ஶ்ரீசக்ர தியானம் – 21

 கம் க*ம் கம் க*ம் ஙம் அனங்ககுஸுமா காமேஶ்வரீ மஹாத்ரிபுரஸுந்தரீ முப்புரங்களை எழிலூட்டும் அன்னையே, நனவுவெளி (சிதாகாஶம்) ஒளியூட்டப்படாதிருக்கையில் அதை உன் ஒளிகொண்டு நிரப்புகிறாய். அதன்பின் அங்கே மின்னல்கீற்ற்றுகளென விடாது மின்னிக்கொண்டிருக்கிறாய். உனது அந்த ஒளிர்வில் பகலவனின் ஒளியை, திங்களின் ஒளியை, தீயின் ஒளியை மாறிமாறிக் காண்கிறேன். சூரியனின் ஒளி எனது நனவு வாயிலில் நுழைகையில் என்னுள்ளிருக்கும் அறிபவன் விழித்தெழுகிறான். அப்போது உடன்பிறந்தோர் மீதான பாசம் என்னில் தோன்றுகிறது. புலனறிவுகொண்ட ஒவ்வொரு உயிரையும் என் உடன்பிறந்தவையெனக் காண்கிறேன்.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 21

சௌந்தர்யலஹரீ – 21

தடில்லேகா*தன்வீம் தபனஶஶிவைஶ்வாநரமயீம் நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் மஹாபத்மாடவ்யாம் ம்ருதிதமலமாயேன மனஸா மஹாந்த: பஶ்யந்தோ தத*திபரமாஹ்லாதலஹரீம் பாடல் – 21 பேரன்னையே,  ஆறு தாமரைகளுக்கு மேலே அமைந்த எண்ணற்ற இதழ்கள்கொண்ட தாமரையில் அமர்ந்திருப்பவளே சூரியன், சந்திரன், அக்னி இவர்களின்  மின்னலொளி போன்றது உனது ஒளிர்வு பிந்து, நாதம், கலை என்பவை அடங்கிய உன் இறைவனோடு நீ கலந்திருக்கும்  தோற்றத்தை மெய்யும் மெய்யற்றதும் கலந்ததான மாயையிலிருந்து  விடுபட்ட யோகியர்  காண்கையில் பேரானந்த அலையில் மூழ்குகின்றனர் ** மனிதரில்… Read More சௌந்தர்யலஹரீ – 21

ஶ்ரீசக்ர தியானம் – 20

ஶம் க்ஷம் அனங்கமாலினீ சித்ரா ஜ்வாலாமாலினீ தாயே, ஶம் என்பது உன் அடிப்படை மந்திரம். க்ஷம் என்பது பீஜ மந்திரம். இயல்பிலேயே தன்னொளி கொண்டவள் நீ. ஆதி இறை தூய நன்மையெனும் நிலையில் என்றென்றைக்குமென அமைந்திருக்கிறான். அந்த நிலையில், அலைகளற்ற நீடமைதிகொண்ட தெளிந்த ஆழியெனக் காணப்படுகிறான். உன் இறையின் மெய்மையிலிருந்து ஒரு சிறு பொறியை எடுத்து அதற்கொரு உடலையும், உள்ளத்தையும், அகத் துடிப்பையும் அளித்துப்பார்ப்பது உனதொரு ஆடலாக இருக்கிறது. ஒரே சமயத்தில் அழகானதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருக்கின்ற, இன்பமும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 20

