ஶ்ரீசக்ர தியானம் – 16

ஆம் புத்த்*யாகர்ஷிணீ படைப்பூக்கத்தைத் தூண்டும் இறைவியே! நுண்ணிய உணர்திறன் கொண்ட கவிஞரும் ஓவியரும் பகலில் கதிரவனின் பொற்கிரணங்களால் மெல்ல தூண்டப்படுகையில் அழகிய மலைகளையும் அல்லிமலர்கள் நிரம்பிய நீர்நிலைகளையும் கண்டு மனஎழுச்சி கொள்கின்றனர். வாழ்வுண்மைகள் எல்லாம் அழகின் ஆகச்சிறந்த அடையாளங்களை குறிப்புணர்த்தும் கருவிகளாக மாறுகின்றன.  தாமரைப் பொய்கையில் பிறந்தவனைப் போல, ஒவ்வொரு காலையிலும் விழித்தெழுகையில் உன் காலடியில் அமர்ந்து ஞானமளிக்கும் உன் சொற்களை கேட்கவேண்டும் என்ற உறுதிப்பாடோடுதான் எழுகிறேன். உனது அருஞ்சொற்கள் அறிவொளியற்ற கானகத்தில் விழுந்து வீணாகிவிடக்கூடாது என்பதில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 16

சௌந்தர்யலஹரீ – 16

கவீந்த்ராணாம் சேத: கமலவனபாலாதபருசிம் ப*ஜந்தே யே ஸந்த: கதிசிதருணாமேவ ப*வதீம் விரிஞ்சிப்ரேயஸ்யாஸ்தருணதரஶ்ருங்காரலஹரீ கபீ*ராபி*ர்வாக்பி*ர்விதத*தி ஸதாம் ரஞ்ஜனமமீம் பாடல் – 16 அன்னையே உன்னை செந்நிறமெனவே அழைக்கின்றனர் ஞானியர் பொய்கையில் தாமரைக்கூட்டமெனத் திகழும் பெருங்கவிஞரின் இதயங்களை எழுகதிரின் ஒளியென உன் பேரெழில் மகிழ்விக்கிறது பிரம்மனின் இணையான சரஸ்வதியின் இனிமையும் பெருமையும் கொண்ட  இசைநிறை காதல்சொற்களைக் கேட்கும்  நல்லூழ் கொண்டவர்கள் அவர்கள். சீரழகுக் கவிதைகளை அவர்கள் இயற்றுகையில் கவிதைச்சுவை அறிந்தோர் மகிழ்ந்து போற்றுகின்றனர் ** சுயத்தில் தோன்றும் ஒரு சலனத்துடன்… Read More சௌந்தர்யலஹரீ – 16

ஶ்ரீசக்ர தியானம் – 15

இம் அஹம்காராகர்ஷிணீ பெண்ணெனும் ஆழ்படிமமாக விளங்கும் அன்னையே, சதாசிவனின் அறியவொண்ணா ஒளிர்வு உன் எதிரொளிக்கும் மனதில் பதிகையில் இயல்நிகழ்வின் முதல் சிற்றலை, அகம் என, ‘நான்’ எனும் நனவு என தோன்றுகிறது. அதன் தொடர்ச்சியாக உன் அழகுணர்வின் படைப்பாக மொத்த அண்டமும் எழுகிறது. ஆக, முழு அண்டத்திற்கும் மையப்புள்ளியென நீ திகழ்கிறாய். துடிப்புடைய லயத்துடன் பருவங்கள் மாறுகையில், ஒவ்வொரு பருவத்திற்குமென நீ மறைத்து வைத்த மாயங்களை உலகுக்கு காட்டுகிறாய். பருவமாற்றம் மூலம் நீ காட்டும் இன்ப-துன்ப மெய்யியல்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 15

