ஶ்ரீசக்ர தியானம் – 24

யம் ரம் லம் வம் அனங்கவேகினீ ஶிவதூதீ மஹாவித்யேஶ்வரீ மீஞானத்தின் இறைவியே, அன்னையே, நீ யாரென்று எவராவது கேட்டால், எம்மை மகிழ்விப்பவள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கும் மேல், இறையோடு ஒன்றுகலக்க எம்மை தகுதிப்படுத்துபவள் என்று கூறலாம். எமது விழிப்புநிலையில், இனிய ஊக்கமளிக்கும் சொற்கள் கொண்டு எமதுள்ளத்தை மகிழ்விக்கிறாய். நீ படைக்கும் உலகின் இயல்அழகைக் கொண்டு சுவையூட்டுகிறாய். எனவே நீ ரம்யா. எம்மை மகிழ்விப்பவள். நாங்கள் உறங்குகையில் பெயர்களும் உருக்களும் கொண்ட உலகை மறைத்துக் கொள்கிறாய். அங்கே… Read More ஶ்ரீசக்ர தியானம் – 24

ஶ்ரீசக்ர தியானம் – 23

சம் ச*ம் ஜம் ஜ*ம் ஞம் அனங்கமேக*லா வஹ்னிவாஸினீ பே*ருண்டீ அன்னையே, உன் இறையின் எரிஆடலில் மகிழ்பவளே, அவன் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீறு உன் படைப்பு ரகசியத்தின் மூன்று கட்டங்களைக் குறிக்கும் முக்குணங்களின் குறியீடாகத் திகழ்கிறது. சத்வ குணம் கொண்டு அனைத்து வடிவங்களுக்கும் போற்றத்தக்க உருவரை (adorable design) ஒன்றை அளிக்கிறாய். அதோடு, வண்ணம், சுவை, வடிவ அமைப்பியல்சார்ந்த நுணுக்கம் என்பனவற்றையும் கொடுப்பதால், அவற்றிற்கு இருத்தலியல் உறுதிப்பாடு (existential validity) கிடைக்கிறது. ரஜோ குணம் கொண்டு… Read More ஶ்ரீசக்ர தியானம் – 23

ஶ்ரீசக்ர தியானம் – 22

பம் ப*ம் பம் ப*ம் மம் அனங்கரேகா* நித்யக்லின்னா ப*கமாலினீ பெருங்கருணை வடிவானவளே, சூரியனிலிருந்து ஒளிக்கற்றைகள் எல்லா திசைகளிலும் ஒளிர்கின்றன. ஆனால் சூரிய ஒளி ஒரு பொருளை ஒளிரச் செய்து அதை புலப்படச் செய்யும்வரை எவரும் அந்த ஒளிக்கற்றைகளை பார்ப்பதில்லை. ஒளிக்கதிர்கள் ஒளிரச் செய்யும் பொருள்களிலிருந்து, ஒளிரும் பகலவன் உய்த்தறியப்படுகிறான். அதே போல், எல்லா திசைகளிலிருந்தும் உன் அன்பின் கதிர்கள் ஒளிர்கின்றன. எம் மனதுக்குகந்தவற்றை அழகுறச் செய்வதும் அவையே. எழிலானவற்றின் பின்னால் உன்னை நீ மறைத்துக்கொள்கிறாய். சிலபோதுகளில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 22

