ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

பல மத ஸாரவும் ஏகமெந்நு பாராது உலகில்  ஒரானயில் அந்தர் என்னபோலே பல வித யுக்தி பறஞ்ஞு பாமரன்மார் அலவது கண்டு அலயாது அமர்ன்னிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 44) மதங்கள் பல சொல்வது ஒன்றென்றறியாது மத்தமா விளக்கிய குருடர் போல பாமரர் பகரும் பலவும் கேட்டு  அலைவுறாது அமைந்திடல் வேண்டும் * இது எளிய பாடலாக தோன்றக் கூடும்.  ஆனால் முந்தைய பாடலோடு ஒரு நுட்பமான தொடர்பு இதற்கு உள்ளது. 41-ஆவது பாடலில், ‘இது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 43

ப்ரக்ருதி பிடிச்சு சுழற்றிடும் ப்ரகாரம் ஸுக்ருதிகள் போலுமஹோ சுழன்னிடுன்னு விக்ருதி விடுன்னதினாயி வேல செய்வீ லக்ருதி ஃபலாக்ரஹமற்றறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 43) நற்செயல் புரிவோரும் இயற்கையின் பிடியில் சிக்கிச் சுழல நேரிடும் விடுதலை தராது செயலற்றிருத்தல்  பலனதை எதிர்பாராததே நலம்  * இந்திய தத்துவத்தின் மையப்போக்கில் உள்ள ஆறு சிந்தனை அமைப்புகளை சாங்க்யம்-யோகம், ந்யாயம்-வைஶேஷிகம், பூர்வ மீமாம்ஸம்-உத்தர மீமாம்ஸம் என்ற மூன்று இணைகளாகக் கொள்ளலாம்.  கபிலர் முன்வைத்தது சாங்க்யம். எண்ணுவதும், வகைப்படுத்துவதும் அதை பின்பற்றுவோர்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 43

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 42

இதமறிவென்னதிலாத்யமா மிதென்னு ள்ளது ஸம, தன்றெ விஶேஷமாணு போதம்; மதி முதலாயவயொக்கெ மாறி மேல் ஸத் கதி வருவானிதினெப்பஜிச்சிடேணம்                    (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 42) ‘இது அறிவு’ என்பதில் முதலில் வரும் இதென்பது நிகராம்தன்மை அதன் தகுதிப்பாடு விழிப்புணர்வு அறிவென்பதெல்லாம் மறைந்து மெய்வழி அடைய ‘இத’னை எப்போதும் வணங்கிடல் வேண்டும் * ஒரு பொருளும் அதன் தகுதிப்பாடும் முன்வைக்கப்படும்போது நிகழும் கருத்தாக்கமே அடிப்படையானது. ஒரு பொருள் முன்வைக்கப்படும்போது, ‘இது என்ன?’ என்கிறோம். ஒரு முடிவெடுத்து அதற்கு… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 42

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 41

இது குடம் என்னதில் ஆத்யமாம் இதென்னு ள்ளது விஷமா, குடமோ விஶேஷமாகும் மதி முதலாய மஹேந்த்ரஜாலமுண்டா வதினிதுதான் கருவென்னு கண்டிடேணம் (ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 41) ‘இது குடம்’ என்பதில் முதலில் வரும் இது என்பது அறிவதற்கரியது, குடம் என்பது தகுதிப்பாடு அறிவினைப்போன்ற  பெருமாயம் நிகழ இதுவென்பதே கருவாவது கண்டிடவேண்டும் * இது மிக எளிய பாடலாகத் தோன்றலாம். ஆனால் இது குறியியலின்  (semiosis) மொத்தச் செயல்பாட்டையும் சில சொற்களில் தொகுத்துக் கூறிவிடுகிறது. நனவு, தொடர்புறுத்தக்கூடிய… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 41

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 31

அனுபவமாதியிலொன்னிரிக்கிலல்லா தனுமிதியில்லிது முன்னமக்ஷியாலே அனுபவியாததுகொண்டு தர்ம்மியுண்டெ ன்னனுமிதியாலறிவீலறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 31) [அனுபவம் ஆதியில் ஒன்னிரிக்கிலல்லாதெ அனுமிதியில்ல இதுமுன்னமக்ஷியாலே அனுபவியாததுகொண்டு தர்ம்மியுண்டென்னு அனுமிதியால் அறிவில் அறிஞ்ஞிடேணம்] முன்னனுபவமின்றி அனுமானமில்லை முன்னம் இதை கண்டதில்லை என்பதனால் தர்ம்மி அனுமானத்தால் அறியப்படுவதில்லை என்பதறிந்திடல் வேண்டும் * இனி நாம் காண இருக்கும் மூன்று பாடல்கள் நமது மெய்த்தேட்டத்தில் நமக்கு உதவக்கூடிய வழிமுறையை அளிப்பவை. நாமிருக்கும் உலகு குறித்து மூன்று அடிப்படை கேள்விகள் நமக்கு எழக்கூடும்? ‘பொருள் என்பது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 31

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 30

ஜடமறிவீலறிவின்னு சிந்தையில்லோ திடுகயுமில்லறிவென்னறிஞ்ஞு ஸர்வம் விடுகிலவன் விஶதாந்தரங்கனாய் மே லுடலிலமர்ன்னுழலுன்னதில்ல நூனம்                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 30) அசைவற்றது அறிவதில்லை; அறிவுக்கோ எண்ணமில்லை அது ஏதும் உரைப்பதுமில்லை; அறிவே அனைத்துமென்றறிந்தபின்  அகம் எல்லையிலாது விரிகிறது  அகம் விரிந்தவன் உடலுள் சிறைப்பட்டுழலுவதில்லை * தாயின் கருவறைவிட்டு இவ்வுலகிற்கு வரும் குழந்தை அளவுக்கதிகமான வெப்பத்தையும், தண்மையையும், ஒளியையும்தான் முதலில் எதிர்கொள்கிறது. பிறவி என்பதே வலிமிக்கது. குழந்தை பெரும் அழுகையுடன்தான் இந்த உலகிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. குழந்தையின் தொடக்ககால நடத்தைகளில்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 30

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன் தன்னுருவிலுமொத்து புறத்துமுஜ்வலிக்கும் கருவினுகண்ணுகளஞ்சுமுள்ளடக்கி தெருதெரெ வீணு வணங்கியோதிடேணம் [ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 1] அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் ஒளிரும் கருவினை புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம் * ‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல்.  செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப் புலனுணர்வு மூலமோ அறிவது.  உங்களது விழிப்புணர்வு ஒரு நனவோடை போல உங்களில் கடந்து செல்வதை கவனியுங்கள்.  உங்களை அறிபவனாக இனம் காணுங்கள்.  உதாரணமாக, “நான்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

வேண்டுதல்கள் – 1

மெல்லிய உத்தரவாதம்   இதமானது உன் ஆன்மா நீலநிற ஏரியைப்போலும் அமைதியானது உன் கருணையின் ஆழத்திலிருந்து எழுகின்றன உன் எண்ண அலைகள் மலரும் நாளைக்கான நம்பிக்கை இன்றைய வலிமைக்கான மெல்லிய உத்தரவாதம் உன் மௌனப் புன்னகையின் ரகசியத்தை மட்டும் கற்க வேண்டும் நான்  

கவிதைகள்

இன்று சற்று முந்தி வந்த சூரியன் என் ரோஜாவின் இதழ்களுக்குள் தன் பொற்கதிர்களால் நறுமணத்தை நிரப்பியது நான் உன்னைத் தேடினேன் நீ உறங்கிக் கொண்டிருந்தாய் மாசு மறுவற்ற ஏதோ ஆழத்தில் மூடிய கண்களுடன் —  வெட்கத்தால் என் தலை கவிழும்படி மனம் மயக்கும் ஒரு புன்னகையே உனது பதில்  —  ஆனால் படிகம் போல தெளிவாகவும் துல்லியமாகவும் நீயிருக்கும்போது நான் என்ன செய்ய முடியும் – ஒரு புத்தனைப்போல புலன்கள் அணையும் ஆழத்திற்கு மெளனமாக திரும்பிச் செல்வதைத்… Read More கவிதைகள்

இந்து மதம் – ஒரு விவேகிக்கான வழிகாட்டி

AN INTELLIGENT MAN’S GUIDE TO THE HINDU RELIGION சொல்புதிது வெளியீடு (தமிழாக்கம் : கெ.பி. வினோத்) 1. அறிமுகம் 2. நமது கோயில்கள் 3. கடவுளரும் வாகனங்களும் 4. கணபதி 5. சரஸ்வதி 6. சுப்ரமணியன் 7. மகாவிஷ்ணு 8. சிவன்