நடராஜ குருவும் நானும் – 10
நாங்கள் பெங்களூரை அடைந்தவுடன், “நீ மீண்டும் பேசத்தொடங்காததால், உன்னை அழைத்துக்கொண்டு நகரைச் சுற்றுவது சரியல்ல” என்றார் குரு. வழக்கமாக குமார் மற்றும் சேகரன் இவர்களின் வீட்டிற்குச் செல்லும் குரு அதைத் தவிர்த்து ஜெயநகரில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அவர் கதவைத் திறந்தவுடன் ஒரு விமானம் அவ்வறையில் இருந்து கிளம்புவதுபோல் ‘ம்ம்ம்…’ என்னும் பேரொலி எழுந்தது. என்னால் நான் காண்பதை நம்பமுடியவில்லை – எங்களைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக கருமேகம் போல் கொசுக்கூட்டம்! … Read More நடராஜ குருவும் நானும் – 10