ஆன்மாவிற்கு நூறு பாடல்கள்
That Alone: The Core of Wisdom (நாராயண குருவின் ஆத்மோபதேச சதகம் மீதான சிந்தனைகள்) அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம் (1) ஆன்மாவும் புலன்களும் உடலும் தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலை பரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின் திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம் (2) புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள்