நேர்காணல் – 5

3.2.1996 சென்ற முறை வந்தபோது இந்தியச் சிந்தனை முறையின் தனித்தன்மை பற்றிச் சொன்னீர்கள்.  நமது தத்துவ மரபிற்கும் மேற்கின் தத்துவ மரபிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? பிலாசபி என்ற சொல்லையோ அதன் உட்பிரிவுகளையோ அடிப்படையாகக் கொண்டு நாம் நமது சிந்தனைகளை ஆராயக்கூடாது.  கீழைச் சிந்தனை முறை அடிப்படையில் வேறு.  துரதிர்ஷ்டவசமாக நமது கல்வித்துறை அடிப்படையில் மேற்கத்தியத் தன்மை கொண்டது.  ஆகவே இன்று மேற்குடனான வித்தியாசம் என்ற அளவிலேயே நாம் நமது சிந்தனையைப் பார்க்க வேண்டும். பிலாசபி… Read More நேர்காணல் – 5

நடராஜ குருவும் நானும் – 6

அதற்கடுத்த நாள் சென்னையிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது.  உடனடியாக விவேகானந்தா கல்லூரியின் தத்துவத் துறையில் விரிவுரையாளராகச் சேரும்படி கல்லூரியின் மேலாளர் அனுப்பிய தந்தி அது.  குரு மிகவும் மகிழ்ந்துபோனார்.  இம்முறையும் தனது இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்தார்.  சென்னைக்குப் போவதற்கு முன் உடல்நலமில்லாமல் இருந்த என் தந்தையைப் பார்க்கச் சென்றேன்.  பிச்சைக்காரனைப் போலல்லாமல் நான் எப்பொழும் நன்றாக உடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  அதற்காக விலையுயர்ந்த துணியை வாங்கினார்.  ஆனால் அதைத் தைப்பதற்கு நேரம்… Read More நடராஜ குருவும் நானும் – 6

நடராஜ குருவும் நானும் – 5

அதன் எல்லா வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை பராமரித்து வரும் அறுபடா குரு-சிஷ்ய பாரம்பர்யத்தை குரு மிகவும் உயர்வானதாகக் கருதினார்.  ஜான் ஸ்பியர்ஸ் எப்போதும் திருச்சபையை வெறுப்பவர்.  ஆதலால், குரு கத்தோலிக்க திருச்சபையைப் புகழும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து சூடான விவாதம் நிகழும்.  ஜானின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குருவை எப்போதுமே சீண்டியதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன்.  ஜான் சமநிலைக்குத் திரும்பிய பின்னர் குரு திரும்பவும் விவாதத்தைத் தொடர்ந்து தன் கருத்தை தெளிவாக விளக்குவார்.  ஜானுக்கும் குருவுக்கும்… Read More நடராஜ குருவும் நானும் – 5

நேர்காணல் – 1

31.12.95 காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது.  மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார்.  விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும்.  யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.  தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன.  காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப்… Read More நேர்காணல் – 1

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 4

குருகுலம் வெளியிட்டு வந்த இதழில் ‘பாலர் உலகம்’ என்ற ஒரு பகுதியை ஆரம்பித்தேன்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் பலவகைப்பட்ட ஊர்களுக்கும் சென்று சிறுவர் குழுக்களை ஒழுங்கமைத்தேன்.  ஒவ்வொரு குழுவைப் பற்றிய அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் குழந்தைகளுடன் தொடர்பை விடாமல் இருந்தேன். 1954 வாக்கில் என்னோடு தொடர்பு வைத்திருந்த சிலர் இன்னும் என்னுடைய நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுடைய வளர்ச்சி, கல்வி, திருமணம், பணி, பிறகு அவர்களின் குழந்தைகள் என்று எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்.  நான் என்னுடைய குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு… Read More என் வாழ்க்கைக் குறிப்புகள் – 4