சௌந்தர்யலஹரீ – 15

ஶரஜ்ஜ்யோத்ஸ்னாஶுப்*ராம் ஶஶியுதஜடாஜூடமகுடாம் வரத்ராஸத்ராணஸ்ப*டிகக*டிகாபுஸ்தககராம் ஸக்ருன்ன த்வா நத்வா கத*மிவ ஸதாம் ஸம்னிதத*தே மது*க்ஷீரத்ராக்ஷாமது*ரிமாது*ரீணா ப*ணிதய: பாடல் – 15 கூதிர்ப்பருவ நிலவின் ஒளி கொண்டவளே பிறைநிலவை முடிமேல் சூடியவளே உன் கரங்கள் அருளலும் அஞ்சலும் காட்டுகின்றன ஒரு கையில் படிகமாலையும் இன்னொன்றில் சுவடியும் ஏந்தியிருக்கிறாய் உன் முன் வந்து வணங்கும் நல்லோர் தேனினும் பாலினும் தேறலினும் இனிய  உன் சொற்களை தவறவிடுவரோ ** மனிதகுலம் ஆன்மாவின் உள்ளுறையும் நனவிலிக்கும் (அறிவெல்லை) கடந்த மீநனவுக்கும் இடையில் வாழ்கிறது. நனவும்… Read More சௌந்தர்யலஹரீ – 15

ஶ்ரீசக்ர தியானம் – 14

ஈம் ஶப்தாகர்ஷிணீ அன்னையே, அறிவொளிச் சொல்லையும் உவகைதரும் இன்னிசையையும் ஒழுகியோடச் செய்து, வடிவற்றதிலிருந்து ஒளிரும் வண்ண உருவரைகளையும் ஐயத்துக்கிடமற்ற பொருள்களையும் உண்டாக்குகிறாய். மூலாதாரம் எனும் என் அடித்தளத்தில் புலனறிவு கொண்ட உயிர்கள் எல்லாமே என் உடன்பிறந்தவை. என் மனதிற்கினியவை. மௌனமே ஊடகமென ஒரு மொழியை நீ எனக்களித்திருக்கிறாய். என் புலனுணர் அமைப்புடன் உறவாடி அது எனது இன்பதுன்பங்களை வெளிப்படுத்துகிறது. நீ எனக்கருளியுள்ள குறியீட்டு மொழி ஆற்றல்மிகு தொடர்புமொழியாக எளிதில் புரிந்துகொள்ளப்படுகிறது. உருவக மொழியை எனக்களித்திருக்கிறாய் நீ. ஒரு… Read More ஶ்ரீசக்ர தியானம் – 14

சௌந்தர்யலஹரீ – 14

க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத்விஸமதி*கபஞ்சாஶதுதகே ஹுதாஶே த்வாஷஷ்டிஶ்சதுரதி*கபஞ்சாஶதனிலே திவி த்வி:ஷட்த்ரிம்ஶன்மனஸி ச சது:ஷஷ்டிரிதி யே மயூகா*ஸ்தேஷாமப்யுபரி தவ பாதாம்புஜயுகம் பாடல் 14 நிலத்தில் (மூலாதாரம்) ஐம்பத்தாறு, நீரில் (மணிபூரகம்) ஐம்பத்திரண்டு தீயில் (ஸ்வாதிஷ்டானம்) அறுபத்திரண்டு, காற்றில் (அநாஹதம்)                                                                                   ஐம்பத்திநான்கு வெளியில் (விஶுத்தி) எழுபத்திரண்டு, மனதில் (ஆஞா) அறுபத்திநான்கு இக்கதிர்களுக்கு மேலே உள்ளன உன் தாமரை இணையடிகள் ** பிரம்மனால் படைக்கப்பட்டு, விஷ்ணுவால் காக்கப்பட்டு, சிவனால் சாம்பலாக ஆக்கப்படும் இயல் உலகு பேரன்னையின் காலடியில் இருந்து எடுக்கப்பட்ட துகள்களால் ஆனது. இப்பாடலில்,… Read More சௌந்தர்யலஹரீ – 14

