ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

ஒருவனு நல்லதுமந்யனல்லலும் சேர் ப்பொரு தொழிலாத்மவிரோதியோர்த்திடேணம் பரனு பரம் பரிதாபமேகிடுன்னோ ரெரி நரகாப்தியில் வீணெரிஞ்ஞிடுன்னு (ஆத்மோபதேச சதகம் – பாடல் 25) நன்மை ஒருவருக்கும் தீமை பிறருக்கும்  பயக்குமெச் செயலும் அகத்திற்கெதிரியென அறியவேண்டும் பிறர்க்குப் பெருவலி அளிப்போர் யாரும் நரகெனும் எரிகடலில் வீழ்ந்தெரிவார் திண்ணம் முந்தைய பாடலில் அனைவரின் மகிழ்ச்சிக்குமான நேர்மறை வழியைக் கூறிய நாராயண குரு இங்கே தீமையைக் கொணரும் எதிர்மறை வழியை வைத்து சமன்செய்கிறார். வரலாறு நெடுக, புனிதர்களும், மெய்யியலாளரும், மீட்பர்களும், ஆசான்களும் என… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

நடராஜ குருவும் நானும் – 15

சென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார்.  கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர்.  தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர்.  ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின்  பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார்.  ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா… Read More நடராஜ குருவும் நானும் – 15

நடராஜ குருவும் நானும் – 14

மத்திய அமைச்சர் திரு குல்சாரிலால் நந்தா இந்தியாவில் உள்ள சன்னியாசிகளை எல்லாம் பாரத் சாது சமாஜ் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க எண்ணினார்.  தயங்காமல் அவர் விரித்த வலையில் வீழ்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கான அவரது செயலராக பொறுப்பேற்றேன். அத்தகைய அமைப்புகளின் அரசியல் உள்ளோட்டங்கள் குறித்து என்னை எச்சரித்த குரு பெரும்பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக நான் ஆகிவிடக்கூடாது என்றார். பம்பாய்க்கு வந்து தானே எல்லாவற்றையும் நேரில் காணவிரும்பினார்.  பம்பாயில் நாராயணகுருவை பின்பற்றிய சிலர் ஒரு சங்கத்தை அமைத்திருந்தனர். … Read More நடராஜ குருவும் நானும் – 14

நடராஜ குருவும் நானும் – 13

சோமனஹள்ளிக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு நானிழந்திருந்த சொற்குவையை மீளப்பெற்றேன்.  பேசவேண்டும் என்ற விருப்பும் கூடிவந்தது.  அதன்பின்னர், அனேகமாக ஒவ்வொருநாளும் நகரத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டேன்.  அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது.  அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார்.  அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.  தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார்.  அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம்… Read More நடராஜ குருவும் நானும் – 13

பொருந்தாத மகுடம்

பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன்.  முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன்.  கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன்.  விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன்.  ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு… Read More பொருந்தாத மகுடம்

நடராஜ குருவும் நானும் – 12

குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார்.  அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம்.  குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது.  சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி.  வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு.  என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம்.  எங்களைப்… Read More நடராஜ குருவும் நானும் – 12

நோயை எதிர்கொள்ளல்

அதிர்ஷ்டம் தரும் திடீர் வாய்ப்பு இன்று அதிர்ஷ்டம் தரும் ஒரு திடீர் வாய்ப்பு பற்றி பேச விரும்புகிறேன்.  மக்கள் பொதுவாக மூன்று வகையான நோய்கள் குறித்து அச்சப்படுகிறார்கள்.  இதயநோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம்.  ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் பிழைப்பாரா என்று சொல்ல முடியாது.  மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதோ என்றால் அவர் பிழைத்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சிறிது காலமே உயிர் வாழக்கூடும்.  ஆனால், மாரடைப்பு எப்படி வந்தது என்பது… Read More நோயை எதிர்கொள்ளல்

நடராஜ குருவும் நானும் – 11

சரியாக நாற்பத்தியோராம் நாள் குரு திரும்ப வந்தார்.  குரங்குகளால் நான் பட்ட கஷ்டங்களை ஏற்கனவே அவருக்கு நான் எழுதியிருந்தேன்.  இதற்காக அவர் தன்னுடன் எடுத்துவந்த வெடிகளை நாங்கள் வெடிக்கும்போது, குரு தனது கைத்தடியை துப்பாக்கி போல் குரங்குகளை நோக்கி நீட்டுவார்.  இந்த தந்திரம் நல்ல பலனைத் தந்தது.  நாங்கள் துப்பாக்கி ஏந்தியவர்கள் என குரங்குகள் எண்ணின.  ஆனால், குருவின் கைத்தடிக்கும் வெடிக்கும் சம்பந்தம் இல்லை என்பது, சில நாட்களிலேயே குரங்குத்தலைவர்களுக்குத் தெரிந்து போனது.  நம் தந்திரத்தை மாற்றி… Read More நடராஜ குருவும் நானும் – 11

நடராஜ குருவும் நானும் – 9

அங்கிருந்து சென்று மெளனத்தில் ஆழ்வது என்ற உறுதியுடன் எனது பொருட்களை எல்லாம் மூட்டைகட்டிக் கொண்டு, குருவை வணங்கி விடைபெறும் எண்ணத்துடன் முன் வாயிலை அடைந்தேன்.  அப்போது, நான் ஏற்கனவே வெறுப்பு கொண்டிருந்த மனிதனை அழைத்து, ‘இவன் என்னுடைய புத்தகங்களை எல்லாம் திருடிக்கொண்டு ஓடப்பார்க்கிறான்.  போலீஸைக் கூப்பிடு” என்றார் குரு.  எனக்கு அளவில்லா கோபம் வந்தது.  என் பைகளை தரையில் வீசி எறிந்து, “இங்கிருந்து எதையும் நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை! எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.  அதற்கு குரு,… Read More நடராஜ குருவும் நானும் – 9

நடராஜ குருவும் நானும் – 7

இதற்கிடையில், கேரளாவில் ராமகிருஷ்ண மடத்தையும் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவிய சுவாமி ஆகமானந்தா என் கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னை ஒரு கருங்காலி என்றும், கல்லூரியை அழிக்கும் நோக்குடன், பிராமணர்களை வெறுக்கும் டாக்டர் நடராஜனால் நான் அங்கு அனுப்பப்பட்டேன் என்றும் எழுதியிருந்தார்.  இக்கடிதம் சுவாமி நிஶ்ரேயஸானந்தாவிடம் ரகசியமாகக் காட்டப்பட்டது.  அவர் என்னிடம் அதைக் காட்டினார்.  இக்கடிதத்தால், ‘ராமகிருஷ்ண மடத்தில் ஜாதி வெறி இருப்பதாக குரு நினைப்பது தவறோ?’ என்ற என் சந்தேகம் முற்றிலும்… Read More நடராஜ குருவும் நானும் – 7