ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47

ஒருமதமாகுவதின்னுரப்பதெல்லா வருமிது வாதிகளாருமோர்க்குவீல; பரமதவாதமொழிஞ்ஞ பண்டிதன்மா ரறியுமிதின்றெ ரஹஸ்யமிங்கஶேஷம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 47) எல்லோரும் சொல்வது ஒருமதமாதலே தம்மதம்பரப்புவோர் இதை எண்ணுவதில்லையே பிறர்மதம் மறுக்காத அறிஞர் இம்மறையை அறிவர் குறைவொன்றுமின்றியே * இப்பாடலின் முதன்மைச் சொல் ரகசியம்-மறை என்பது. அறிவர் அறிந்ததும், மதம் பரப்புவோர் மறப்பதுமான மந்தணம் ஒன்றுள்ளது என்கிறார் குரு. பதஞ்சலியின் யோக சூத்திரம் அகமல்லாததை அகமென எண்ணுவதே அறியாமை என்கிறது. இது பலவகைகளில் வெளிப்படலாம்: மனநலம் பிறழலாம்; இன்பநாட்டத்தில் தீவிரம் ஏற்படலாம்;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 46

பொருது ஜயிப்பது அஸாத்யம் ஒன்னினோடொன்னு ஒரு மதவும் பொருதாலொடுங்குவீல; பரமதவாதியிதோர்த்திடாதெ பாழே பொருது பொலிஞ்ஞிடுமென்ன புத்தி வேணம்.        (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 46) போரிட்டு வெல்வது நடவாது ஒன்றோடொன்று பொருதி அழிக்கப்பட்ட மதமொன்றில்லை இது நினையாது பிறமதம் பழிப்போன் போரிட்டழிவான் வீணே என்றுணர வேண்டும் * மேலோட்டமாக இந்தப் பாடல் எளிய ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பேராழமும் நுண்மைகளும் கொண்ட ஒன்று. மாதக் கணக்கில் இதிலேயே உழன்றாலும் பாடல் சொல்லவருவதை முழுமையாக நம்மால் கண்டடைந்துவிட முடியாது.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 46

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

பல மத ஸாரவும் ஏகமெந்நு பாராது உலகில்  ஒரானயில் அந்தர் என்னபோலே பல வித யுக்தி பறஞ்ஞு பாமரன்மார் அலவது கண்டு அலயாது அமர்ன்னிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 44) மதங்கள் பல சொல்வது ஒன்றென்றறியாது மத்தமா விளக்கிய குருடர் போல பாமரர் பகரும் பலவும் கேட்டு  அலைவுறாது அமைந்திடல் வேண்டும் * இது எளிய பாடலாக தோன்றக் கூடும்.  ஆனால் முந்தைய பாடலோடு ஒரு நுட்பமான தொடர்பு இதற்கு உள்ளது. 41-ஆவது பாடலில், ‘இது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

விஷமதயார்ன்னெழுமன்ய வென்னுகொள்வான் விஷமமகண்ட விவேகஶக்தியென்யே விஷமயெ வென்னதினால் விவேகமாகும் விஷயவிரோதினியோடணஞ்ஞிடேணம்                 (ஆத்மோபதேச சதகம் – பாடல் 37) இடையூறுகளால் நிரம்பிய பிறிதென்பதை  இடையறா பகுத்தறிவன்றி வெல்லுதல் இயலா இடையூறுகளை வென்றபின் அமைக புலன்நுகர்வின் எதிரியாம் பகுத்தறிவோடே  * நாம் நாடுவது அமைதியை – இடையறா இன்பத்தோடு தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய அமைதியை. இடையறா இன்பமுள்ள இடத்தில் அமைதியும் தவழ்கிறது. அந்த இன்பம் மெய்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியமானது. மெய்மை மாறாத ஒன்று; இன்று மெய்யென இருப்பது நாளையும்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

அறிவது தர்ம்மியெ அல்ல, தர்ம்மமாம், ஈ அருளிய தர்ம்மி அத்ருஶ்யமாகயாலே தர முதலாயவ ஒன்னுமில்ல, தாங்குன்னு ஒரு வடிவாம் அறிவுள்ளது ஓர்த்திடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 32) அறிவது தர்ம்மியை அல்ல தர்மங்களையே தர்ம்மியை கட்புலனறிவதில்லை  உலகு முதலாயவை ஒன்றும் இல்லை அறிவு தாங்கும் ஒரு வடிவமே என்றறிக! * இப்பாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ப்ருஹதாரண்யக உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் நான்காவது பகுதிக்கு சங்கரர் எழுதிய உரையை நீங்கள் படித்திருக்க வேண்டும்.  சங்கரரது அனைத்து… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 32

