ஶ்ரீசக்ர தியானம்

ஶ்ரீசக்ரம் என்பது பிரபஞ்ச அமைப்புக்குள் ஒருவரது இயக்கத்தை ஆதிமொழி வழியே விளக்குவது. இந்த வரைபடத்தில் (யந்த்ரம்) உள்ள மேற்சுட்டி நிற்கும் நான்கு முக்கோணங்கள் முழுமுதல் ஆன்மாவை அல்லது பிரபஞ்ச நனவை (புருஷன்) குறிப்பன. கீழ்சுட்டி நிற்கும் ஐந்து முக்கோணங்கள் ஐம்பெரும் மூலப்பொருட்களால் ஆன இயற்கையை (ப்ரக்ருதி) குறிப்பவை. மெய்மையின் எந்தக் கூறையும் முழுக்க முழுக்க உடல்சார்ந்ததாகவோ, முழுமையாக ஆன்மா சார்ந்ததாகவோ பார்க்க முடியாது எனும்படி அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இதழ்களால் அமைந்த இரண்டு வட்டங்கள் முழுமையாக மலர்ந்த… Read More ஶ்ரீசக்ர தியானம்

ஶ்ரீசக்ர தியானம் – 53

ஸௌம் நிறைவளிக்கும் அன்னையே! எம்மை தளைப்பதற்கும் எமக்கு மீட்பளிப்பதற்கும் உரிமை கொண்டவள் நீ. உன் விருப்பம் அதுவென்றால், இன்றுடன் எமது வாழ்வெனும் ஆடல் முடிவுக்கு வரும். அவ்வாறில்லையெனில், எமது பெற்றிக்கேற்ப இன்னொரு உருமாற்றச் சுழற்சிக்குள் செல்வோம். தளைப்பதற்கும், உருமாற்றச் சுழற்சிக்கும் என ஒரு விதியை (tribasic law) வைத்திருக்கிறாய். ஆன்மாவை, முழுமையான விடுதலை கொண்ட அதன் ஆட்சிப்பீடத்தில் மீண்டும் நிறுவுவதற்கு வேறொரு விதியை வைத்திருக்கிறாய்.  படைப்பெனும் விண்மீன் கூட்டத்தில் பல மும்மைகள் உன்னால் வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக இறைக்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 53

ஶ்ரீசக்ர தியானம் – 52

ஹ்ரீம் அறுதி மீட்பளிக்கும் அன்னையே! பிறப்பும் இறப்பும் வாழ்வெனும் நாடகத்தின் இரண்டு புறக்கோடிப் புள்ளிகளை குறிக்கின்றன. திரை விலக, முதற்காட்சியாக, குழந்தை இவ்வுலகில் வந்து பிறக்கிறது. தோற்றம் எனும் மிகச்சிறந்த நிகழ்வாக இது அமைகிறது. புலனுணர்வும், மதிப்பீடும், செயலாற்றும் உறுதிப்பாடும் கொண்டு, எண்ணற்ற சாத்தியங்களை உள்ளடக்கிய முழுமையான வடிவுகொண்ட ஒருவர் காலமும் வெளியும் கொண்ட உலகில் வந்து பிறக்க நீ என்னென்ன முன்னேற்பாடுகளை செய்கிறாய்? அறிவிற்சிறந்த மானுடர் பல்லாயிரம் வருடங்களாக இந்த ரகசியத்தை கண்டுவிட முயன்றுகொண்டிருக்கின்றனர்.  வாழ்வின்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 52

