இருப்பும் அறிதலும் – 3

19-ஆம் நூற்றாண்டின் பெளதிகவாத சிந்தனையின் சிறந்த தொகுப்பாக நாம் ஹோல்பாக் (Holback) எழுதிய ‘இயற்கையின் அமைப்பு’ (System of Nature) என்ற நூலைக் கருதலாம்.  இந்நூல் இன்றுகூட ஒரு கிளாசிக் என்ற எண்ணம் எனக்குண்டு.  கருத்துமுதல் வாதத்தை கடுமையாக எதிர்க்கும் ஹோல்பாக் ‘அது ஒருவிதத்தில் அல்லது மற்றொரு விதத்தில் புலன்களுக்குச் சிக்குவது எதுவோ அதுவே பொருள்’ என்று நிர்ணயிக்கிறார்.  அடுத்த தலைமுறையின் முதன்மையான பெளதிகவாத சிந்தனையாளர் லாப்லேஸ் (Laplace) ஆவார். அவர் வழியாகவே பெளதிகவாதம் ஒரு மெய்காண்… Read More இருப்பும் அறிதலும் – 3

இருப்பும் அறிதலும் – 2

மீண்டும் நுண் அலகு இயந்திரவியலுக்கு வருவோம்.  1927-இல் இயற்பியலறிஞர்கள் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸல்ஸ் நகரில் வைத்து ஒரு சர்வதேசக் கருத்தரங்கு நடத்தினார்கள்.  இங்கு நுண்ணலகு இயந்திரவியலின் இயல்புகள் வரையறுக்கப்பட்டன. பிற்பாடு இது கோபன் ஹேகன் விளக்கம் (Copenhagen Theory) என்று அறியப்பட்டது.  பல்வேறு விளக்கங்கள் பிற்பாடு வந்துவிட்டன என்றாலும் இவ்விளக்கமே பொதுவான அங்கீகாரம் உடையதாக உள்ளது.  இதை ஐன்ஸ்டீன் தொடர்ந்து எதிர்த்தார்.  அறியமுடியாமை என்ற முடிவை விஞ்ஞானத்தின் மீது அது சுமத்துகிறது என்றார்.  முற்றிலும் புரியாததாக உள்ள… Read More இருப்பும் அறிதலும் – 2