ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்! அவ்வாறிருப்பது கைகூடாதென்றால் ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும் முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்! (ஆத்மோபதேச சதகம் – பாடல் 7) முதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா? மும்மை அடிப்படைப்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

மொழியும் பிரபஞ்சமும் – 3

நமது சொற்புலனில் ஒலி – ஆனந்தத்தை ஆக்கும் மையம் நம்மில் உள்ள விசுத்தி சக்கரம் ஆகும்.  (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரம், அனாகரம், விசுத்தி, ஆக்ஞை, நாதம், பிந்து, சகஸ்ரம் என்று ஒன்பது சக்தி மையங்கள் நம் உடலில் உள்ளன என்று யோக – தாந்திரீக மரபு உருவகித்துள்ளது).  இந்த விசுத்தி சக்கரம் ஆக்ஞை, அனாகதம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் உள்ளது.  நம் உயிர்மூச்சின் சொல்லுக்குரிய மையம் அது. அதன் ஒலி ‘ஹ’ என்பதாகும்.  தாந்திரீக முறைப்படி பிராணன்… Read More மொழியும் பிரபஞ்சமும் – 3

மொழியும் பிரபஞ்சமும் – 1

சரித்திரத்தின் புலர்காலையில் எழுந்த பறவைக் குரல் ரிக்வேதம்.  அது இசையானபோது சாமம் ஆயிற்று.  சாம வேதத்தின் துணை நூலான பிரகதாரண்யக உபநிடதம் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிப் பேசும் இடம் மொழியைப் பற்றிய புராதன இந்தியச் சிந்தனையை அறிந்துகொள்வதற்குரிய சிறந்த தொடக்கப்புள்ளியாகும். பிரகதாரண்யக உபநிடதம் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுகிறது.  அந்த சூனியத்தின் பிரதிநிதியான மரணத்தைப் பற்றி விளக்குகிறது.  நிலம், நீர், வாயு, அக்னி, வானம் எனும் ஐம்பெரும் பருக்கள் உருவானதை சித்தரிக்கிறது.  அவற்றிலிருந்து பிரஜாபதி… Read More மொழியும் பிரபஞ்சமும் – 1