ஶ்ரீசக்ர தியானம் – 51

ஐம் வாழ்வெனும் நாடகத்தை ஆட்டுவிக்கும் அன்னையே! உலக நாடகம் எனும் உனது பேராடலின் ரகசியத்தை புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதன் கருத்தாக்கம், நடிகர்களின் பங்கு, பங்குகொள்வோரில் அது ஏற்படுத்தும் தாக்கம் என்ற மூன்று நிலைகளையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். ஒரு புள்ளியிலிருந்து (பிந்து) பெரும் அண்டத்தை உண்டாக்கும் உனது பிரபஞ்ச லீலையை ஆடுகிறாய். இவ்வுலகே வாழ்வெனும் நாடகம் (கலை) நிகழும் அரங்காக அமைகிறது. முளைவிடும் இலையின் ஊட்டத்தை பகிர்ந்துகொள்ளும் இரு விதைக்கதுப்புகளை போல உனக்கும் உன் இறைவனுக்கும் இடையிலான முதல்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 51

ஶ்ரீசக்ர தியானம் – 50

ஶ்ரீம் அருள்தருமன்னையே, தோரணவாயில் எழுப்புகையில் முதலில் மையக்கல் செங்குத்தாக வைக்கப்படுகிறது. பின் அதைத்தாங்கும் கற்களோ செங்கற்களோ முதலில் கிடைமட்டத் துவக்கத்தில் தொடங்கி ஒவ்வொன்றும் சிறிது சாய்ந்தபடி அடுக்கப்பட்டு முழுமையான வளைவு உண்டாகும்படி வைக்கப்படுகின்றன. முத்துமாலையில் முகப்பு நடுவே வைக்கப்படுகிறது. மையமாக உள்ள அருமணியின் அழகை உயர்த்திக்காட்டும்படி மற்ற மணிகள் அமைகின்றன. ஒவ்வொரு முத்தும் அருமணியும் ஒன்றையொன்று முழுமை செய்தபடி மாலையை ஆகச்சிறந்ததாக ஆக்குகின்றன. அரசவிருந்தில் மன்னரோ, குடியரசுத் தலைவரோ அரியணையிலோ மைய இருக்கையிலோ அமர்கிறார். மற்ற விருந்தினர்கள்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 50

ஶ்ரீசக்ர தியானம் – 49

ௐ இங்கு-இப்போது நாங்கள் காலூன்றி நிற்க ஒரு நிலத்தை நல்கியுள்ளாய். செயல்படுவதற்கு ஒரு களத்தையும், எய்துவதற்கு ஒரு இலக்கையும் அளித்துள்ளாய். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கென தனிப்பட்ட வடிவமும், சிறப்புப் பெயரும் கொண்ட தனி அடையாளம் ஒன்றுள்ளது. ஒரு ஆசிரியரைப் போல, எதிர்பார்ப்போடு எமது கண்களை பார்க்கிறாய். உனது கட்டளைகளை சிறிதும் பிறழாமல் நாங்கள் நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கிறாய். எமக்கு வழிகாட்டும் விண்மீனை உன் கண்ணில் காண்கிறோம். எமக்கொரு வாய்பாட்டுச் சுவடி போலிருக்கிறாய் நீ. நாங்கள் தவறிழைக்க விரும்பவில்லை. எனவே… Read More ஶ்ரீசக்ர தியானம் – 49

ஶ்ரீசக்ர தியானம் – 48

ப*ம் ஸர்வஸௌபா*க்யதாயினீ அன்னையே, எமது மெய்யான வளம் நீயே. அக்கறைகொண்ட உன் வழிகாட்டலின்படி வாழ்ந்து எமது திறன்களையும், அறிவையும், ஞானத்தையும் வளர்த்துக்கொண்டுள்ளோம். எமது வழிகாட்டியென ஞானமே இருக்குமென்றால் அதைவிடச் சிறந்த நல்லூழ் என்ன இருக்க முடியும்? இக்கணத்தில் நாங்கள் மகிழ்கிறோம். அது, ஆன்மாவின் ஆழ் அமைதியைக் கண்டடைந்தவனின் பாடலைக் கேட்பதுபோலுள்ளது. எமது கடந்தகாலம் உனது சூரியனுடன் வாழ்வது போன்றது என்றால், எமது நிகழ்காலம் உனது நிலவுடன் வாழ்வது போன்றது. கடந்தகாலமும் நிகழ்காலமும் இறுதியில் எதிர்காலத்தோடு நிறைவடையவேண்டும். எதிர்காலம்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 48

