாததை அகமென எண்ணுவதே அறியாமை என்கிறது. இது பலவகைகளில் வெளிப்படலாம்: மனநலம் பிறழலாம்; இன்பநாட்டத்தில் தீவிரம் ஏற்படலாம்;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 46

பொருது ஜயிப்பது அஸாத்யம் ஒன்னினோடொன்னு ஒரு மதவும் பொருதாலொடுங்குவீல; பரமதவாதியிதோர்த்திடாதெ பாழே பொருது பொலிஞ்ஞிடுமென்ன புத்தி வேணம்.        (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 46) போரிட்டு வெல்வது நடவாது ஒன்றோடொன்று பொருதி அழிக்கப்பட்ட மதமொன்றில்லை இது நினையாது பிறமதம் பழிப்போன் போரிட்டழிவான் வீணே என்றுணர வேண்டும் * மேலோட்டமாக இந்தப் பாடல் எளிய ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பேராழமும் நுண்மைகளும் கொண்ட ஒன்று. மாதக் கணக்கில் இதிலேயே உழன்றாலும் பாடல் சொல்லவருவதை முழுமையாக நம்மால் கண்டடைந்துவிட முடியாது.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 46

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

பல மத ஸாரவும் ஏகமெந்நு பாராது உலகில்  ஒரானயில் அந்தர் என்னபோலே பல வித யுக்தி பறஞ்ஞு பாமரன்மார் அலவது கண்டு அலயாது அமர்ன்னிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 44) மதங்கள் பல சொல்வது ஒன்றென்றறியாது மத்தமா விளக்கிய குருடர் போல பாமரர் பகரும் பலவும் கேட்டு  அலைவுறாது அமைந்திடல் வேண்டும் * இது எளிய பாடலாக தோன்றக் கூடும்.  ஆனால் முந்தைய பாடலோடு ஒரு நுட்பமான தொடர்பு இதற்கு உள்ளது. 41-ஆவது பாடலில், ‘இது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40

ஸமயிலும் அன்யயிலும் ஸதாபி வன்னு இங்கமருவதுண்டு அததின் விஶேஷஶக்தி அமிதயதாகிலுமாகெ ரண்டிவற்றின் ப்ரமகலயால் அகிலம் ப்ரமேயமாகும்       (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 40) நிகரிலும் பிறிதிலும் உறையும் ஆற்றல் நிலைபெறும் வந்திங்கமர்ந்து நில்லாது ஊசலாடும் இவற்றின் செயலால் எல்லாம் உணரப்படும் பொருளாகும் * ‘நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை கற்பிக்கப் போகிறேன்’ ‘நாம் இணைந்து தியானம் செய்வோம்’ மேற்சொன்னதில் முதல் கூற்று ‘நான்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. அதில் நான் உங்களை என்னில் இருந்து வேறுபடுத்திக்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 40

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 39

அருளிய ஶக்திகளெத்துடர்ன்னு ரண்டாம் பிரிவிவயில் ஸமதன் விஶேஷமேகம்; விரதி வரா விஷமாவிஶேஷமொன்னி த்தரமிவ ரண்டு தரத்திலாயிடுன்னு (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 39) முற்சொன்ன ஆற்றல்களை மேலும் இரண்டாய் பிரிக்கலாம் அவற்றில் நிகர் என்பதன் பண்பொன்று பிறிதென்பதன் பண்புகளுக்கோர் முடிவில்லை இவ்வாறாய் இரண்டும் இரண்டு வகை * 33-ஆவது பாடலில், அறிவு தனது இயல்கையை அறிந்துகொள்ள பல அறியப்பட்ட பொருள்களாக மாறுகிறது என்று கூறப்பட்டது. தெளிந்த நிலை இருண்ட நிலை என பலவற்றிற்குள் அது செல்கிறது. சில… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 39

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38

பலவிதமாய் அறியுன்னது அன்யயொன்னாய் விலஸுவதாம் ஸமயென்னு மேலிலோதும் நிலயெயறிஞ்ஞு நிவர்ன்னு ஸாம்யமேலும் கலயிலலிஞ்ஞு கலர்ன்னிருன்னிடேணம்       (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 38) பலவென்றறியப்படுவது பிறிது ஒன்றென ஒளிர்வது நிகரெனப்படுவது நிலையை அறிந்து விடுதலை அடைந்தபின் நிகர்நிலையில் கரைந்து கலந்திடு * இச்சொற்களை புரிந்துகொள்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மலையாளத்தில் நிவர்ன்னு என்றால் ஒருவர் நேர்மையானவராதலை குறிக்கும். நடராஜ குரு அந்தப் பொருளில்தான் அதை தன் உரையில் பயன்படுத்துகிறார். ஆனால் நான் அதன் சமஸ்கிருத மூலத்தை… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 38