சௌந்தர்யலஹரீ – 20

கிரந்தீமங்கேப்*ய: கிரணநிகுரும்பாம்ருதரஸம் ஹ்ருதி த்வாமாத*த்தே ஹிமகரஶிலாமூர்திமிவ ய: ஸ ஸர்பாணாம் தர்பம் ஶமயதி ஶகுந்தாதி*ப இவ ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுக*யதி ஸுதா*தா*ரஸிரயா பாடல் – 20 உன் உடலுமிழும் கதிர்களை  படிகத்தின் குளிரொளியென தியானிப்பவர் அமுதம் போன்ற அக ஆற்றல் பெறுகின்றார் அரவையும் அடக்கக்கூடிய  அவர்களின் அருட்பார்வை  காய்ச்சல் கண்டவரையும் காப்பாற்றுகிறது. ** உணர்வுருவும் பருவுருவும், ஒன்று மற்றொன்றால் அறியப்படும் அளவுக்கு ஒருமை கொண்டவை. சிவ-சக்தி இணைவும் அதே போன்றது. உணர்வுருவின் தன்னொளி  பருவுருவால் எதிரொளிக்கப்பட்டு அனைத்துத்… Read More சௌந்தர்யலஹரீ – 20

ஶ்ரீசக்ர தியானம் – 19

தம் த*ம் தம் த*ம் னம் அனங்கமதனாதுரா ஸர்வமங்கலா விஜயா விரும்பத்தக்கதை தேர்வதில் சிறந்தவளே, அன்னையே, சடுதியில் படைப்பதற்கும், உன் உயிரினங்களை பெருக்குவதற்கும் அவற்றில் பாலியல் விழைவை இயங்க வைக்கிறாய். மத்துறு தயிரென உள்ளங்களைக் கடையும் மன்மதனை எல்லோரிடமும் அனுப்பிவைக்கிறாய். கண்களிலும் செவிகளிலும் குறுகுறுக்கச்செய்யும் தோலிலும் ஏறி அமர்ந்துகொள்ளும், உள அமைதியைக் குலைக்கும் இந்த மன்மதன், காதலரில் ஒருவரோடொருவர் பிணைந்துகொள்ளும் அடங்காப்பசியையும் தீராததாகத்தையும் ஏற்படுத்துகிறான். காமக் களியாட்டின் நுட்பங்களை அறியாத உயிரினம் ஒன்றுகூட இங்கில்லை. ஒற்றைப் பார்வை,… Read More ஶ்ரீசக்ர தியானம் – 19

சௌந்தர்யலஹரீ – 19

முக*ம் பிந்தும் க்ருத்வா குசயுகமத*ஸ்தஸ்ய தததோ* ஹரார்த*ம் த்*யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மத*கலாம் ஸ ஸத்ய: ஸம்க்ஷோப*ம் நயதி வனிதா இத்யதிலகு* த்ரிலோகீமப்யாஶு ப்*ரமயதி ரவீந்துஸ்தனயுகாம் பாடல் – 19 அரனருகமைந்தவளே தன் பிந்துவில் உன் முகத்தையும் கீழுள்ள, சூரியசந்திரர்கள்  போன்ற முலைகளையும் அதற்கும் கீழுள்ள முக்கோணத்தையும் காமத்தை உண்டாக்கும் உன் இயங்காற்றலின் மந்திரத்தோடு (க்லீம்) தியானிப்பவன் மூவுலகைப் படைக்கும் படைப்பாளினி உள்ளிட்ட  பெண்களில் சந்ததிபெருக்கும் ஆற்றலை தூண்டுகிறான் ** இங்கு-இப்போது என்ற இயல் உலகில்(factual… Read More சௌந்தர்யலஹரீ – 19

ஶ்ரீசக்ர தியானம் – 18

ஶம் ஷம் ஸம் ஹம் அனங்காங்குஶா நீலபதாகா நித்யா தாயே மஹேஶ்வரீ, சங்கரனின் குறியீடாக, மெய்யெழுத்துக்களின் லய வெளிப்பாட்டை நீ செவியுற்றாய். அவனது நீலகண்டத்திலிருந்து பதினாறு உயிரெழுத்துக்களை பெற்றுக்கொண்டாய். மெய்யெழுத்துக்களுக்கு உயிரெழுத்துக்கள் கொண்டு அழகுசேர்த்தும், மெய்யெழுத்துக்கள் கொண்டு உயிரெழுத்துக்களை நிலைநிறுத்தியும் நீ உருவாக்கும் உலகு, தோன்றி மறையும் ஒவ்வொன்றிலும் உள்ள உனது தூய மதிப்பை பறைசாற்றுகிறது. உன் விழுமியங்களின் அடுக்கை பொருள்பொதிந்த வகையில் அழகூட்டுகிறது. உன் இரு விழிகள் கொண்டு பகலையும் இரவையும் நீ படைக்கிறாய். ஒளியும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 18

