ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

அரநொடியாதியராளியார்ன்னிடும் தே ருருளதிலேரியுருண்டிடுன்னு லோகம்; அறிவிலநாதியதாய் நடன்னிடும் தன் திருவிளயாடலிதென்னறிஞ்ஞிடேணம்                                                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 34) அரைநொடி முதலாய ஆரக்கால்கள்கொண்ட தேருருளைகளின் மேலமர்ந்து உருளும் உலகு அறிவிலெப்போதும் நிகழும் முதலென்பதில்லா திருவிளையாடல் இது * நாம் உணரும் உலகு பற்றி எண்ணிப்பார்க்கும்போது, நம்மைச் சுற்றிலும் பெருவெளி ஒன்றிருப்பது நமக்குத் தெரிகிறது. ஒரு வெளியின் மையத்திலேயே நாம் எப்போதும் இருக்கிறோம். அங்கிருந்து எத்திசையில் நோக்கினாலும் தொடுவானம் ஒரே தொலைவில்தான் இருக்கும். தொடுவானை நாம் ஒருபோதும் நெருங்க முடியாது;… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 34

இருப்பும் அறிதலும் – 2

மீண்டும் நுண் அலகு இயந்திரவியலுக்கு வருவோம்.  1927-இல் இயற்பியலறிஞர்கள் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸல்ஸ் நகரில் வைத்து ஒரு சர்வதேசக் கருத்தரங்கு நடத்தினார்கள்.  இங்கு நுண்ணலகு இயந்திரவியலின் இயல்புகள் வரையறுக்கப்பட்டன. பிற்பாடு இது கோபன் ஹேகன் விளக்கம் (Copenhagen Theory) என்று அறியப்பட்டது.  பல்வேறு விளக்கங்கள் பிற்பாடு வந்துவிட்டன என்றாலும் இவ்விளக்கமே பொதுவான அங்கீகாரம் உடையதாக உள்ளது.  இதை ஐன்ஸ்டீன் தொடர்ந்து எதிர்த்தார்.  அறியமுடியாமை என்ற முடிவை விஞ்ஞானத்தின் மீது அது சுமத்துகிறது என்றார்.  முற்றிலும் புரியாததாக உள்ள… Read More இருப்பும் அறிதலும் – 2

இருப்பும் அறிதலும் – 1

மனிதனின் அறிவும், விருப்பமும் எப்படி இருந்தாலும் அவை பொருண்மைகளை எவ்வகையிலும் பாதிப்பதில்லை; அனைத்து அகவய இயக்கங்களிலிருந்தும் விலகி பிரபஞ்சப் பொருண்மை சுதந்திரமாக இருக்கிறது, இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்து மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  அறிதலுக்கு வெளியே என்னதான் இருந்தாலும் அவற்றின் இருப்பு அறிதலினூடாகவே உருவாகிறது.  இருப்பும் அறிதலும் வேறு வேறல்ல. எனவே அந்தரங்க அறிதலும் பொருண்மையும் ஒன்றுதான் என்று கூறும் ஒரு தத்துவ தரிசனமும் வெகு காலமாக மேலை, கீழை… Read More இருப்பும் அறிதலும் – 1

நேர்காணல் – 9

அறிவு எப்படி உள்முரண்கள் கொண்டதாக இருக்கிறது? யதார்த்தத்திற்கும் பரமார்த்தத்திற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது.  உலகில் எங்கும் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது இந்த இடைவெளிதான்.  இடையே பாலங்கள் இல்லை.  அறிவென்பது அப்படியொரு பாலத்தைக் கட்டும் முயற்சிதான்.  ஒருவன் அறிவையே தன் இறுதி இலக்காகக் கொள்வானானால் அவன் அடைவது ஏதுமில்லை.  ஆகவே ‘அறியாமையை வழிபடுபவன் இருளில் இருக்கிறான்; அறிவை வழிபடுபவன் அதைவிடப் பெரிய இருளில் இருக்கிறான்’ என்று நாராயண குரு சொன்னார்.  யதார்த்தமும் பரமார்த்தமும் மோதும்போது புதிர்கள் பிறக்கின்றன.  ஒபன்ஹியுமரின் பிரபலமான புதிர் ஒன்று… Read More நேர்காணல் – 9