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

விஷமதயார்ன்னெழுமன்ய வென்னுகொள்வான் விஷமமகண்ட விவேகஶக்தியென்யே விஷமயெ வென்னதினால் விவேகமாகும் விஷயவிரோதினியோடணஞ்ஞிடேணம்                 (ஆத்மோபதேச சதகம் – பாடல் 37) இடையூறுகளால் நிரம்பிய பிறிதென்பதை  இடையறா பகுத்தறிவன்றி வெல்லுதல் இயலா இடையூறுகளை வென்றபின் அமைக புலன்நுகர்வின் எதிரியாம் பகுத்தறிவோடே  * நாம் நாடுவது அமைதியை – இடையறா இன்பத்தோடு தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய அமைதியை. இடையறா இன்பமுள்ள இடத்தில் அமைதியும் தவழ்கிறது. அந்த இன்பம் மெய்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியமானது. மெய்மை மாறாத ஒன்று; இன்று மெய்யென இருப்பது நாளையும்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

அறிவினு சக்திஅனந்தமுண்டு இதெல்லாம் அறுதியிடாம் சம அன்ய என்னிவண்ணம் இருபிரிவாய் இதில் அன்யஸாம்யமார்ன்னு உள்ளுருவில் அமர்ன்னு தெளிஞ்ஞு உணர்ன்னிடேணம்            (ஆத்மோபதேச சதகம் – பாடல் 36) அறிவின் ஆற்றல்கள் எண்ணற்றவை  ஒன்றென்றும் பிறிதென்றும் பகுக்கலாம் அவற்றை இவ்விரு பிரிவில் பிறிதென்பதை ஒன்றுடன் கலந்தே அகத்தே பெறுதல் வேண்டும் தெளிவே * மனம் விழிப்பு நிலையில் இருக்கையில் ஏற்படும் ஏதோ சில பதிவுகளே அறிவு என நாம் எண்ணுகிறோம். ஆனால் அது ஒரு கூறு மட்டுமே. தன்னொளி கொண்டு… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஒரு பதினாயிரம் ஆதிதேயர் ஒன்னாய் வருவது போலே வரும் விவேகவிருத்தி அறிவினெ மூடும் அநித்ய மாயயாம் ஈ இருளினெ ஈர்ன்னெழும் ஆதிசூர்யன் அத்ரே (ஆத்மோபதேச சதகம் – பாடல் 35) பதினாயிரம் கதிரவர் ஒன்றாய் எழுவது போல் தோன்றும் பகுத்தறிவே அறிவை மறைக்கும் நிலையில்லா மாயையாம் இந்த இருளினைக் கிழித்தெழும் முதற்கதிரவனே * நம் ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களால் நிறைந்தது புற உலகு. நமது ஐம்புலன்களும் அப்பொருட்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டபடியே உள்ளன. ஆனால், எந்தக் கவர்ச்சியும் நிலைத்திருப்பதில்லை.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 35

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

அரநொடியாதியராளியார்ன்னிடும் தே ருருளதிலேரியுருண்டிடுன்னு லோகம்; அறிவிலநாதியதாய் நடன்னிடும் தன் திருவிளயாடலிதென்னறிஞ்ஞிடேணம்                                                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 34) அரைநொடி முதலாய ஆரக்கால்கள்கொண்ட தேருருளைகளின் மேலமர்ந்து உருளும் உலகு அறிவிலெப்போதும் நிகழும் முதலென்பதில்லா திருவிளையாடல் இது * நாம் உணரும் உலகு பற்றி எண்ணிப்பார்க்கும்போது, நம்மைச் சுற்றிலும் பெருவெளி ஒன்றிருப்பது நமக்குத் தெரிகிறது. ஒரு வெளியின் மையத்திலேயே நாம் எப்போதும் இருக்கிறோம். அங்கிருந்து எத்திசையில் நோக்கினாலும் தொடுவானம் ஒரே தொலைவில்தான் இருக்கும். தொடுவானை நாம் ஒருபோதும் நெருங்க முடியாது;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34