இருப்பும் அறிதலும் – 1

மனிதனின் அறிவும், விருப்பமும் எப்படி இருந்தாலும் அவை பொருண்மைகளை எவ்வகையிலும் பாதிப்பதில்லை; அனைத்து அகவய இயக்கங்களிலிருந்தும் விலகி பிரபஞ்சப் பொருண்மை சுதந்திரமாக இருக்கிறது, இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்து மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  அறிதலுக்கு வெளியே என்னதான் இருந்தாலும் அவற்றின் இருப்பு அறிதலினூடாகவே உருவாகிறது.  இருப்பும் அறிதலும் வேறு வேறல்ல. எனவே அந்தரங்க அறிதலும் பொருண்மையும் ஒன்றுதான் என்று கூறும் ஒரு தத்துவ தரிசனமும் வெகு காலமாக மேலை, கீழை… Read More இருப்பும் அறிதலும் – 1

இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்

வரலாற்றின் தொடக்கம் முதல் கதை, கவிதை, இலக்கியங்கள் உள்ளன.  மத்திய தரைக்கடல் நாடுகளான சுமேரியா, பைசான்டியா போன்றவற்றிலும் மேலும் மேற்குப் பக்கமாக நகர்கையில் ஸ்லாவிக், ஜெர்மன் நாடுகளிலும் அதிபுராதன இலக்கியப் படைப்புகள் உண்டு.  ஆனால் இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முன்பு எழுதப்பட்ட சரியான இலக்கியப் படைப்புகள் எவையும் நமக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை.  காலத்தால் மிகப் புராதனமான ரிக், யஜுர் வேதங்களும் பிறவும் இலக்கியங்களல்ல.  புராதன வாழ்வின் அடிப்படைகளாக அமைந்த தோத்திரங்கள், வழிபாட்டு முறைகளைப் பற்றிய விதிகள், சடங்குகளைப்… Read More இந்திய இலக்கிய மரபில் தொல்படிமங்கள்