ஶ்ரீசக்ர தியானம் – 21

 கம் க*ம் கம் க*ம் ஙம் அனங்ககுஸுமா காமேஶ்வரீ மஹாத்ரிபுரஸுந்தரீ முப்புரங்களை எழிலூட்டும் அன்னையே, நனவுவெளி (சிதாகாஶம்) ஒளியூட்டப்படாதிருக்கையில் அதை உன் ஒளிகொண்டு நிரப்புகிறாய். அதன்பின் அங்கே மின்னல்கீற்ற்றுகளென விடாது மின்னிக்கொண்டிருக்கிறாய். உனது அந்த ஒளிர்வில் பகலவனின் ஒளியை, திங்களின் ஒளியை, தீயின் ஒளியை மாறிமாறிக் காண்கிறேன். சூரியனின் ஒளி எனது நனவு வாயிலில் நுழைகையில் என்னுள்ளிருக்கும் அறிபவன் விழித்தெழுகிறான். அப்போது உடன்பிறந்தோர் மீதான பாசம் என்னில் தோன்றுகிறது. புலனறிவுகொண்ட ஒவ்வொரு உயிரையும் என் உடன்பிறந்தவையெனக் காண்கிறேன்.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 21

ஶ்ரீசக்ர தியானம் – 20

ஶம் க்ஷம் அனங்கமாலினீ சித்ரா ஜ்வாலாமாலினீ தாயே, ஶம் என்பது உன் அடிப்படை மந்திரம். க்ஷம் என்பது பீஜ மந்திரம். இயல்பிலேயே தன்னொளி கொண்டவள் நீ. ஆதி இறை தூய நன்மையெனும் நிலையில் என்றென்றைக்குமென அமைந்திருக்கிறான். அந்த நிலையில், அலைகளற்ற நீடமைதிகொண்ட தெளிந்த ஆழியெனக் காணப்படுகிறான். உன் இறையின் மெய்மையிலிருந்து ஒரு சிறு பொறியை எடுத்து அதற்கொரு உடலையும், உள்ளத்தையும், அகத் துடிப்பையும் அளித்துப்பார்ப்பது உனதொரு ஆடலாக இருக்கிறது. ஒரே சமயத்தில் அழகானதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருக்கின்ற, இன்பமும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 20

ஶ்ரீசக்ர தியானம் – 19

தம் த*ம் தம் த*ம் னம் அனங்கமதனாதுரா ஸர்வமங்கலா விஜயா விரும்பத்தக்கதை தேர்வதில் சிறந்தவளே, அன்னையே, சடுதியில் படைப்பதற்கும், உன் உயிரினங்களை பெருக்குவதற்கும் அவற்றில் பாலியல் விழைவை இயங்க வைக்கிறாய். மத்துறு தயிரென உள்ளங்களைக் கடையும் மன்மதனை எல்லோரிடமும் அனுப்பிவைக்கிறாய். கண்களிலும் செவிகளிலும் குறுகுறுக்கச்செய்யும் தோலிலும் ஏறி அமர்ந்துகொள்ளும், உள அமைதியைக் குலைக்கும் இந்த மன்மதன், காதலரில் ஒருவரோடொருவர் பிணைந்துகொள்ளும் அடங்காப்பசியையும் தீராததாகத்தையும் ஏற்படுத்துகிறான். காமக் களியாட்டின் நுட்பங்களை அறியாத உயிரினம் ஒன்றுகூட இங்கில்லை. ஒற்றைப் பார்வை,… Read More ஶ்ரீசக்ர தியானம் – 19

ஶ்ரீசக்ர தியானம் – 18

ஶம் ஷம் ஸம் ஹம் அனங்காங்குஶா நீலபதாகா நித்யா தாயே மஹேஶ்வரீ, சங்கரனின் குறியீடாக, மெய்யெழுத்துக்களின் லய வெளிப்பாட்டை நீ செவியுற்றாய். அவனது நீலகண்டத்திலிருந்து பதினாறு உயிரெழுத்துக்களை பெற்றுக்கொண்டாய். மெய்யெழுத்துக்களுக்கு உயிரெழுத்துக்கள் கொண்டு அழகுசேர்த்தும், மெய்யெழுத்துக்கள் கொண்டு உயிரெழுத்துக்களை நிலைநிறுத்தியும் நீ உருவாக்கும் உலகு, தோன்றி மறையும் ஒவ்வொன்றிலும் உள்ள உனது தூய மதிப்பை பறைசாற்றுகிறது. உன் விழுமியங்களின் அடுக்கை பொருள்பொதிந்த வகையில் அழகூட்டுகிறது. உன் இரு விழிகள் கொண்டு பகலையும் இரவையும் நீ படைக்கிறாய். ஒளியும்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 18

