சௌந்தர்யலஹரீ – 32

ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதிரத* ரவி: ஶீதகிரண: ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ்ததனு ச பராமாரஹரய: அமீ ஹ்ருல்லேகா*பி*ஸ்திஸ்ருபி* ரவஸானேஷு க*டிதா ப*ஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் பாடல் – 32 அன்னையே, ஶிவ, ஶக்தி, காம, க்ஷிதி என்ற நான்கும் அதன்பின் ரவி, ஶீதகிரண, ஸ்மர, ஹம்ஸ, ஶக்ர என்பவையும் அவற்றைத் தொடர்ந்து பர, மாரஹர என்பவையும் ஹ்ரீம் எனும் மந்திரத்தோடு முடிவடைகையில் உன் பெயரின் எழுத்துக்கூறுகளாகின்றன. ** எல்லா உசாவல்களும், நினைவூட்டல்களும், மதிப்பீடுகளும், செயல்தீர்மானங்களும்,… Read More சௌந்தர்யலஹரீ – 32

ஶ்ரீசக்ர தியானம் – 31

ச*ம் ஸர்வஜ்ரும்பி*ணீ அன்னையே, ஸர்வதந்த்ரமயீ, ஆன்மாவின் சாரம் புகலடைவதற்கென ஆதி முட்டையின் வாயில் திறக்கப்பட்டபோது படைப்பு தொடங்கிவைக்கப்பட்டது. பிரபஞ்ச இயல்கை ஒன்றினுள் வாழ்வு உயிர்மூச்சென நுழைந்ததைப் போன்றது அது. சிறிது காலத்திற்கு எதுவும் நிகழாதது போலிருந்தது. முட்டை தன் வாயில் மூடி உறக்கத்தில் ஆழ்ந்ததுபோல் தோன்றியது. அதன்பின்னர் அணு சிதைவுற்று அதன் உருவநேர்படிகள் பல்கிப்பெருக, படைப்பெனும் வேதிச் செயல் தொடங்கியது. படைப்புதெய்வத்தின் மூச்சுக் காற்றின் ரகசியமே ஆதிமுட்டைக்குள் நுழைந்தது. உயிரின் புதிய இருப்பிடத்தில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டதுபோன்ற… Read More ஶ்ரீசக்ர தியானம் – 31

சௌந்தர்யலஹரீ – 31

சது:ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகலமதிஸந்தா*ய பு*வனம் ஸ்தி*தஸ்தத்தத்ஸித்தி*ப்ரஸவபரதந்த்ரை: பஶுபதி: புனஸ்த்வன்னிர்பந்தா*தகி*லபுருஷார்தை*கக*டனா ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதலமவாதீதரதிதம் பாடல் – 31 பஶுபதி எனப்படும் உயிர்களின் இறைவன் ஒவ்வொன்றும் தனக்கேயான வெளிப்படையான இயக்கத்தை உற்பத்தி செய்யக்கூடிய அறுபத்திநான்கு தந்த்ரங்கள் கொண்டு முழு உலகையும் இயங்கும்படி ஆணையிட்டு தான் அசையாது அமைந்தான்.  நீ வற்புறுத்தியதால் அனைத்து தந்த்ரங்களுக்குமான ஒருமித்த குறிக்கோளை எய்தக்கூடிய உனது தந்த்ரத்தை  இவ்வுலகுக்குக் கொணர்ந்தான்.   ** அடிப்படையில் மானுடனும் ஒரு விலங்கே. மற்றெல்லா விலங்குகளைப் போலவே, அவனும் செயல்களில்… Read More சௌந்தர்யலஹரீ – 31

ஶ்ரீசக்ர தியானம் – 30

சம் ஸர்வஸ்தம்பி*ணீ ௐ க்லீம். க்லீம் எனும் மந்திரத்தின் மறைபொருளை பகுத்தறிவுகொண்டு புரிந்துகொள்ள முயலக்கூடாது. உடலுக்கும் ஆன்மாவுக்குமான பரஸ்பர ஊடுருவலைக்கொண்டு அதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நுண்ணிய கரித்துகள் நெருப்பால் நிறையும்போது அது ஒரு தீப்பொறியாகிறது. அப்பொறியின் ஒளிரும் உடலில் துடிக்கும் தீ எது, அசைவிலா கரி எது என்பதை எவரும் பிரித்தறிந்துவிட இயலாது. அதுபோலவே, ஒருவர் முழுமையான இருதுருவநிலையில் (bipolarity) இருக்கையில் பக்தன் யார் இறை எது என்பதை பிரித்தறிய முடியாது. வெயில் முழுவதும் பகலவனுடையது.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 30

சௌந்தர்யலஹரீ – 30

ஸ்வதேஹோத்பூ*தாபி*ர்க்*ருணிபி*ரணிமாத்யாபி*ரபி*த: நிஷேவ்யே நித்யே த்வாமஹமிதி ஸதா பா*வயதி ய: கிமாஶ்சர்யம் தஸ்ய த்ரிநயனஸம்ருத்தி*ம் த்ருணயதோ மஹாஸம்வர்தாக்னிர்விரசயதி நீராஜனவிதி*ம் பாடல் – 30 தன்னுடலில் தோன்றும் கட்புலனாகா அணிமா போன்ற  அக ஆற்றல்களையே பரிவாரங்களெனக்கொண்டவளே நிலைபேறான உன்னை ‘நீயே நான்’ என எப்போதும் தியானிப்பவர் முக்கண்ணனின் நன்மைகளையே பொருட்டெனக் கொள்வதில்லை அத்தைகையோருக்கு  ஊழி நெருப்பே ஒளியூட்டாகிறது ** நசிகேதஸின் தந்தை சினம் கொண்டு, மகனை காலனிடம் அளித்துவிடுவதாக மிரட்டினான். அந்த மிரட்டல் இளையவனான நசிகேதஸின் ஆர்வத்தை தூண்டியது. தப்பியோடுவதற்கு… Read More சௌந்தர்யலஹரீ – 30

