நோயை எதிர்கொள்ளல்

அதிர்ஷ்டம் தரும் திடீர் வாய்ப்பு இன்று அதிர்ஷ்டம் தரும் ஒரு திடீர் வாய்ப்பு பற்றி பேச விரும்புகிறேன்.  மக்கள் பொதுவாக மூன்று வகையான நோய்கள் குறித்து அச்சப்படுகிறார்கள்.  இதயநோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம்.  ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் பிழைப்பாரா என்று சொல்ல முடியாது.  மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதோ என்றால் அவர் பிழைத்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சிறிது காலமே உயிர் வாழக்கூடும்.  ஆனால், மாரடைப்பு எப்படி வந்தது என்பது… Read More நோயை எதிர்கொள்ளல்

நடராஜ குருவும் நானும் – 11

சரியாக நாற்பத்தியோராம் நாள் குரு திரும்ப வந்தார்.  குரங்குகளால் நான் பட்ட கஷ்டங்களை ஏற்கனவே அவருக்கு நான் எழுதியிருந்தேன்.  இதற்காக அவர் தன்னுடன் எடுத்துவந்த வெடிகளை நாங்கள் வெடிக்கும்போது, குரு தனது கைத்தடியை துப்பாக்கி போல் குரங்குகளை நோக்கி நீட்டுவார்.  இந்த தந்திரம் நல்ல பலனைத் தந்தது.  நாங்கள் துப்பாக்கி ஏந்தியவர்கள் என குரங்குகள் எண்ணின.  ஆனால், குருவின் கைத்தடிக்கும் வெடிக்கும் சம்பந்தம் இல்லை என்பது, சில நாட்களிலேயே குரங்குத்தலைவர்களுக்குத் தெரிந்து போனது.  நம் தந்திரத்தை மாற்றி… Read More நடராஜ குருவும் நானும் – 11

நடராஜ குருவும் நானும் – 10

நாங்கள் பெங்களூரை அடைந்தவுடன், “நீ மீண்டும் பேசத்தொடங்காததால், உன்னை அழைத்துக்கொண்டு நகரைச் சுற்றுவது சரியல்ல” என்றார் குரு.  வழக்கமாக குமார் மற்றும் சேகரன் இவர்களின் வீட்டிற்குச் செல்லும் குரு அதைத் தவிர்த்து ஜெயநகரில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்.  அவர் கதவைத் திறந்தவுடன் ஒரு விமானம் அவ்வறையில் இருந்து கிளம்புவதுபோல் ‘ம்ம்ம்…’ என்னும் பேரொலி எழுந்தது.  என்னால் நான் காண்பதை நம்பமுடியவில்லை – எங்களைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக கருமேகம் போல் கொசுக்கூட்டம்! … Read More நடராஜ குருவும் நானும் – 10

நேர்காணல் – 10

22.6.1996 நான் ஒரு கதை போல சொல்வதுண்டு.  ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார்.  மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார்.  அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது.  எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன்.  பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன.  என்ன நடந்தது என்று விசாரித்தேன்.  தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு… Read More நேர்காணல் – 10

நேர்காணல் – 9

அறிவு எப்படி உள்முரண்கள் கொண்டதாக இருக்கிறது? யதார்த்தத்திற்கும் பரமார்த்தத்திற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது.  உலகில் எங்கும் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது இந்த இடைவெளிதான்.  இடையே பாலங்கள் இல்லை.  அறிவென்பது அப்படியொரு பாலத்தைக் கட்டும் முயற்சிதான்.  ஒருவன் அறிவையே தன் இறுதி இலக்காகக் கொள்வானானால் அவன் அடைவது ஏதுமில்லை.  ஆகவே ‘அறியாமையை வழிபடுபவன் இருளில் இருக்கிறான்; அறிவை வழிபடுபவன் அதைவிடப் பெரிய இருளில் இருக்கிறான்’ என்று நாராயண குரு சொன்னார்.  யதார்த்தமும் பரமார்த்தமும் மோதும்போது புதிர்கள் பிறக்கின்றன.  ஒபன்ஹியுமரின் பிரபலமான புதிர் ஒன்று… Read More நேர்காணல் – 9