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

அடிமுடியற்றடிதொட்டு மௌலியந்தம் ஸ்ஃபுடமறியுன்னது துர்ய போதமாகும்; ஜடமறிவீலது சிந்த செய்து சொல்லு ன்னிடையிலிருன்னறிவல்லறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 28) அடிமுடி இல்லாது, அடி முதல் முடி வரை தெள்ளென அறியப்படுவது துரிய நனவு ஜடம் அறிதலற்றது; இது புரிந்தபின் இடையில் இருப்பது அறிவல்ல என்றறிக! * முந்தைய பாடலில் அகம் என்பது, தன்னிலிருந்து தோன்றியதும் முழுமையான இருளில் தன்னை மறைத்துக்கொண்டிருப்பதுமான தூய நனவென வரையறுக்கப்பட்டது. இதிலிருந்து, தன்னையறியாத இருளொன்றும் தன்னை அறிந்ததாக முழுதறியும் ஒரு அறிவும்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

இருளிலிருன்னறியுன்னதாகுமாத்மா வறிவதுதானத நாமரூபமாயும் கரணமொடிந்த்ரிய கர்த்த்ருகர்மமாயும் வருவது காண்க! மஹேந்திரஜாலமெல்லாம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 27) இருளிலிருந்தபடி தன்னையறியும் அகம் அதறியும் அதன் பெயர் வடிவம் செயல் புலன் வினையென அனைத்தும் பெரும் மாயாஜாலம் சீட்டுக் கட்டில் முதலில் உள்ளது கோமாளியை குறிக்கிறது, இறுதியாக உள்ளது மந்திரவாதியை. கோமாளியில் தொடங்கி மந்திரவாதியில் முடிவதற்குள் நீதிபதி, மரணம் என வாழ்வின் பல கூறுகளைக் குறிக்கும் சீட்டுகளை நாம் காண்கிறோம். அதேபோல், நம் வாழ்வும் கற்றறியா கோமாளியில் துவங்கி… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

அவயவமொக்கெயமர்த்தியாணியாய் நி ன்னவயவியாவியெயாவரிச்சிடுந்நு; அவனிவனென்னதினாலவன் நினய்க்கு ன்னவஶதயாமவிவேகமொன்னினாலே (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 26) ஆணிபோல் உறுப்புகளை ஒன்றிணைக்கும் ஆவிபோன்றதை மூடியிருக்கும் உடல்கொண்டவன் அவிவேகத்தாலே ‘அவன்’ ‘இவன்’ என எண்ணிச் சோர்கிறான் பல உறுப்புகளால் ஆன நமது உடல், வாழும் உயிர் என்ற ஒன்றால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆவித்தன்மை கொண்ட மூச்சு எனும் முகமையால் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட ஒரு உடலின் தோற்றம் பிறிதொரு உடலிலிருந்து மாறுபடுவதால், அனைத்து உயிரிகளிலும் உறையும் உயிர் எனும் பொருள் ஒன்றே… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ப்ரியமபரன்றெயதென் ப்ரியம்; ஸ்வகீய ப்ரியமபரப்ரியமிப்காரமாகும் நயமதினாலெ நரன்னு நன்ம நல்கும் க்ரியயபரப்ரியஹேதுவாய் வரேணம் (ஆத்மோபதேச சதகம் : பாடல் 22) பிறன்நலம் என்நலமாகும் தன்நலம் பிறன்நலமாகும் தன்நலம் பயக்கும் செயலெல்லாம் பிறன்நலம் கருதல் வேண்டும் ஒரு புழுவானாலும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியானாலும் ஒரு ஜீவராசியின் வாழ்வை கவனித்தால் அதன் அனைத்துச் செயல்களும் இன்ப வேட்கையால் தூண்டப்படுபவையே என்பது தெரியும். தூண்டல்கள் தன்னுணர்வுடனும் தோன்றலாம், நனவிலி நிலையிலும் தோன்றலாம். இங்கு அமர்ந்திருக்கையில் நிலைமாறி அமர்வதுகூட இன்னும் வசதியுடன் இருப்பதற்காகத்தான்.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

அதிகவிஷால மரு ப்ரதேஷமொன்னாய் நதி பெருகுந்நதுபோலெ வன்னு நாதம் சுருதிகளில் வீணு துரக்குமக்ஷியென்னும் யதமியலும் யதிவர்யனாயிடேணம் அகன்று விரிந்த பெரும் பாலையில் ஆற்று வெள்ளம் போலே வரும் ஒலி செவி நிறைக்க கண்கள் திறக்கும் எதுவும் பாதிக்காத உன்னத யதியாகவேண்டும்                                                    … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16