நேர்காணல் – 6

4.2.1996 காலையில் எட்டுமணிக்கு யதி நடக்கக் கிளம்புவதை ஒரு பிரம்மசாரி தட்டி எழுப்பிச் சொன்னார்.  அவசரமாக முகம் மட்டும் கழுவிவிட்டு ஓடிச்சென்றோம்.  கோட்டும் தொப்பியும் கைத்தடியுமாக யதி நின்று கொண்டிருந்தார்.  யதி காலை ஐந்துமணிக்கு எழுந்திருப்பார்.  இசை கேட்பார்.  பிறகு தியானம்.  பிறகு கடிதங்கள்.  குருகுல முகப்பில் பெரிய சைப்ரஸ் மரங்களின் இலைகளில் பனித்துளிகள் மணிகள் போல ஒளிவிட்டன.  கிழக்குப் பக்கமாகத் திரும்பி நடந்தார்.  எதிரே வரும் குழந்தைகள் ‘குரு’ என்று கீச்சுக் குரலில் கூவியபடி ஓடிவந்தன. … Read More நேர்காணல் – 6

நேர்காணல் – 5

3.2.1996 சென்ற முறை வந்தபோது இந்தியச் சிந்தனை முறையின் தனித்தன்மை பற்றிச் சொன்னீர்கள்.  நமது தத்துவ மரபிற்கும் மேற்கின் தத்துவ மரபிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? பிலாசபி என்ற சொல்லையோ அதன் உட்பிரிவுகளையோ அடிப்படையாகக் கொண்டு நாம் நமது சிந்தனைகளை ஆராயக்கூடாது.  கீழைச் சிந்தனை முறை அடிப்படையில் வேறு.  துரதிர்ஷ்டவசமாக நமது கல்வித்துறை அடிப்படையில் மேற்கத்தியத் தன்மை கொண்டது.  ஆகவே இன்று மேற்குடனான வித்தியாசம் என்ற அளவிலேயே நாம் நமது சிந்தனையைப் பார்க்க வேண்டும். பிலாசபி… Read More நேர்காணல் – 5

நேர்காணல் – 4

1.1.1996 நவீனத்துவம் பற்றிக் கூறுங்கள்… ரோமன் கத்தோலிக்க மரபிற்குள் எழுந்த ஒரு சிந்தனை முறையே மாடர்னிசம் என்பது.  வாழ்க்கையில் விஞ்ஞானத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாக ஆகிவிட்டது என்று நவீனத்துவர்கள் நம்பினார்கள்.  விஞ்ஞானரீதியான ஆய்வு முறை என்பது புறவயமானது, சார்பற்றது, தருக்க முழுமை உடையது என்று எண்ணினார்கள்.  பைபிளை விஞ்ஞான அடிப்படையில் மறுபரிசீலனை செய்து தொகுக்க வேண்டும் என்றார்கள்.  விஞ்ஞானப் பார்வை என்று இவர்கள் குறிப்பிட்டது நிரூபணவாதப் பார்வையையே.  ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரான்ஸில் ஏனெஸ்ட் ரெனான், இங்கிலாந்தில் பிரடரிக்… Read More நேர்காணல் – 4

நேர்காணல் – 3

1.1.1996 யதி தன் அறைக்கு எங்களை வரச் சொன்னார்.  சிறிய அறை.  அதன் ஒருபக்கச் சுவர் விரிந்த மலைச்சரிவைப் பார்க்கத் திறக்கக்கூடியது  இரண்டு கணினிகள்.  விசாலமான பெரிய மேஜை.  அதன்மீது எழுதுபொருட்கள்.  கலையழகுமிக்க சீசாக்கள்.  அறையின் இரு சுவர்களிலும் நூல்களின் அடுக்குகள்.  சுவர்களில் நடராஜ குரு, ரமணர், நித்யானந்தர் முதலியவர்களின் உருவப்படங்கள்.  தாகூரின் புகைப்படம். கவிதைக்கும் மொழிக்கும் இடையேயான உறவு என்ன?  கவிதை மொழியின் ஒரு விளைவு மட்டும்தானா? கனவுக்கு மொழி இல்லையே.  கனவில் கவிதையில்லையா?  அதன்… Read More நேர்காணல் – 3

