ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

இருளில் இருப்பவனே யார் நீ? என்றொருவன் கேட்க – நீயும் அவனிடம் ‘நீ யார்? என்கிறாய் இரண்டிற்கும் விடை ஒன்றே!                     (ஆத்மோபதேச சதகம் – பாடல் 10) கண்களை மூடிக்கொண்டு உங்கள் இருப்பை அகத்திலிருந்து நோக்க முயல்வீர்களேயானால் உங்கள் உடலின் எல்லை உண்மையில் எங்கு முடிகிறது  என்பதை அறிவது எளிதல்ல. இங்குமங்குமாக சில மங்கலான உணர்வுகள் தோன்றலாம்.  ஆனால் கண்களை மூடியபடி உங்கள் மண்டையோட்டின்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 9

பூத்துக்குலுங்கும் கொடியொன்று  இருபுறமும்  படர்ந்துயர்ந்துமேவும்  தருவினடியில்  தவத்திலமர்ந்தோனை நரகம்  அண்டாது – எண்ணுவாய்!                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல்  9) இதற்கு முந்தைய பாடலிலும் மரம் பற்றிய குறிப்பு வந்தது.  அதில் ஐவகை பழங்கள் இருந்தன.… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 9

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

ஒளிமுதலாய பழமைந்தும் உண்டு நாறும் குழலில் புகுந்து மாறிமாறியாடும் கிளிகளைந்தையும் வீழ்த்தி வெளியுருவையேந்தி அகம் விளங்கிடவேண்டும் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 8) ஆத்மோபதேச சதகத்திற்கு அறிமுகம் போல் அமைந்துள்ள முதல் பத்து பாடல்களில் எட்டாவது மிகவும் முக்கியமானது. இதில், நிமித்தவியல் (teleological) இலக்குடன் ஓர் இருத்தலியல் (ontological) மதிப்பீடு செய்யப்படுகிறது. அழகியலும் அறவியலும் மெய்விளக்கவியலுடன் இணைகின்றன. அத்துடன், நூலின் ஒட்டுமொத்த அமைப்புக்கும் மாதிரியாக விளங்குகிறது இப்பாடல். மனிதன் அடையும் இன்பதுன்பங்களின் ரகசியத்தை விளக்கும் உள உணர்ச்சியின்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

நடராஜ குருவும் நானும் – 15

சென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார்.  கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர்.  தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர்.  ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின்  பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார்.  ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா… Read More நடராஜ குருவும் நானும் – 15

நடராஜ குருவும் நானும் – 14

மத்திய அமைச்சர் திரு குல்சாரிலால் நந்தா இந்தியாவில் உள்ள சன்னியாசிகளை எல்லாம் பாரத் சாது சமாஜ் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க எண்ணினார்.  தயங்காமல் அவர் விரித்த வலையில் வீழ்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கான அவரது செயலராக பொறுப்பேற்றேன். அத்தகைய அமைப்புகளின் அரசியல் உள்ளோட்டங்கள் குறித்து என்னை எச்சரித்த குரு பெரும்பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக நான் ஆகிவிடக்கூடாது என்றார். பம்பாய்க்கு வந்து தானே எல்லாவற்றையும் நேரில் காணவிரும்பினார்.  பம்பாயில் நாராயணகுருவை பின்பற்றிய சிலர் ஒரு சங்கத்தை அமைத்திருந்தனர். … Read More நடராஜ குருவும் நானும் – 14

வேண்டுதல்கள் – 8

கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி   தானாடாமல் ஆட்டுவிப்பவன் இறைவன் கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி படைப்புச் செயல்களில் எல்லாம் நளினமாய் இருப்பவன் என்றாலும் என் அகத்தை சுழற்றி முறுக்கும் நீயே எனை ஆட்டுவிப்பவன் பொல்லாத கற்பனைகளைத் தூண்டும் கண்ணுக்குத் தெரியாத ஒளி நீ வாழ்வின் மணத்தை நுகர்வதற்கு  ஒரே காரணம் நீ எவ்வகையிலும் எங்கும் இருந்துகொண்டே எல்லாவற்றிலிருந்தும் விலகியிருக்கும் ரகசியத்தை உன்னிடமிருந்துதான் நான் கற்க வேண்டும்  

வேண்டுதல்கள் – 7

பற்றின்மை தரும் மெய்யறிவு என்னகத்தை அலைக்கழிக்கும் காதலின் கங்கு கசப்பின் உச்சத்தில் தாக்கும் காழ்ப்பின் சூறாவளி – என் விருப்புவெறுப்பெதையும் கவனியாமல் முரண்களின் முன் மௌனமாய் அமர்ந்திருக்கிறாய்!   உன் சமநிலையின் ரகசியத்தை கற்கவிழைகிறேன் நான்!

வேண்டுதல்கள் – 6

அன்புகலந்த நம்பிக்கை இவ்வுலகெனும் பயங்கரப் பள்ளத்தாக்கில் விழிவிரிந்த வியப்புடன் சுற்றிவருகிறாய்! பேரரசர்கள்கூட  பாதுகாப்புணர்வில்லாமல் மனச்சிதைவில் நெளியும்போது எளிய நம்பிக்கையுடன் சுகமாய் உறங்குகிறாய்!   அன்புகலந்த நம்பிக்கையின் ரகசியத்தை உன்னிடமிருந்து கற்கவேண்டும்!

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்! அவ்வாறிருப்பது கைகூடாதென்றால் ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும் முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்! (ஆத்மோபதேச சதகம் – பாடல் 7) முதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா? மும்மை அடிப்படைப்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள்

That Alone: The Core of Wisdom (நாராயண குருவின் ஆத்மோபதேச சதகம் மீதான சிந்தனைகள்) அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம் (1) ஆன்மாவும் புலன்களும் உடலும் தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலை பரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின் திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம் (2) புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள்