ஶ்ரீசக்ர தியானம் – 11
ரும் ரஸாகர்ஷிணீ அன்னையே, அனைத்திலும் நீ களிப்படைகிறாய். அனைத்துயிர்களின் களிப்பெனவே திகழ்கிறாய் நீ. மையப் புள்ளியிலிருந்து மெய்நகர்வின்றி மாயமான முறையில் நகர்கிறாய். அதன் வழியே கோடுகளையும் முக்கோணங்களையும் வட்டங்களையும் ஏற்படுத்துகிறாய். எளியதும் சிக்கலானதுமான அனைத்து வடிவத் தோற்றங்களையும் உண்டாக்குகிறாய். உனது எண்ணற்ற மண்டலங்களே இந்தப் பேரண்டமெனத் திகழ்கின்றன. எனது மொழி கொண்டு நான் உன்னை போற்றுகையில் நான்கு சிவதத்துவங்களின், ஐந்து சக்திதத்துவங்களின் சாரமெனவே உன்னை காண்கிறேன். அன்னையின் மடியிலிருக்கையில் குழந்தை மெய்மறந்து கிடக்கிறது. அந்த மகிழ்வு அச்சமின்மையில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 11