சௌந்தர்யலஹரீ – 18

தனுச்சா*யாபி*ஸ்தே தருணதரணிஶ்ரீஸரணிபி*ர் திவம் ஸர்வாமுர்வீமருணிமனிமக்னாம் ஸ்மரதி ய: ப*வந்த்யஸ்ய  த்ரஸ்யத்வனஹரிணஶாலீனநயனா: ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதி கதி ந கீர்வாணகணிகா: பாடல் – 18 ஒளிரும் உன் தளிருடலின் அழகு நிறைக்கும் விண்ணையும் பகலவன் ஒளியில் செந்நிறமாக ஒளிரும் மண்ணையும் தியானிப்பவர் கானகத்தில் உறையும் மான்களின் மருளும் விழிகொண்ட மாதரையும்  ஊர்வசி முதலிய அரம்பையர் பலரையும் ஈர்ப்பதன் விந்தைதான் என்ன! ** ஞாயிறும் திங்களும் பூமியை அரவணப்பது விண்ணும் மண்ணும் ஒன்றாக இணைவதாக பார்க்கப்படுகிறது. பூமி துவக்கம், சூரியன்… Read More சௌந்தர்யலஹரீ – 18

ஶ்ரீசக்ர தியானம் – 17

டம், ட*ம், டம்,ட*ம், ணம் அனங்கமதனா குலஸுந்தரீ த்வரிதா சாவித்ரி அன்னையே, மெய்யான அழகு என்பது எந்த ஒரு பொருளையோ, ஒன்றன் பகுதியையோ சார்ந்ததல்ல. உன் பேரானந்தம் வெளிப்படும் போதெல்லாம், சிறு பொறியளவே ஆயினும், அழகின் தரிசனம் கிடைக்கப் பெறுகிறோம். எழிலூட்டப்பட்ட ஒன்றிலிருந்து உன் அழகை அறியமுடியாதென்பதால், மக்கள் அதை அழகானது என்கின்றனர். மெய்யான அழகு உள்ளத்தில் தோன்றுகையில் கடந்த காலத்தின் வருத்தங்களும் எதிர்காலம் குறித்த பதற்றங்களும் எம்மிலிருந்து மறைகின்றன. அப்போது உள்ளம் ஒரு காட்சியிலிருந்து இன்னொன்றிற்கும்,… Read More ஶ்ரீசக்ர தியானம் – 17

சௌந்தர்யலஹரீ – 17

ஸவித்ரீபி*ர்வாசாம் ஶஶிமணிஶிலாப*ங்கருசிபி*ர் வஶின்யாத்யாபி*ஸ்த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய: ஸ கர்தா காவ்யானாம் ப*வதி மஹதாம் ப*ங்கிருசிபி*ர் வசோபி*ர்வாக்தேவீவதனகமலாமோதமது*ரை: பாடல் – 17 அன்னையே,  படிகம்போல் ஒளிரும் வஶினீ முதலிய இறைவியரோடும் சொற்களை உருவாக்கும் ஸாவித்ரீயரோடும் சேர்த்து உன்னை தியானிப்பவர்கள்  மாகவிகளின் படைப்புகளால் தூண்டல் பெற்றதுபோன்ற நூல்களை யாக்கிறார்கள்.  அவர்களது சொற்கள் சொல்லின் இறைவியாம் சரஸ்வதியின் எழில்முகத்தின் மணத்தால் நிரம்பியிருக்கின்றன ** மௌனம் என்பது தனிமையின் இயல்பு. பேச்சு தோழமையின் இயல்பு. “பிறர்” என்பதோடு தொடர்புறுத்திக் கொள்ளவேண்டி… Read More சௌந்தர்யலஹரீ – 17