மொழியும் பிரபஞ்சமும் – 2

வேதத்தினூடாக அடையும் நன்மைகள் உலகியல் சார்ந்தவை.  அவற்றை சம்சாரம் என்று கூறுகிறோம்.  இவை சார்பு நிலையானவை.  இவற்றையெல்லாம் வார்த்தைகளினூடாக மானுடன் அறிகிறான்.  ஆனால் வார்த்தையில் அடங்கியுள்ள வேறு ஒரு ரகசியம் உண்டு.  அதை நாதம் எனலாம்.  மூதாதையர் சொல்லை இணைத்து செய்யுள் உருவாக்கினர்.  வேத மந்திரங்கள் நான்கு வரிகளினாலானவை.  அவற்றை இரண்டிரண்டாகப் பிரித்தால் அவை நான்கு நான்கு எழுத்துக்களாகும்.  அதை ‘அனுஷ்டுப்பு சந்தம்’ என்பர்.  சொல் இவ்வாறு பற்பல சந்தங்களில் நிறுவப்பட்டுள்ளது.  சந்தமொன்றில் நிறுவப்படாத சொல் இல்லை. … Read More மொழியும் பிரபஞ்சமும் – 2

மொழியும் பிரபஞ்சமும் – 1

சரித்திரத்தின் புலர்காலையில் எழுந்த பறவைக் குரல் ரிக்வேதம்.  அது இசையானபோது சாமம் ஆயிற்று.  சாம வேதத்தின் துணை நூலான பிரகதாரண்யக உபநிடதம் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிப் பேசும் இடம் மொழியைப் பற்றிய புராதன இந்தியச் சிந்தனையை அறிந்துகொள்வதற்குரிய சிறந்த தொடக்கப்புள்ளியாகும். பிரகதாரண்யக உபநிடதம் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுகிறது.  அந்த சூனியத்தின் பிரதிநிதியான மரணத்தைப் பற்றி விளக்குகிறது.  நிலம், நீர், வாயு, அக்னி, வானம் எனும் ஐம்பெரும் பருக்கள் உருவானதை சித்தரிக்கிறது.  அவற்றிலிருந்து பிரஜாபதி… Read More மொழியும் பிரபஞ்சமும் – 1

நேர்காணல் – 3

1.1.1996 யதி தன் அறைக்கு எங்களை வரச் சொன்னார்.  சிறிய அறை.  அதன் ஒருபக்கச் சுவர் விரிந்த மலைச்சரிவைப் பார்க்கத் திறக்கக்கூடியது  இரண்டு கணினிகள்.  விசாலமான பெரிய மேஜை.  அதன்மீது எழுதுபொருட்கள்.  கலையழகுமிக்க சீசாக்கள்.  அறையின் இரு சுவர்களிலும் நூல்களின் அடுக்குகள்.  சுவர்களில் நடராஜ குரு, ரமணர், நித்யானந்தர் முதலியவர்களின் உருவப்படங்கள்.  தாகூரின் புகைப்படம். கவிதைக்கும் மொழிக்கும் இடையேயான உறவு என்ன?  கவிதை மொழியின் ஒரு விளைவு மட்டும்தானா? கனவுக்கு மொழி இல்லையே.  கனவில் கவிதையில்லையா?  அதன்… Read More நேர்காணல் – 3