ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47

ஒருமதமாகுவதின்னுரப்பதெல்லா வருமிது வாதிகளாருமோர்க்குவீல; பரமதவாதமொழிஞ்ஞ பண்டிதன்மா ரறியுமிதின்றெ ரஹஸ்யமிங்கஶேஷம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 47) எல்லோரும் சொல்வது ஒருமதமாதலே தம்மதம்பரப்புவோர் இதை எண்ணுவதில்லையே பிறர்மதம் மறுக்காத அறிஞர் இம்மறையை அறிவர் குறைவொன்றுமின்றியே * இப்பாடலின் முதன்மைச் சொல் ரகசியம்-மறை என்பது. அறிவர் அறிந்ததும், மதம் பரப்புவோர் மறப்பதுமான மந்தணம் ஒன்றுள்ளது என்கிறார் குரு. பதஞ்சலியின் யோக சூத்திரம் அகமல்லாததை அகமென எண்ணுவதே அறியாமை என்கிறது. இது பலவகைகளில் வெளிப்படலாம்: மனநலம் பிறழலாம்; இன்பநாட்டத்தில் தீவிரம் ஏற்படலாம்;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 47

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

ஒளிமுதலாய பழமைந்தும் உண்டு நாறும் குழலில் புகுந்து மாறிமாறியாடும் கிளிகளைந்தையும் வீழ்த்தி வெளியுருவையேந்தி அகம் விளங்கிடவேண்டும் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 8) ஆத்மோபதேச சதகத்திற்கு அறிமுகம் போல் அமைந்துள்ள முதல் பத்து பாடல்களில் எட்டாவது மிகவும் முக்கியமானது. இதில், நிமித்தவியல் (teleological) இலக்குடன் ஓர் இருத்தலியல் (ontological) மதிப்பீடு செய்யப்படுகிறது. அழகியலும் அறவியலும் மெய்விளக்கவியலுடன் இணைகின்றன. அத்துடன், நூலின் ஒட்டுமொத்த அமைப்புக்கும் மாதிரியாக விளங்குகிறது இப்பாடல். மனிதன் அடையும் இன்பதுன்பங்களின் ரகசியத்தை விளக்கும் உள உணர்ச்சியின்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8