ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12
தோலுமெலும்பும் மலமும் துன்பம்தரும் நாற்றங்களுமேந்தும் அகந்தையை காண்க அழியும் இதுவேறு அழிந்து முழுமையாகும் பெருமகந்தை வந்திடா வரம் அருள்க ஆத்மோபதேச சதகம் – பாடல் 12 முந்தைய பாடல்களில், அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு பண்புக்கூறுகளை விவரித்தோம். ஒன்று நோக்கிநிற்கும் அகம். மற்றொன்று உடற்செயல்பாடுகளிலும் பல்வேறு மனமாற்றங்களிலும் சிக்கிகொண்டுள்ள நனவு. ஒருவன் தன் மெய்மையை கண்டெடுக்க முயலுகையில் அவன் தனது மெய்சார் அடையாளத்திலோ ஆன்மீக அடையாளத்திலோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் ‘நான்’ எனும் எண்ணம் வரும்போது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12