ஶ்ரீசக்ர தியானம் – 49
ௐ இங்கு-இப்போது நாங்கள் காலூன்றி நிற்க ஒரு நிலத்தை நல்கியுள்ளாய். செயல்படுவதற்கு ஒரு களத்தையும், எய்துவதற்கு ஒரு இலக்கையும் அளித்துள்ளாய். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கென தனிப்பட்ட வடிவமும், சிறப்புப் பெயரும் கொண்ட தனி அடையாளம் ஒன்றுள்ளது. ஒரு ஆசிரியரைப் போல, எதிர்பார்ப்போடு எமது கண்களை பார்க்கிறாய். உனது கட்டளைகளை சிறிதும் பிறழாமல் நாங்கள் நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கிறாய். எமக்கு வழிகாட்டும் விண்மீனை உன் கண்ணில் காண்கிறோம். எமக்கொரு வாய்பாட்டுச் சுவடி போலிருக்கிறாய் நீ. நாங்கள் தவறிழைக்க விரும்பவில்லை. எனவே… Read More ஶ்ரீசக்ர தியானம் – 49