ஶ்ரீசக்ர தியானம் – 47

பம் ஸர்வாங்கஸுந்தரீ நிலையழியச் செய்யும் அழகன்னையே, சூரியன் உலகின் கண் எனப்படுகிறது. கண் ஆன்மாவின் சூரியன் எனப்படுகிறது. உன் படைப்புகளிலெல்லாம், காண்பவருக்கும் காணப்படுவதற்கும் இடையில், அகத்திற்கும் புறத்திற்கும் இடையில் எதிரிடையான இருதுருவத் தன்மையை வைத்திருக்கிறாய். பார்க்கப்படும் பொருளில் கண்ணுக்குப் புலனாகும் புள்ளிகள் அனைத்தையும் நோக்கி எய்யப்படும் அம்பைப் போலவே நோக்கும் செயலில் கவனம் எனும் அம்பு கண்களில் இருந்து எய்யப்படுகிறது. வில்லாளனின் கவனமே அவன் எய்யும் அம்பின் துல்லியத்தை குறிக்கிறது. தற்காத்துக் கொள்ளலில் வில்லும் அம்பும் அவசியமானவை.… Read More ஶ்ரீசக்ர தியானம் – 47

ஶ்ரீசக்ர தியானம் – 46

ப*ம் ஸர்வவிக்*னநிவாரிணீ எங்கும் நிறை அன்னையே, சிவனையும் சக்தியையும் விரும்புவோர் தம் இதயத்தில் நாடுவது உன்னையே. உடல்கள் பல என்றாலும், அனைத்திலும் சிவன் உறைகிறான். உயிர்கொண்ட அனைத்து ஜீவராசிகளும் தம் கைகால்களை அசைக்கவும் சுவாசிக்கவும் தேவையான ஆற்றலில் நீ திகழ்கிறாய். பிறைநிலவைச் சூடியதால் உன் இறைவன் கலாதரன் எனப்படுகிறான். நிலத்தில் அமர்ந்த சிவனின் சடைமுடி பிறைநிலவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒரு புதிர்தான். அவன் முழுவதும் அவனல்லன், நீயும் அவனில் திகழ்கிறாய். உனது நெற்றியே பிறைநிலவைப்போல் ஒளிவீசுகிறது. இறையுருவை முழுமைபெறச்… Read More ஶ்ரீசக்ர தியானம் – 46

ஶ்ரீசக்ர தியானம் – 45

பம் ஸர்வம்ருத்யுப்ரஶமனீ அழகிற்சிறந்த அன்னையே! ஞானியர் உன் இறைவனை மெய்யென்றும், பேரின்ப அமைதி என்றும், அழகென்றும் (சத்யம், சிவம், சுந்தரம்) வர்ணிக்கின்றனர். உன்னை அவனிடமிருந்து பிரிக்கவியலாது என்பதால்தான் அவனது பரிமாணத்தின் உச்சமாக அழகு சேர்க்கப்பட்டுள்ளதோ? மெய்யியலாளர், நம்பகத்தன்மை கூடிய உண்மையை தேடிக்கொண்டே இருக்கின்றனர். ஊழ்கத்தில் அமைவோர் பேரானந்தத்தில் கரைந்துபோகும்படி தம்மை ஒழுங்கமைத்துக் கொள்கின்றனர். ஆனாலும், அழகின் தரிசனம் தரும் இன்பத்தை இவ்வுலகில் உள்ள எதுவும் அளிப்பதில்லை. பேரானந்தமும் மெய்மையும் அழகில் உறைகின்றன என்பதுதானே இதன் பொருள்?   ஒன்று… Read More ஶ்ரீசக்ர தியானம் – 45