ஶ்ரீசக்ர தியானம் – 29

ஙம் ஸர்வஸம்மோஹினீ படைப்பூக்கத்திற்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அன்னையே! பல சுழற்சிகள் மூலம் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கும் அழகை நீ பாதுகாத்து வருகிறாய். கடந்துசெல்லும் ஒவ்வொரு கணத்திற்கும் காலம்சார்ந்த பெருமதிப்பொன்று உள்ளது. நேரம் அதன் முழுமையில், தூய காலத் தொடர்ச்சியாக தன்னில் வந்துசென்ற, இனி வரவிருக்கின்ற அனைத்துப் படைப்புச் சுழற்சிகளின் முறிவடையாத ஒருமையை கொண்டுள்ளது. உடல்கொண்ட உயிர்களுக்கென நீ அளித்துள்ள வெளியும் உடல்களுக்கிடையேயான வெளியும், ஓவியர்களுக்கும் சிற்பிகளுக்கும் தமக்கான உலகை தாமே வடிவமைத்துக்கொள்ள வேண்டிய எளிய மனிதர்களுக்கும், உன்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 29

சௌந்தர்யலஹரீ – 29

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடப*பி*த: கடோ*ரே கோடீரே ஸ்க*லஸி ஜஹி ஜம்பா*ரிமகுடம் ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப*முபயாதஸ்ய ப*வனம் ப*வஸ்யாப்*யுத்தா*னே தவ பரிஜனோக்திர்விஜயதே பாடல் – 29 மூவர் உன் முன் வணங்கி நிற்கின்றனர் இல்லம் திரும்பும் உன் இறையை எதிர்கொள்ள திடுமென நீ எழுகையில் உன் பரிவார கணத்தோர் இங்ஙனம் இசைக்கின்றனர் பிரம்மன் மணிமுடியை மீட்டளிப்பாயாக விஷ்ணுவின் அணிமுடி உன்முன் உள்ளது (தவறுதலாக நீ அதை தட்டிவிடக்கூடும்) இந்திரனின் மகுடத்தை காப்பாற்றுவாயாக ** நேற்று நிகழ்ந்தது உறங்கிவிட்டது.… Read More சௌந்தர்யலஹரீ – 29

ஶ்ரீசக்ர தியானம் – 28

க*ம் ஸர்வாஹ்லாதினீ ஒவ்வொருவரிலும் மகிழ்பவளே, அன்னையே! இவ்வுலகைப் படைத்து, காத்து, அழிக்கும் உன் புதிர்ச் செயல்பாடுகள் எல்லாம் அனைவரையும் வியக்க வைக்கின்றன. ஞாயிறு உதிப்பது எங்கே என எவர் கூறிவிட முடியும்? அதோ அங்கிருக்கும் மலைக்குப் பின்னிருந்து உதிப்பதாக ஒருவர் சொல்கிறார். பிறரோ அது கடலிலிருந்து எழுவதாக எண்ணுகின்றனர். காலையில் தொடுவானிலிருந்து தலைநீட்டும் சூரியன் மெல்ல மேற்குநோக்கி நகரும் விந்தையை அனைவரும் காண்கின்றனர். செந்நிறச் சூரியனை பார்த்து மகிழும் சிலர் ‘அதோ பகலவன் எழுகிறான்’ என்கின்றனர். அதே… Read More ஶ்ரீசக்ர தியானம் – 28

சௌந்தர்யலஹரீ – 28

ஸுதா*மப்யாஸ்வாத்ய ப்ரதிப*யஜராம்ருத்யுஹரிணீம் விபத்யந்தே விஶ்வே விதி*ஶதமகா*த்யா திவிஷத: கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா ந ஶம்போ*ஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா பாடல் – 28 பிரம்மனும் இந்திரனும் இறையோர் பிறரும் அழிவின்மையளிக்கும் அமிழ்தருந்தியபோதும் அனைத்துலகோரும் அடைவது மரணம் ஆலகாலம் எனும் கொடுநஞ்சை அருந்திய  அரனுக்கோ அழிவென்பதே இல்லை அன்னையே இது சொல்கிறது தாடங்கம் எனும் உன் காதணியின் பெருமையை ** காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் காலம் வருகிறது, இருக்கிறது, போய்க்கொண்டே இருக்கிறது. அது… Read More சௌந்தர்யலஹரீ – 28

ஶ்ரீசக்ர தியானம் – 27

கம் ஸர்வாகர்ஷிணீ அன்னையே, அன்போடு அனைத்தையும் அரவணைப்பவளே! காலையில் சேவற்கோழி கூவுகிறது. மணம் நிரம்பிய தென்றல் மரக்கிளைகளில் கொஞ்சி விளையாடுகையில் இலைகள் சலசலக்கின்றன.. களகளவென்ற அமைதியான பாடலோடு ஒழுகிச் செல்கிறது ஓடை. அன்னையின் முலைப்பாலருந்திய குழவி மகிழ்வோடு சிரிக்கிறது. பல கோயில் கருவறைகளிலிருந்து மணியோசையும் துதிப்பாடல்களும் எழுகின்றன. அவரவர் தம் திறனுக்கேற்றபடி செய்யும் இப்பூசைகளெல்லாம் உனக்கே படைக்கப்படுபவை என்று கருதுகிறேன். நீ எனக்களித்துள்ள குரல் அத்துணை இனிமையானதாக இல்லை. மனம்போன போக்கில் என் கைகளால் தாளமிடுகிறேன். மக்களால்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 27