ஶ்ரீசக்ர தியானம் – 1
அம் காமாகர்ஷிணீ படைக்கும் தொழிலை பேரன்புடன் நிகழ்த்துபவளே! அன்னையே, ஒத்திசைவு விதியென தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும், பரமேஶ்வரன் எனப்படுவதுமான முழுமுதலுக்கும் தொடர்ந்து எய்தப்பெறும் நலன்களுக்கும் இடையிலான பிணைப்பை உன்னில் நான் காண்கிறேன். நலன்கள் ஒவ்வொன்றும் உன் மனம் மயக்கும் தொடுகையால் அருளப்படுகின்றன. உன் தொடுகை கழி நிகழ் எதிர்வென்னும் முக்காலங்களையும் எழில்பெறச் செய்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் உருவங்களை உயிர்ப்பூட்டும் மீ ஆன்மாவே, பேரொளியே, உன் தாமரையடிகளுக்கு என் வணக்கம். நான் அப்பாவிதான், அறிவிலிதான் என்றாலும் பேரிறை மேல் நீ… Read More ஶ்ரீசக்ர தியானம் – 1