ஶ்ரீசக்ர தியானம் – 35
டம் ஸர்வார்த*ஸாத*னீ அன்னையே, நோக்கங்களை மெய்ப்படச் செய்பவளே, நீ அமைந்த மையப்புள்ளியை (பிந்துஸ்தானம்) தியானிக்கையில், நான் என் புருவமத்தியில் உள்ள ஆஞாவில் நிலைகொள்கிறேன். அங்கிருந்து மனம் விசாரணைகளாக குமிழ்ப்பதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து எண்ண ஓடைகள் எழுகின்றன. இயல்பிலேயே நீ இசைத் துடிப்புகளாக (நாதரூபிணி) இருக்கின்றாய். அப்பாலிருக்கும் விண்வெளியிலிருந்து (பராகாஶம்) நீ தோன்றுகிறாய் என்று சொல்லப்பட்டாலும், அண்டம் முழுதும் நீ பரவிக் கடந்து செல்கிறாய். ஒவ்வொரு மூலக்கூறிலிருந்தும் கலைநயமிக்க படைப்புகளை உருவாக்குகிறாய். அவற்றிலுள்ள போற்றுதற்குரிய பேரழகு வெளிப்படும்படி,… Read More ஶ்ரீசக்ர தியானம் – 35