ஶ்ரீசக்ர தியானம் – 17

டம், ட*ம், டம்,ட*ம், ணம் அனங்கமதனா குலஸுந்தரீ த்வரிதா சாவித்ரி அன்னையே, மெய்யான அழகு என்பது எந்த ஒரு பொருளையோ, ஒன்றன் பகுதியையோ சார்ந்ததல்ல. உன் பேரானந்தம் வெளிப்படும் போதெல்லாம், சிறு பொறியளவே ஆயினும், அழகின் தரிசனம் கிடைக்கப் பெறுகிறோம். எழிலூட்டப்பட்ட ஒன்றிலிருந்து உன் அழகை அறியமுடியாதென்பதால், மக்கள் அதை அழகானது என்கின்றனர். மெய்யான அழகு உள்ளத்தில் தோன்றுகையில் கடந்த காலத்தின் வருத்தங்களும் எதிர்காலம் குறித்த பதற்றங்களும் எம்மிலிருந்து மறைகின்றன. அப்போது உள்ளம் ஒரு காட்சியிலிருந்து இன்னொன்றிற்கும்,… Read More ஶ்ரீசக்ர தியானம் – 17

ஶ்ரீசக்ர தியானம் – 16

ஆம் புத்த்*யாகர்ஷிணீ படைப்பூக்கத்தைத் தூண்டும் இறைவியே! நுண்ணிய உணர்திறன் கொண்ட கவிஞரும் ஓவியரும் பகலில் கதிரவனின் பொற்கிரணங்களால் மெல்ல தூண்டப்படுகையில் அழகிய மலைகளையும் அல்லிமலர்கள் நிரம்பிய நீர்நிலைகளையும் கண்டு மனஎழுச்சி கொள்கின்றனர். வாழ்வுண்மைகள் எல்லாம் அழகின் ஆகச்சிறந்த அடையாளங்களை குறிப்புணர்த்தும் கருவிகளாக மாறுகின்றன.  தாமரைப் பொய்கையில் பிறந்தவனைப் போல, ஒவ்வொரு காலையிலும் விழித்தெழுகையில் உன் காலடியில் அமர்ந்து ஞானமளிக்கும் உன் சொற்களை கேட்கவேண்டும் என்ற உறுதிப்பாடோடுதான் எழுகிறேன். உனது அருஞ்சொற்கள் அறிவொளியற்ற கானகத்தில் விழுந்து வீணாகிவிடக்கூடாது என்பதில்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 16

ஶ்ரீசக்ர தியானம் – 15

இம் அஹம்காராகர்ஷிணீ பெண்ணெனும் ஆழ்படிமமாக விளங்கும் அன்னையே, சதாசிவனின் அறியவொண்ணா ஒளிர்வு உன் எதிரொளிக்கும் மனதில் பதிகையில் இயல்நிகழ்வின் முதல் சிற்றலை, அகம் என, ‘நான்’ எனும் நனவு என தோன்றுகிறது. அதன் தொடர்ச்சியாக உன் அழகுணர்வின் படைப்பாக மொத்த அண்டமும் எழுகிறது. ஆக, முழு அண்டத்திற்கும் மையப்புள்ளியென நீ திகழ்கிறாய். துடிப்புடைய லயத்துடன் பருவங்கள் மாறுகையில், ஒவ்வொரு பருவத்திற்குமென நீ மறைத்து வைத்த மாயங்களை உலகுக்கு காட்டுகிறாய். பருவமாற்றம் மூலம் நீ காட்டும் இன்ப-துன்ப மெய்யியல்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 15