நடராஜ குருவும் நானும் – 4

நாராயண குருவுக்குப் பின் சிவகிரி மடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க இருந்த சுவாமி போதானந்தருக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது நடராஜ குருவுக்கு நாராயண குரு இட்ட கடைசி பணிகளில் ஒன்று.  ஆனால், நாராயண குருவின் மகாசமாதிக்குப் பின் மூன்றே நாட்களில் சுவாமி போதானந்தா மறைந்தார்.  அவரது இடத்திற்கு சுவாமி அச்யுதானந்தா வந்தார். இதெல்லாம் நிகழ்ந்தபோது நடராஜ குரு ஐரோப்பாவில் இருந்தார். ஐந்து வருடங்கள் அங்கிருந்த அவர், 1933-இல் வர்க்கலைக்குத் திரும்பினார்.  சிவகிரி உயர்நிலைப்பள்ளியில் அவரது பதவி… Read More நடராஜ குருவும் நானும் – 4

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 3

யதி சென்னை விவேகானந்தா கல்லூரியில்   தத்துவ ஆசிரியராக நியமிக்கப்பட்ட பிறகு  கல்லூரி விடுதியில்  அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்: விவேகானந்தா கல்லூரி விடுதியின் தலைவராக இருந்த சுவாமி நிஷ்ரேயசானந்தா துணிச்சலான மனநிலையும், உயரிய கொள்கைகளும் உடையவர்.  ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் மற்றும் ஃபிரெஞ்ச் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை உடையவர்.  எல்லோருக்கும் உதவும் அன்பான நண்பர்.  அவருடைய உடலும் மனமும் மிகுந்த ஒழுங்குக்கு உட்பட்டிருந்ததால் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கற்றுத் தருவதில் அவர் நம்பிக்கைக்குரிய ஆசிரியராக இருந்தார்.   என்னை அறிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர் என்னை… Read More என் வாழ்க்கைக் குறிப்புகள் – 3

நடராஜ குருவும் நானும் – 3

கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரி மேலாளர் திரு ஆர். சங்கரிடமிருந்து  எனக்கு ஒரு கடிதம் வந்தது.  அக்கடிதத்தில், உளவியல் துறையில் விரிவுரையாளர் பதவி எனக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேலையை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் என்னிடம் அணிவதற்கு சட்டையே இருக்கவில்லை.  எனக்கு வேலை கிடைத்த அன்றே குரு வந்தார்.  தன்னிடமிருந்த இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைத்தார்.  அந்நாட்களில் நான் பருமனாக இருக்கவில்லை.  ஆனால் குரு பருமனாக இருந்தார்.  அவர் குள்ளம், நான் உயரம். … Read More நடராஜ குருவும் நானும் – 3

நடராஜ குருவும் நானும் – 2

நடராஜ குரு ஒரு வருடம் ஐரோப்பாவிலும், ஒரு வருடம் அமெரிக்காவிலும் இருந்து விட்டுத் திரும்பிய போது எல்லா இடங்களிலும் அவருக்கு ஒரு ‘ஹீரோ’வைப்போன்ற பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  மைசூரில் வளர்ந்தவராதலால் அவரால் சரளமாக மலையாளத்தில் பேசமுடியாது.  எனவே,அவரது உரைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்காக அவருடன் நான் செல்ல வேண்டும் என அவர் விரும்பினார்.  மகான்களை தூரத்திலிருந்து மட்டுமே வழிபட முடியும் என்பதை நான் விரைவில் உணர்ந்தேன்.  1946-இல் காந்தியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏற்கனவே எனக்கு… Read More நடராஜ குருவும் நானும் – 2

நடராஜ குருவும் நானும் – 1

நடராஜ குருவைப் பற்றி எண்ணும்போதெல்லாம், 1938-இல் ஊட்டி ஃபெர்ன்ஹில் குருகுலத்தில் குருவை நான் முதலில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. அவர் ஏகாந்தமாய் இருந்தார். காலை ப்ரார்த்தனைக்குப் பின்னர் என்னையும் என்னை அழைத்துச் சென்றிருந்த நண்பரையும் மதிய உணவுக்கு அழைத்திருந்தார். மிகவும் எளிய உணவு. பின்னர், வெங்காயத்தோல் தாளில் அச்சிடப்பட்டிருந்த நாராயண குருகுலம் பற்றிய கையேட்டை எனக்களித்தார். அப்போது குருகுலத்தில் ஒரு வகுப்பை நடத்தி வந்தார் அவர். பத்து ரூபாய் மாதக் கட்டணம். தங்குவதற்கும் உணவுக்குமான கட்டணம் எதுவும்… Read More நடராஜ குருவும் நானும் – 1