ஶ்ரீசக்ர தியானம் – 6

ஐம் நாமாகர்ஷிணீ நில்லா நீங்கா ஒலியின் இறைவியே! சிவனது வில்லே உன் இயக்கமாய் இருக்கிறது. சொற்களை எண்ணியெடுத்து அம்புகளெனத் தொடுத்து என் நாவில் செலுத்துகிறாய். அம்பு உடலை காயப்படுத்துவது. ஆனால், உனது அம்புகள் அழிவின்மை எனும் அமுதை என் நெஞ்சில் செலுத்துகின்றன. என்னை பேரின்பத்தில் ஆழ்த்துகின்றன. அன்பே உருவான தாயே, ஒவ்வொரு சொல்லும் உன் பெருமையைப் பாடும் பாடலாய் அமைகிறது. வசந்தத்தில் மலரும் பூப்போல, அதன் நறுமணம் என் மூச்சுக்காற்றை நிறைக்கிறது. என் பார்வைக்கு இனியதாய் இருக்கிறது.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 6

சௌந்தர்யலஹரீ – 6

த*னு: பௌஷ்பம் மது*கரமயீ பஞ்ச விஶிகா* வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோத*னரத*: ததா*ப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபா மபாங்கத் தே லப்த்*வா ஜகதிதமங்கோ விஜயதே பாடல் – 6 மலையவன் மகளே  உன் ஓரவிழிப் பார்வையால் அருள்பெற்று  வண்டுகளால் ஆன நாண் கொண்ட மலர்வில்லும்,  ஐம்மலர் அம்பும் ஏந்தி வசந்தகாலத்தை அமைச்செனக் கொண்டு  மலையிலிருந்து தவழும் தென்றலெனும் தேரில் வெற்றியோடு அமர்ந்திருக்கிறான் உடலிலியான மன்மதன் ** கைலாயத்தில் சிவன் ஊழ்கத்தில் ஆழ்ந்திருந்தான். உயிரினங்களின் சந்ததி பெருக வேண்டும்… Read More சௌந்தர்யலஹரீ – 6

ஶ்ரீசக்ர தியானம் – 5

ஓம் பீஜாகர்ஷிணீ இப்பேரண்டத்தின் முதல் விதை நீ. பிரபஞ்சக் கருவறையான உன்னிலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. உன்னிலிருந்ந்து தோன்றாத விளைவென்று ஒன்றுமில்லை. அவையனைத்தும் சிறிதும் சிதைவில்லாமல் உன்னில் மீளக் கலக்கின்றன. அன்னையே, எண்ணற்ற உருக்களின் விதையாக என்னை சுருக்கி எத்தனை கருவறைகளில் விதைத்தாய்! புத்தம் புது மலரென எத்தனையெத்தனை அன்னையரிலிருந்து என்னை பிறக்க வைத்தாய்! உன் ஆணைப்படி பிரம்மனும், மாலும், ஈசனும் இடையறாது படைத்தல், காத்தல், அழித்தலெனும் முத்தொழிலை புரிந்துகொண்டிருக்கின்றனர். கழிநிகழ்எதிர்வெனும் முக்காலத்திற்கும் இறையான விஷ்ணுவையே அரைக்கணத்தில் மயக்குறு… Read More ஶ்ரீசக்ர தியானம் – 5

சௌந்தர்யலஹரீ – 5

ஹரிஸ்த்வாமாரத்*ய ப்ரணதஜனஸௌபா*க்யஜனனீம் புரா நாரீ பூ*த்வா புரரிபுமபி க்ஷோப*மனயத் ஸ்மரோ அபி த்வாம் நத்வா ரதிநயனலேஹ்யேன வபுஷா முனீனாமப்யந்த: ப்ரப*வதி ஹி மோஹாய மஹதாம பாடல் – 5 அடியார்க்கருளும் உன் அருள் பெற்ற அரி அழகியின் வடிவு கொண்டான் முப்புரம் எரித்த அரன் மனதில்  மோக அலையை எழுப்பினான் மன்மதனோ உன் அடி வணங்கி தன் இணை ரதி மகிழும் வடிவு கொண்டான் உன் அருளால் முனிவர் மனதிலும் மோகம் எழச்செய்யும்  கலை கைவரப்பெற்றான். **… Read More சௌந்தர்யலஹரீ – 5

ஶ்ரீசக்ர தியானம் – 4

ஔம் ஆத்மாகர்ஷிணீ பேரறிவானவளே, அன்னையே! உன் இருப்பு அனைத்தையும் ஒளிரச் செய்கிறது. என் அறியாமை எனும் தடையை மீறி எங்கும் பரவியிருக்கும் உன் ஞானத்தின் ஒரு பகுதியாகும் தகுதி எனக்குண்டாகட்டும். பேரிறையான சிவனின் முடிவிலா அமைதியும் பிரபஞ்சத்தைப் படைக்கும் இடையறா இயக்கமுமே உன் இணையடிகள். இறைவனின் விண் நெருப்பை என் மனமாய், என் மதியாய், தன்முனைப்பாய் என்னில் எரியச் செய்கிறாய். உயிரமுது பாயும் உடலின் திண்மையை, என் ஆன்ம வேட்கையெனும் தீக்கொழுந்தை உன் கொடையாக அருளியிருக்கிறாய். வாழ்வெனும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 4

