அன்பும் ஆசிகளும்

1948-ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் நான் முதன்முறையாக ரமணமகரிஷியைப் பார்க்கச் சென்றேன்.  டாக்டர். மெஸ் அவர்களின் (சாது ஏகரஸர்) குரு அவர் என்பதால் எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. செல்லும் முன்னால் அவரைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அப்படிப்பட்ட மகானைப் பார்ப்பது வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று எண்ணியிருந்தேன். திருவண்ணாமலை மிகவும் வெப்பமான இடம். ஒருவரால் அந்த இடத்தில் இலகுவாக உணர்வது சிரமம். ஆசிரமத்தில் இருந்த ரமணமகரிஷியைக் காணச் செல்லும் முன்பு, தவமிருந்த அவருடைய ஆரம்ப… Read More அன்பும் ஆசிகளும்

பொருந்தாத மகுடம்

பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன்.  முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன்.  கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன்.  விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன்.  ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு… Read More பொருந்தாத மகுடம்

நடராஜ குருவும் நானும் – 12

குரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார்.  அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம்.  குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது.  சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி.  வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தார் குரு.  என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம்.  எங்களைப்… Read More நடராஜ குருவும் நானும் – 12

நடராஜ குருவும் நானும் – 11

சரியாக நாற்பத்தியோராம் நாள் குரு திரும்ப வந்தார்.  குரங்குகளால் நான் பட்ட கஷ்டங்களை ஏற்கனவே அவருக்கு நான் எழுதியிருந்தேன்.  இதற்காக அவர் தன்னுடன் எடுத்துவந்த வெடிகளை நாங்கள் வெடிக்கும்போது, குரு தனது கைத்தடியை துப்பாக்கி போல் குரங்குகளை நோக்கி நீட்டுவார்.  இந்த தந்திரம் நல்ல பலனைத் தந்தது.  நாங்கள் துப்பாக்கி ஏந்தியவர்கள் என குரங்குகள் எண்ணின.  ஆனால், குருவின் கைத்தடிக்கும் வெடிக்கும் சம்பந்தம் இல்லை என்பது, சில நாட்களிலேயே குரங்குத்தலைவர்களுக்குத் தெரிந்து போனது.  நம் தந்திரத்தை மாற்றி… Read More நடராஜ குருவும் நானும் – 11

நடராஜ குருவும் நானும் – 9

அங்கிருந்து சென்று மெளனத்தில் ஆழ்வது என்ற உறுதியுடன் எனது பொருட்களை எல்லாம் மூட்டைகட்டிக் கொண்டு, குருவை வணங்கி விடைபெறும் எண்ணத்துடன் முன் வாயிலை அடைந்தேன்.  அப்போது, நான் ஏற்கனவே வெறுப்பு கொண்டிருந்த மனிதனை அழைத்து, ‘இவன் என்னுடைய புத்தகங்களை எல்லாம் திருடிக்கொண்டு ஓடப்பார்க்கிறான்.  போலீஸைக் கூப்பிடு” என்றார் குரு.  எனக்கு அளவில்லா கோபம் வந்தது.  என் பைகளை தரையில் வீசி எறிந்து, “இங்கிருந்து எதையும் நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை! எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.  அதற்கு குரு,… Read More நடராஜ குருவும் நானும் – 9

நடராஜ குருவும் நானும் – 8

நான் சென்னைக்குத் திரும்பியபோது, விவேகானந்தா கல்லூரியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி மாணவர்களை எதிர்ப்பில் ஈடுபடச் செய்த்து.  மொத்த கல்லூரியும் வேலை நிறுத்தத்தில் இறங்கியது.  சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு செல்லப்பெயர்கள் உண்டு – மாநிலக் கல்லூரியின் இளவரசர்கள் (Princes of Presidency College), ராணி மேரி கல்லூரியின் ராணிகள் (Queens of Queen Mary), பச்சையப்பாவின் ரெளடிகள் (Rowdies of Pachayappa), கிறித்தவக் கல்லூரியின் கனவான்கள் (Gentlemen of Christian College), விவேகானந்தா கல்லூரியின் சாம்பார்கள் (Sambars… Read More நடராஜ குருவும் நானும் – 8

நடராஜ குருவும் நானும் – 7

இதற்கிடையில், கேரளாவில் ராமகிருஷ்ண மடத்தையும் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவிய சுவாமி ஆகமானந்தா என் கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னை ஒரு கருங்காலி என்றும், கல்லூரியை அழிக்கும் நோக்குடன், பிராமணர்களை வெறுக்கும் டாக்டர் நடராஜனால் நான் அங்கு அனுப்பப்பட்டேன் என்றும் எழுதியிருந்தார்.  இக்கடிதம் சுவாமி நிஶ்ரேயஸானந்தாவிடம் ரகசியமாகக் காட்டப்பட்டது.  அவர் என்னிடம் அதைக் காட்டினார்.  இக்கடிதத்தால், ‘ராமகிருஷ்ண மடத்தில் ஜாதி வெறி இருப்பதாக குரு நினைப்பது தவறோ?’ என்ற என் சந்தேகம் முற்றிலும்… Read More நடராஜ குருவும் நானும் – 7

நடராஜ குருவும் நானும் – 6

அதற்கடுத்த நாள் சென்னையிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது.  உடனடியாக விவேகானந்தா கல்லூரியின் தத்துவத் துறையில் விரிவுரையாளராகச் சேரும்படி கல்லூரியின் மேலாளர் அனுப்பிய தந்தி அது.  குரு மிகவும் மகிழ்ந்துபோனார்.  இம்முறையும் தனது இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்தார்.  சென்னைக்குப் போவதற்கு முன் உடல்நலமில்லாமல் இருந்த என் தந்தையைப் பார்க்கச் சென்றேன்.  பிச்சைக்காரனைப் போலல்லாமல் நான் எப்பொழும் நன்றாக உடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  அதற்காக விலையுயர்ந்த துணியை வாங்கினார்.  ஆனால் அதைத் தைப்பதற்கு நேரம்… Read More நடராஜ குருவும் நானும் – 6

நடராஜ குருவும் நானும் – 5

அதன் எல்லா வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை பராமரித்து வரும் அறுபடா குரு-சிஷ்ய பாரம்பர்யத்தை குரு மிகவும் உயர்வானதாகக் கருதினார்.  ஜான் ஸ்பியர்ஸ் எப்போதும் திருச்சபையை வெறுப்பவர்.  ஆதலால், குரு கத்தோலிக்க திருச்சபையைப் புகழும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து சூடான விவாதம் நிகழும்.  ஜானின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குருவை எப்போதுமே சீண்டியதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன்.  ஜான் சமநிலைக்குத் திரும்பிய பின்னர் குரு திரும்பவும் விவாதத்தைத் தொடர்ந்து தன் கருத்தை தெளிவாக விளக்குவார்.  ஜானுக்கும் குருவுக்கும்… Read More நடராஜ குருவும் நானும் – 5

நேர்காணல் – 1

31.12.95 காலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது.  மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.  நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார்.  விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும்.  யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.  தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன.  காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப்… Read More நேர்காணல் – 1