ஶ்ரீசக்ர தியானம் – 13

உம் ஸ்பர்ஶாகர்ஷிணீ வாழ்வளிக்கும் அன்னையே, உன் அதிர்வுகொண்ட குரலெனும் விரிந்த பரப்பில் அகவெளி என்றும் அண்டவெளி என்றும் பகுப்பேதும் இல்லை. அறிவெல்லை கடந்த உன் ஒளி உள்ளுறை ஆற்றலென இறங்கி இவ் இயலுலகில் உள்ளவற்றை எல்லாம் உயிர்ப்பு கொள்ளச் செய்கிறது. உடலின் சுவாசக் கருவி மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகையில் உடல் ஆற்றல் பெற்று தன் செயல்களையெல்லாம் ஆற்றுகிறது. அதுபோலவே, இம் முழு உலகுக்கெனவும் நீ சுவாசிக்கிறாய். உண்மையில் அங்கு ஒரு ஆளென நீ இல்லை. எமது நாடிகளிலும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 13

ஸௌந்தர்யலஹரீ – 13

நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜட*ம் தவாபாங்காலோகே பதிதமனுதா*வந்தி ஶதஶ: கலத்வேணீபந்தா*: குசகலஶவிஸ்ரஸ்தஸிசயா ஹடா*த் த்ருட்*யத்காஞ்ச்யோ விகலிததுகூலா யுவதய: பாடல் – 13 அருள்நிறை அன்னையே,  உன் அருட்பார்வை ஒருவன் மீது பட்டுவிட்டால் அவன் கிழவனென்றாலும், முரடனென்றாலும் கலவியின்பம் தூண்டத்தெரியாதவன் என்றாலும் நூற்றுக்கணக்கான கன்னியர்  கிளர்ச்சிகொண்டு அவன்பின் செல்கின்றனர் மோகத்தில் நாணம் துறக்கின்றனர் கூந்தல் அவிழ்ந்து கலைவதை கொழுமுலைமேலிருந்து ஆடை நழுவுவதை அரைக்கச்சவிழ்ந்து வீழ்வதை அவர்கள் உணர்வதுமில்லை ** பன்னிரண்டாவது பாடலை முழுமை செய்யும் பாடல் இது.… Read More ஸௌந்தர்யலஹரீ – 13

ஶ்ரீசக்ர தியானம் – 12

ஊம் ரூபாகர்ஷிணீ மூவுலகையும் எழிலூட்டும் அன்னையே, காலைநேரப் பகலவன் ஒளியூட்டும் பனித்துளிகள் எண்ணற்றவை. நண்பகலில் அதே சூரியன் விடிகாலையில் தோன்றிய உலகிலிருந்து மிகவும் வேறுபட்ட உலகொன்றை காட்டுகிறான். ஞாயிறு மறைவதற்கென வானம் மீண்டும் செந்நிறம் பூசப்படுகிறது. நிலவு உலகின் அழகுக்கு வேரொரு பரிமாணம் அளிக்கிறது. சின்னஞ்சிறியனவாய் தோன்றினாலும் எண்ணற்ற விண்மீன்களால் நிரம்பிய வானம் ஈடிணையற்றதாக இருக்கிறது. இப்படி பலவண்ணக் கருக்களைக் கொண்டது உன் எழில். பலதரப்பட்டவை என்றாலும் அவற்றில் உள்ன அழகு ஒன்றேதான் – பல ஆடிகளில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 12

சௌந்தர்யலஹரீ – 12

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும் கவீந்த்ரா: கல்பந்தே கத*மபி விரிஞ்சிப்ரப்*ருதய: யதாலோகௌத்ஸுக்யாதமரலலனா யாந்தி மனஸா தபோபி*ர்துஷ்ப்ராபாமபி கிரிஶஸாயுஜ்யபதவீம் பாடல் – 12 பனிபடர்ந்த இமையவன் மகளே, உமையே, இணையிலா உன் எழிலை  பிரம்மனும் பிருஹஸ்பதியும் போன்ற மாகவிகளாலும் பாடிவிட இயலாது பிரம்மனும் பிறரும் தம் படைப்புகளில் உன் அழகை கொண்டுவர கடும் முயற்சி செய்கின்றனர் உன் இணை இறையான சிவன் மட்டுமே காணக்கூடிய உன் எழிலை கண்டுவிட வேண்டுமென்ற ஒற்றை விழைவுடன் சிவனுடன் இணைவதற்கு கடுந்தவம் புரிகின்றனர்… Read More சௌந்தர்யலஹரீ – 12