இந்து மதம் – ஒரு விவேகிக்கான வழிகாட்டி

AN INTELLIGENT MAN’S GUIDE TO THE HINDU RELIGION சொல்புதிது வெளியீடு (தமிழாக்கம் : கெ.பி. வினோத்) 1. அறிமுகம் 2. நமது கோயில்கள் 3. கடவுளரும் வாகனங்களும் 4. கணபதி 5. சரஸ்வதி 6. சுப்ரமணியன் 7. மகாவிஷ்ணு 8. சிவன்

நடராஜ குருவும் நானும் – 13

சோமனஹள்ளிக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு நானிழந்திருந்த சொற்குவையை மீளப்பெற்றேன்.  பேசவேண்டும் என்ற விருப்பும் கூடிவந்தது.  அதன்பின்னர், அனேகமாக ஒவ்வொருநாளும் நகரத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டேன்.  அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது.  அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார்.  அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.  தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார்.  அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம்… Read More நடராஜ குருவும் நானும் – 13

வேண்டுதல்கள் – 5

இருத்தலில் இல்லாமை புகழப்படும்போது உன் விழிகள் ஒளிர்வதில்லை நிந்திக்கப்படும்போது உன்கன்னங்கள் இருள்வதில்லை நான் இதயத்தை திறக்கும்போது உன்னுள் மூழ்கி அமர்ந்திருக்கிறாய் அக்கறையின்றி நானிருக்கும்போது சேவை  புரிவதில் கவனமாய் இருக்கிறாய்   இரக்கமே உருவான உன் இருப்பில்கூட யாரும் தடுக்கிக்கொள்ளாவண்ணம் அமைதியுடன் தன்முனைப்பை அழித்தொழிக்கும் ரகசியத்தை உன்னிடம் பயிலவேண்டும்    

வேண்டுதல்கள் – 4

மௌனத்தின் ஆற்றல் புகழ்மிகு பீடத்தையே எப்போதும் எனக்களித்தாய் என்கால்கள் இளைப்பாற உன் கனிவென்னும் கம்பளத்தை விரித்தாய் இனியதும் மென்மையானதுமான பார்வையால் என்னை நீ தூய்மையாக்குவது எங்ஙனம்? உன் மௌனத்தில் பிறந்த ஞானமே என் நாவிலெழும் சொற்களானது எவ்வாறு?   அடக்கமே உருவான உன் அழகிய நெற்றியில் வெகு இயல்பாய் அமர்ந்திருக்கும் மௌனத்தின் ஆற்றலை உன்னிடமிருந்து கற்க வேண்டும்.

பொருள் (அர்த்தம்)

ௐ எனும் ப்ரணவத்தில் உச்சரிக்கப்படும் ஒலிகள் ‘அ, உ, ம்’ என்பவை மட்டுமே. நான்காவதாக வரும் தீர்க்கமான மெளனம் ஒலிக்கப்படும் எழுத்துக்களிலிருந்து விலகி நிற்கின்றது. அதுபோலவே வாழ்நோக்கங்களில் (புருஷார்த்தங்கள்) அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆகிய மூன்றும் ஒன்றாய் நிற்பவை. வீடுபேறு (மோட்சம்) தனியாய் நிற்கும். இருப்பு, நனவு, இனிமை (அஸ்தி-பாதி-ப்ரியம்) என்பவை முறையே அறம் பொருள் இன்பத்தை சுட்டுகின்றன.  எல்லாவற்றிலும் உயர்ந்தது வீடுபேறுதான் (மோட்சம்). இவற்றிலெல்லாம் அடங்கியிருக்கும் ஒரு ரகசியமுண்டு. அதைக் கண்டுகொண்டோமென்றால்,… Read More பொருள் (அர்த்தம்)

