மொழியும் பிரபஞ்சமும் – 1

சரித்திரத்தின் புலர்காலையில் எழுந்த பறவைக் குரல் ரிக்வேதம்.  அது இசையானபோது சாமம் ஆயிற்று.  சாம வேதத்தின் துணை நூலான பிரகதாரண்யக உபநிடதம் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிப் பேசும் இடம் மொழியைப் பற்றிய புராதன இந்தியச் சிந்தனையை அறிந்துகொள்வதற்குரிய சிறந்த தொடக்கப்புள்ளியாகும். பிரகதாரண்யக உபநிடதம் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுகிறது.  அந்த சூனியத்தின் பிரதிநிதியான மரணத்தைப் பற்றி விளக்குகிறது.  நிலம், நீர், வாயு, அக்னி, வானம் எனும் ஐம்பெரும் பருக்கள் உருவானதை சித்தரிக்கிறது.  அவற்றிலிருந்து பிரஜாபதி… Read More மொழியும் பிரபஞ்சமும் – 1

இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்

வரலாற்றின் தொடக்கம் முதல் கதை, கவிதை, இலக்கியங்கள் உள்ளன.  மத்திய தரைக்கடல் நாடுகளான சுமேரியா, பைசான்டியா போன்றவற்றிலும் மேலும் மேற்குப் பக்கமாக நகர்கையில் ஸ்லாவிக், ஜெர்மன் நாடுகளிலும் அதிபுராதன இலக்கியப் படைப்புகள் உண்டு.  ஆனால் இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முன்பு எழுதப்பட்ட சரியான இலக்கியப் படைப்புகள் எவையும் நமக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை.  காலத்தால் மிகப் புராதனமான ரிக், யஜுர் வேதங்களும் பிறவும் இலக்கியங்களல்ல.  புராதன வாழ்வின் அடிப்படைகளாக அமைந்த தோத்திரங்கள், வழிபாட்டு முறைகளைப் பற்றிய விதிகள், சடங்குகளைப்… Read More இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்

நேர்காணல் – 10

22.6.1996 நான் ஒரு கதை போல சொல்வதுண்டு.  ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார்.  மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார்.  அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது.  எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன்.  பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன.  என்ன நடந்தது என்று விசாரித்தேன்.  தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு… Read More நேர்காணல் – 10