சௌந்தர்யலஹரீ – 35

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி*ரஸி த்வமாபஸ்த்வம் பூ*மிஸ்த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வவபுஷா சிதானந்தாகாரம் ஶிவயுவதி பா*வேன பிப்*ருஷே பாடல் – 35 ஆஞாவில் மனமாக, விஶுத்தியில் வெளியாக அநாஹதத்தில் வளியாக ஸ்வாதிஷ்டானத்தில் காற்றின் சாரதியாக மணிபூரகத்தில் நீராக இருக்கிறாய் உன் தோற்றம் எனும் வடிவன்றி வேறொன்றும் இல்லை உனது சுயத்திலிருந்து தோற்றம் கொள்வதற்கென இந்தப் பிரபஞ்ச வடிவு கொண்ட நீ பேரின்ப நனவெனும் வடிவு கொண்ட நீ சிவனை… Read More சௌந்தர்யலஹரீ – 35

ஶ்ரீசக்ர தியானம் – 34

ஞம் ஸர்வோன்மாதினீ அனைவரது களிப்பிலும் மகிழ்ந்திருப்பவளே, அன்னையே! இவ்விழிகள் ஒரு மலரை காண்கையில், அவ் எளிய அனுபவத்தில் பகலவனின் ஓளியும், அழகிய வடிவமைப்பும், மலரிதழ்களின் மனம்மயக்கும் வண்ணமும், அழகை காண்கையில் ஏற்படும் கிளர்ச்சியும் என இவையெல்லாம் பொதிந்துள்ளன. விண்ணும் மண்ணும் அகமும் ஒன்றாகி ஏற்படும் உவகையில் எது அகம் எது புறம் என்று எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. எளிய மலரொன்று, மண்ணையும் விண்ணையும் அகத்தின் ரசனையையும் ஒன்றிணைக்க முடியும் என்றால், ஞாயிறும, திங்களும், மினுங்கும் விண்மீன்களும், நிலவுலகக்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 34

சௌந்தர்யலஹரீ – 34

ஶரீரம் த்வம் ஶம்போ*: ஶஶிமிஹிரவக்ஷோருஹயுகம் தவாத்மானம் மன்யே ப*கவதி நவாத்மானமனக*ம் அத: ஶேஷ: ஶேஷீத்யயமுப*யஸாதா*ரணதயா ஸ்தி*த: ஸம்பந்தோ* வாம் ஸமரஸபரானந்தபரயோ: பாடல் – 34 ஶம்புவின் உடலே நீ சூரிய சந்திரரே உன் இரு முலைகள் உன் ஆன்மாவையே  பா*வத்தின் தூய ஆன்மாவாகக் கொள்கிறேன் அருளப்பட்டவளே நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நிறைவுசெய்து ஒருவரது சாரமே மற்றொருவர் என உணர்ந்து ஒன்றேபோல் பேரின்பத்தில் திளைக்கிறீர்கள் ** உடல் கொண்ட மனிதர்கள் நாம். ஒருவர் தன் கண்களைத் திறந்து பல… Read More சௌந்தர்யலஹரீ – 34

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன் தன்னுருவிலுமொத்து புறத்துமுஜ்வலிக்கும் கருவினுகண்ணுகளஞ்சுமுள்ளடக்கி தெருதெரெ வீணு வணங்கியோதிடேணம் [ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 1] அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் ஒளிரும் கருவினை புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம் * ‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல்.  செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப் புலனுணர்வு மூலமோ அறிவது.  உங்களது விழிப்புணர்வு ஒரு நனவோடை போல உங்களில் கடந்து செல்வதை கவனியுங்கள்.  உங்களை அறிபவனாக இனம் காணுங்கள்.  உதாரணமாக, “நான்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

வேண்டுதல்கள் – 1

மெல்லிய உத்தரவாதம்   இதமானது உன் ஆன்மா நீலநிற ஏரியைப்போலும் அமைதியானது உன் கருணையின் ஆழத்திலிருந்து எழுகின்றன உன் எண்ண அலைகள் மலரும் நாளைக்கான நம்பிக்கை இன்றைய வலிமைக்கான மெல்லிய உத்தரவாதம் உன் மௌனப் புன்னகையின் ரகசியத்தை மட்டும் கற்க வேண்டும் நான்  