வேண்டுதல்கள் – 3

ஏற்பின் ரசவாதம் பிறந்த மண்ணை நீங்கி வெகுதூரம் சென்றுவிட்டாய் என்றாலும் உன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருப்பது போல் எளிதாக சுவாசிக்கிறாய்   ஏதோ மொழிபேசுவோரும் ஏதோ வழக்கம்கொண்டோருமான உன்னை எதிர்கொண்ட வண்ணம் உள்ள அன்னியரையெல்லாம் நெடுநாட்களுக்குப்பின் காணும் உறவினர் போல வாழ்த்துகிறாய்   மிக எளிதாக சமநிலை குலையாமல் ஒரு புனிதருக்கே உரிய கண்ணியத்தோடு பிறரின் ஆன்மாவில் கரைந்தழியும் ரகசியத்தை உன்னிடமிருந்து நான் கற்கவேண்டும்

வேண்டுதல்கள்

  யதார்த்தங்களின் உன்னத ஒளிவட்டம்     மல்லிகை மொட்டு போல் மென்மையாக இருக்கிறாய் இறுகிய உலோகச் சுருள்கம்பியின் உறுதியுடன் எப்படி இருக்க முடிகிறது உன்னால்? அமுதவெளியை நோக்கும் உன் கண்களில் கனவுகளன்றி எதுவும் தெரியவில்லை எனக்கு தர்க்கத்தின் உறுதியான நிலத்தில் எப்படி அழுந்தி நடக்க முடிகிறது உன்னால்?     வானவில்லின் பேரழகையும் வாழ்வின் யதார்த்தங்களையும் ஒன்றாக இணைக்கும் வலிமையை உன்னிடமிருந்துதான் கற்கவேண்டும்     (Prayerful Supplications – My Inner Profile)

இந்துமதம் – 8. சிவன்

சிவன் இந்தியாவின் ஆன்மீக வரலாற்றின் தொடக்கப்புள்ளி சிவன்.  இன்றைய சூழலில் அவரைப் பற்றி நிலவும் புரிதல் அல்ல அவரது உண்மை இறை நிலை.  அவரது மேலான தனித்தன்மையைப் புரிந்து கொள்ள, நாம் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட, முன்-வேதகால இந்தியாவின் கலாச்சாரங்களை ஆராய வேண்டும்.  ஆனால் சைவ இயலக்கியங்களின்படி, ஆதி கலாச்சாரங்களில் சிவனின் வழிபாடு பற்றி நாம் அறிந்து கொள்ளக் கிடைப்பவை வெகு சில களிமண் பட்டயங்களில் பொறிக்கப்பட்ட  உருவங்களே. அவ்வாறு கிடைத்தவற்றில், பசுபதி (சிவகுரு) சின்னம் இந்தியவியல்… Read More இந்துமதம் – 8. சிவன்

இந்துமதம் – 7. மகாவிஷ்ணு

மகாவிஷ்ணு நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை நோக்கிய முடிவுறாத் தேடலில் இருக்கிறோம்.  அதற்கு, முதலில் நாம் நமது உடல் பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் புரிதல் பெற்றிருப்பது அவசியமாகிறது.  நாம் வளரும்போது சிந்திக்கத் தொடங்குகிறோம்.  சிந்தனைகளில் மொத்தமாக மூழ்கித்தொலைந்து, சில நேரங்களில் நாம் உடலையே மறந்து வாழவும் நேரிடுகிறது.  உடல், மனம் இவை தவிர்த்து, மேலும் செறிவான, மேலும் நீடித்த, மேலும் மதிப்பு மிக்க ஒன்று இருப்பதாக நாம் மெல்ல உணரத்தொடங்குகிறோம்.  அறிவுக்கு எட்டாத, இப்பரப்பில் மூழ்க, ஒரு புதுத்தேடல் நம்முள் எழுகிறது.  இத்தேடல் திறக்கும் புது… Read More இந்துமதம் – 7. மகாவிஷ்ணு

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

எழவேண்டும் பின் உறங்கவேண்டும் உண்ணவேண்டும் இணையவேண்டும் என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?                                                                            (ஆத்மோபதேச சதகம் – பாடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6