நேர்காணல் – 8

நட்சத்திரங்கள் எங்குள்ளன? அவற்றைப் பார்ப்பவனின் மூளையில் –   பிஷப் பெர்க்லி 17.3.1996 யதியிடம் நேற்று அவர் பேசியது கடைசியில் ‘அறிதல்’ எனும் நிகழ்வின் சிக்கலில் சென்று நின்றுவிட்டது என்றோம்.  கார்ல் சாக்ஸ் எழுதிய நூல் ஒன்றை யதி கொண்டு வரச்சொன்னார்.  அதன் சில பகுதிகளைப் படித்தார்.  கார்ல் சாக்ஸ் உலகப்புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர்.  அவர் இன்னொரு ஆய்வாளருடன் சேர்ந்து நான்கு வித்தியாசமான நரம்பு நோயாளிகளைப் பற்றி எழுதிய ஆய்வு அது.  முதல் நோயாளி ஓர் ஓவியர். … Read More நேர்காணல் – 8

நடராஜ குருவும் நானும் – 9

அங்கிருந்து சென்று மெளனத்தில் ஆழ்வது என்ற உறுதியுடன் எனது பொருட்களை எல்லாம் மூட்டைகட்டிக் கொண்டு, குருவை வணங்கி விடைபெறும் எண்ணத்துடன் முன் வாயிலை அடைந்தேன்.  அப்போது, நான் ஏற்கனவே வெறுப்பு கொண்டிருந்த மனிதனை அழைத்து, ‘இவன் என்னுடைய புத்தகங்களை எல்லாம் திருடிக்கொண்டு ஓடப்பார்க்கிறான்.  போலீஸைக் கூப்பிடு” என்றார் குரு.  எனக்கு அளவில்லா கோபம் வந்தது.  என் பைகளை தரையில் வீசி எறிந்து, “இங்கிருந்து எதையும் நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை! எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.  அதற்கு குரு,… Read More நடராஜ குருவும் நானும் – 9

நடராஜ குருவும் நானும் – 8

நான் சென்னைக்குத் திரும்பியபோது, விவேகானந்தா கல்லூரியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி மாணவர்களை எதிர்ப்பில் ஈடுபடச் செய்த்து.  மொத்த கல்லூரியும் வேலை நிறுத்தத்தில் இறங்கியது.  சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு செல்லப்பெயர்கள் உண்டு – மாநிலக் கல்லூரியின் இளவரசர்கள் (Princes of Presidency College), ராணி மேரி கல்லூரியின் ராணிகள் (Queens of Queen Mary), பச்சையப்பாவின் ரெளடிகள் (Rowdies of Pachayappa), கிறித்தவக் கல்லூரியின் கனவான்கள் (Gentlemen of Christian College), விவேகானந்தா கல்லூரியின் சாம்பார்கள் (Sambars… Read More நடராஜ குருவும் நானும் – 8

நேர்காணல் – 7

நான் அழகிற்காக இறந்தேன் கல்லறையில் வைக்கப்பட்டேன் உண்மைக்காக உயிர்விட்ட ஒருவர் என்னருகே படுக்கவைக்கப்பட்டபோது அஞ்சினேன் நான் ஏன் இறந்தேன் என்று அவர் கேட்டார் ‘அழகிற்காக’ என்றேன். ‘நான் உண்மைக்காக.  நாமிருவரும் சகோதரர்கள்’ என்றார் அவர் அவ்வாறாக உறவினர்களைப் போல இரவு முழுக்க உரையாடினோம் புல் வளர்ந்து பரவி எங்கள் உதடுகளை மூடி எங்கள் பெயர்களை மறைக்கும் வரை –    எமிலி டிக்கன்சன் 16.3.1996 இந்தக் கவிதையில் அழகும் உண்மையும் இரண்டல்ல,  ஒன்றுதான் என்ற தரிசனம் உள்ளது.  ஆனால்… Read More நேர்காணல் – 7

நடராஜ குருவும் நானும் – 7

இதற்கிடையில், கேரளாவில் ராமகிருஷ்ண மடத்தையும் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவிய சுவாமி ஆகமானந்தா என் கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னை ஒரு கருங்காலி என்றும், கல்லூரியை அழிக்கும் நோக்குடன், பிராமணர்களை வெறுக்கும் டாக்டர் நடராஜனால் நான் அங்கு அனுப்பப்பட்டேன் என்றும் எழுதியிருந்தார்.  இக்கடிதம் சுவாமி நிஶ்ரேயஸானந்தாவிடம் ரகசியமாகக் காட்டப்பட்டது.  அவர் என்னிடம் அதைக் காட்டினார்.  இக்கடிதத்தால், ‘ராமகிருஷ்ண மடத்தில் ஜாதி வெறி இருப்பதாக குரு நினைப்பது தவறோ?’ என்ற என் சந்தேகம் முற்றிலும்… Read More நடராஜ குருவும் நானும் – 7