சௌந்தர்யலஹரீ – 4

த்வதன்ய: பாணிப்*யாமப*யவரதோ தைவதகண: த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீ*த்யபி*னயா ப*யாத் த்ராதும் தாதும் ப*லமபி ச வாஞ்சாஸமதி*கம் ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ பாடல் – 4 அனைத்துலகுகளுக்கும் அடைக்கலம் தரும் அன்னையே! அஞ்சலும் அருளலும் காட்டி நிற்கின்றன தெய்வங்கள் எல்லாம் நீயோ எந்த சைகையும் காட்டுவதில்லை உன்னடியார் விழைவதற்கும் மேலானவற்றை உன்னடிகளே வழங்கிவிடுகின்றன. ** விஷ்ணு, சிவன் போன்ற பெரும்பாலான கடவுளர் சிலைகள் வலதுகரம் தூக்கி அருள் வழங்கும் சைகையும், இடதுகரம் விரித்து அடைக்கலம்… Read More சௌந்தர்யலஹரீ – 4

ஶ்ரீசக்ர தியானம் – 3

ம் அம்ருதாகர்ஷிணி என்றும் வாழும் அன்னையே! நிலைபேறென்னும் அமிழ்தத்தை எப்போதும் பொழிந்துகொண்டிருப்பவளே! மாறிக்கொண்டே இருக்கும் ஒழுக்கான இவ்வுலகில் ஒரு சிறு மினுக்கமென வந்து பிறக்கும்படி என்னை விதித்தாய். எங்கிருந்து வருகிறேன் நான்? எதில் சென்று மறைகிறேன்? நானறியேன். என் தற்காலிக உறைவிடமென சிதைவுறும் இவ்வுடலை அளித்திருக்கிறாய். இங்குள்ள வாழ்வு நிலையில்லாததுதான் என்றாலும், நீ மாற்றமில்லாதவள் என்பதற்கும் உன் வியத்தகு நாடகத்தில் ஒரு தொடர்ச்சி உள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. ஆற்றுப்படுத்தப்படாத புலன்களும் நெறிப்படுத்தப்படாத மனமும் கொண்டவன் நான்.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 3

சௌந்தர்யலஹரீ – 3

அவித்யானாமந்தஸ்திமிரமிஹிரத்வீபநகரீ ஜடானாம் சைதன்யஸ்தபகமகரந்தஸ்ருதிஜரீ தரித்ராணாம் சிந்தாமணிகுணனிகா ஜன்மஜலதௌ* நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபுவராஹஸ்ய ப*வதீ  பாடல் – 3 உனது இணையடித் துகள் அறியாமையில் மூழ்கியோருக்கு இருளகற்றும் ஒளிர்தீவாகவும் அசைவற்றிருப்போர்க்கு நனவெனும் மலரின் மகரந்த ஒழுக்காகவும் ஏழ்மையிலிருப்போர்க்கு விரும்பியதையளிக்கும் அருமணியாகவும் பிறவிப்பெருங்கடலில் மூழ்கியோர்க்கு அழிவிலிருந்து உலகைக்காத்த வராகத்தின் கொம்பாகவும் இருக்கிறது. ** “அர்ஜுனா, துயருற்றோர், அறிவுத்தேட்டம் கொண்டோர், வாழ்வின் நன்மைகளை நாடுவோர், விவேகிகள் என்ற நான்கு வகை மக்கள் என்னை உளம்கொள்கின்றனர்” – இது பகவத்கீதையில் கிருஷ்ணன் சொல்வது.… Read More சௌந்தர்யலஹரீ – 3

ஶ்ரீசக்ர தியானம் – 2

முப்புரங்களையும் எழிலூட்டுபவளே! உயிர் ஒவ்வொன்றிற்கும் உடலொன்றை அளித்து இவ்வுலகைப் படைத்து ஒவ்வொன்றையும் காப்பவள் நீ. என்றென்றைக்கும் நன்றியோடு உன்னை பணிகிறேன். உன் கருணை மகத்தானது. சிவ-சக்தி இணைவின் மையமான பிந்துவில் வெறும் இயல்கைகளாக இருந்த விந்துவும் கருமுட்டையும் உன் கவர்ச்சியின் ஆற்றலால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற்படுத்தப்படுகின்றன. புலனுறுப்புகளும், செயலுறுப்புகளும், அக உறுப்பின் நான்குநிலைகளிலான இயக்க ஒழுங்கமைவும் கொண்ட உடலுடன் கூடிய உயிராக வளரும் நல்லூழை ஒரு உயிரணுவுக்கு அளித்தாய். இந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உடல், உன் விருப்பப்படி,… Read More ஶ்ரீசக்ர தியானம் – 2

சௌந்தர்யலஹரீ – 2

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண பங்கேருஹப*வம் விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம் வஹத்யேனம் ஶௌரி: கத*மபி ஸஹஸ்ரேண ஶிரஸாம் ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப*ஜதி ப*ஸிதோத்தூ*லன விதி*ம் பாடல் – 2 உன் தாமரை இணையடிக் கீழிருந்து மென்பொடி சேர்த்தெடுத்து இவ்வுலகெலாம் படைக்கிறான் பிரம்மன் அவை தம்மில் கலந்து குழம்பிவிடாமல்  அனந்தனின் ஆயிரம் தலைகொண்டு காக்கிறான் விஷ்ணு அப்பொடியை மேலும் நுண்ணிதாக்கி உடலெங்கும் பூசி அணிசெய்துகொண்டு  ஊழ்கத்திலிருக்கிறான் சிவன். ** இந்திய மதச் சடங்குகளிலும் பக்தி வழிபாடுகளிலும் இறைவனின்… Read More சௌந்தர்யலஹரீ – 2