நேர்காணல் – 2

1.1.1996 நீங்கள் இலக்கியத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? உண்மை என்று அகம் எதை அறிகிறதோ அதில் எவ்வித சமரசமும் இல்லாமலிருப்பவனே பெரிய படைப்பாளி.  முன்தீர்மானங்களும், சூழல் சார்ந்த மன மயக்கங்களும், நிர்பந்தங்களும், அச்சமும், சுயநலமும் படைப்பாளியை தன் அக உண்மையை நீர்த்துப்போக விடும்படி வற்புறுத்துகின்றன.  கோட்பாடுகள், தத்துவச் சட்டகங்கள் அவனுக்குத் தடைகளாகின்றன.  தன் சொந்த அனுபவங்களின் விளைவான முன் தீர்மானங்களும், தன் முந்தைய படைப்பு வழியாக அடைந்த அறிவின் பாரமும் பெரிய படைப்பாளிகளைக்கூட வழி தவறச் செய்துள்ளன.  குமாரன்… Read More நேர்காணல் – 2

நடராஜ குருவும் நானும் – 6

அதற்கடுத்த நாள் சென்னையிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது.  உடனடியாக விவேகானந்தா கல்லூரியின் தத்துவத் துறையில் விரிவுரையாளராகச் சேரும்படி கல்லூரியின் மேலாளர் அனுப்பிய தந்தி அது.  குரு மிகவும் மகிழ்ந்துபோனார்.  இம்முறையும் தனது இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்தார்.  சென்னைக்குப் போவதற்கு முன் உடல்நலமில்லாமல் இருந்த என் தந்தையைப் பார்க்கச் சென்றேன்.  பிச்சைக்காரனைப் போலல்லாமல் நான் எப்பொழும் நன்றாக உடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  அதற்காக விலையுயர்ந்த துணியை வாங்கினார்.  ஆனால் அதைத் தைப்பதற்கு நேரம்… Read More நடராஜ குருவும் நானும் – 6

நடராஜ குருவும் நானும் – 5

அதன் எல்லா வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை பராமரித்து வரும் அறுபடா குரு-சிஷ்ய பாரம்பர்யத்தை குரு மிகவும் உயர்வானதாகக் கருதினார்.  ஜான் ஸ்பியர்ஸ் எப்போதும் திருச்சபையை வெறுப்பவர்.  ஆதலால், குரு கத்தோலிக்க திருச்சபையைப் புகழும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து சூடான விவாதம் நிகழும்.  ஜானின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குருவை எப்போதுமே சீண்டியதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன்.  ஜான் சமநிலைக்குத் திரும்பிய பின்னர் குரு திரும்பவும் விவாதத்தைத் தொடர்ந்து தன் கருத்தை தெளிவாக விளக்குவார்.  ஜானுக்கும் குருவுக்கும்… Read More நடராஜ குருவும் நானும் – 5

நேர்காணல் – 1

31.12.95 காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது.  மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார்.  விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும்.  யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.  தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன.  காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப்… Read More நேர்காணல் – 1

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 4

குருகுலம் வெளியிட்டு வந்த இதழில் ‘பாலர் உலகம்’ என்ற ஒரு பகுதியை ஆரம்பித்தேன்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் பலவகைப்பட்ட ஊர்களுக்கும் சென்று சிறுவர் குழுக்களை ஒழுங்கமைத்தேன்.  ஒவ்வொரு குழுவைப் பற்றிய அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் குழந்தைகளுடன் தொடர்பை விடாமல் இருந்தேன். 1954 வாக்கில் என்னோடு தொடர்பு வைத்திருந்த சிலர் இன்னும் என்னுடைய நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுடைய வளர்ச்சி, கல்வி, திருமணம், பணி, பிறகு அவர்களின் குழந்தைகள் என்று எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்.  நான் என்னுடைய குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு… Read More என் வாழ்க்கைக் குறிப்புகள் – 4

நடராஜ குருவும் நானும் – 4

நாராயண குருவுக்குப் பின் சிவகிரி மடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க இருந்த சுவாமி போதானந்தருக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது நடராஜ குருவுக்கு நாராயண குரு இட்ட கடைசி பணிகளில் ஒன்று.  ஆனால், நாராயண குருவின் மகாசமாதிக்குப் பின் மூன்றே நாட்களில் சுவாமி போதானந்தா மறைந்தார்.  அவரது இடத்திற்கு சுவாமி அச்யுதானந்தா வந்தார். இதெல்லாம் நிகழ்ந்தபோது நடராஜ குரு ஐரோப்பாவில் இருந்தார். ஐந்து வருடங்கள் அங்கிருந்த அவர், 1933-இல் வர்க்கலைக்குத் திரும்பினார்.  சிவகிரி உயர்நிலைப்பள்ளியில் அவரது பதவி… Read More நடராஜ குருவும் நானும் – 4