ஶ்ரீசக்ர தியானம் – 33

ஶம் ஸர்வரஞ்ஜனீ தாயே, ஸர்வரஞ்ஜனீ, எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் உன் வல்லமை எல்லையற்றது. ஒரு பனித்துளிகூட வானவில்லின் ஏழு வண்ணங்களையும் பிரதிபலிக்க முடியும். ஒரு கணம் மாணிக்கமாகவும் மறுகணம் மரகதமெனவும் மாயம் காட்ட முடியும். சில நிமிடங்களில் அது ஆவியாகி மறைந்துவிடும் என்றாலும், இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நீ புதைந்து வைத்திருக்கும் விந்தைகளை அது காட்டிச் செல்கிறது. உருண்டையான முத்துப்போன்ற சின்னஞ்சிறு உடல்கொண்ட அப்பனித்துளி, தன்னால் முழு வானத்தையும் எதிரொளிக்க முடியவில்லை என்று முறையிடுவதில்லை. எம்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 33

கவிதைகள்

இன்று சற்று முந்தி வந்த சூரியன் என் ரோஜாவின் இதழ்களுக்குள் தன் பொற்கதிர்களால் நறுமணத்தை நிரப்பியது நான் உன்னைத் தேடினேன் நீ உறங்கிக் கொண்டிருந்தாய் மாசு மறுவற்ற ஏதோ ஆழத்தில் மூடிய கண்களுடன் —  வெட்கத்தால் என் தலை கவிழும்படி மனம் மயக்கும் ஒரு புன்னகையே உனது பதில்  —  ஆனால் படிகம் போல தெளிவாகவும் துல்லியமாகவும் நீயிருக்கும்போது நான் என்ன செய்ய முடியும் – ஒரு புத்தனைப்போல புலன்கள் அணையும் ஆழத்திற்கு மெளனமாக திரும்பிச் செல்வதைத்… Read More கவிதைகள்

சௌந்தர்யலஹரீ – 33

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதயமிதமாதௌ தவமனோர் நித்*யாயைகே நித்யே நிரவதி*மஹாபோ*கரஸிகா: ப*ஜந்தித்வாம் சிந்தாமணிகுணனிபத்தா*க்ஷவலயா: ஶிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபி*க்ருததா*ராஹுதிஶதை: பாடல் -33 தனித்தவளே, அழிவிலாதவளே, பேரின்பம் துய்க்கும் எண்ணற்ற போகிகள் உன் மந்திரத்திற்கு முன்னொட்டாக ஸ்மரன், யோனி, லக்ஷ்மி (ஐம், ஹ்ரீம், ஶ்ரீம்) என்ற முத்தொகுதியை சேர்த்து சிந்தாமணிகளால் ஆன ஜபமாலையுடன் விழைந்ததை அருளும் சுரபி எனும் பசுவின் நெய்யை சிவமெனும் நெருப்பில் இடைவிடாது ஆகுதி செய்து உன்னை வழிபடுகின்றனர் ** மனிதர் மகிழ்ச்சியை நாடுகின்றனர். புலனின்பங்களில் ஒரு… Read More சௌந்தர்யலஹரீ – 33

ஶ்ரீசக்ர தியானம் – 32

ஜம் ஸர்வவஶம்கரீ பகுதிகளை இணைப்பவளே, அன்னையே! விழித்தெழுந்து மேலே பார்க்கையில் மினுங்கும் விண்மீன்களும் ஞாயிறும் திங்களும் திகழும் எல்லையிலா வானப் பரப்பை காண்கிறோம். எம் காலடியில் இந்த நிலன் கால்மணை போலிருக்கிறது. இவை எல்லாம் எப்போது தோன்றின? யாமறியோம். இவையெல்லாம் ஒருநாள் எம்மிடமிருந்து மறைந்துவிடுமோ? அதுவும் யாமறியோம். ஆனால் எமது நனவில் ஒவ்வொரு பகுதியும் ஒரு பெயரைத் தாங்கி, தொடர்புடைய பல கருத்துருவாக்கங்களை எமக்கு நினைவுறுத்தியபடி அறியப்படாத நனவிலி ஆழத்திலிருந்து தோன்றுகிறது. மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் கொண்டு உருவாக்கப்படும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 32

சௌந்தர்யலஹரீ – 32

ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதிரத* ரவி: ஶீதகிரண: ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ்ததனு ச பராமாரஹரய: அமீ ஹ்ருல்லேகா*பி*ஸ்திஸ்ருபி* ரவஸானேஷு க*டிதா ப*ஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் பாடல் – 32 அன்னையே, ஶிவ, ஶக்தி, காம, க்ஷிதி என்ற நான்கும் அதன்பின் ரவி, ஶீதகிரண, ஸ்மர, ஹம்ஸ, ஶக்ர என்பவையும் அவற்றைத் தொடர்ந்து பர, மாரஹர என்பவையும் ஹ்ரீம் எனும் மந்திரத்தோடு முடிவடைகையில் உன் பெயரின் எழுத்துக்கூறுகளாகின்றன. ** எல்லா உசாவல்களும், நினைவூட்டல்களும், மதிப்பீடுகளும், செயல்தீர்மானங்களும்,… Read More சௌந்தர்யலஹரீ – 32