ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

உலகத்தோர் உறங்குவதையும் விழிப்பதையும் எண்ணுவதையும் உற்றுநோக்கி நிற்கும் ஏற்றப்படாததும் எப்போதும் அணையாததுமான விலைமதிப்பில்லா விளக்கை கண்டறிந்து முன் செல்வோம்.                                                                       (ஆத்மோபதேச சதகம் – பாடல் 5) பிரித்தானிய தத்துவவியலாளர்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

அறிவும் அறிந்திடும் பொருளும் அறிபவன் தன்னறிவும் எல்லாம் முழுமுதல் மட்டுமேயாம் மயக்கம் நீங்கி விளங்கிடும் உயர்வாம் அறிவிலமர்ந்து அதுமட்டுமாதல் வேண்டும்                                                                          (ஆத்மோபதேச சதகம் – பாடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும்                                                                                  [ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

அறம் (தர்மம்)

மனித வாழ்வுக்கு பெரிய அர்த்தம் எதுவும் இருக்கிறதா?  உள்ளதென்றால் அது என்ன?’ நம் காலத்தில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி இது.  சுற்றியுள்ளவர்களின் குடும்ப, சமூக, உலக வாழ்வை அவதானிக்கும் இளைஞர்கள் கேட்பது : ‘வளர்ந்து திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து, குடும்பத்தைக் காப்பது மட்டுமே வாழ்வின் ஒரே நோக்கமாகுமா?’ ‘அர்த்தம்’ என்றால் என்ன? அடித்துப் பறித்து, திருடி, வஞ்சனை செய்து ஏராளமாகப் பொருளீட்டி, வங்கியில் சேமித்து வைப்பது, வாழ்வின் அர்த்தமாகுமா?  மற்றவர்களுக்கு உதவுவதாகக் கூறி போலியாக… Read More அறம் (தர்மம்)

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2

ஆன்மாவும் புலன்களும் உடலும் தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலை பரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின் திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம்.                                                                                    … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

அறிவிலுமேறி அறிஞ்ஞிடுன்னவன் தன்னுருவிலுமொத்து புறத்துமுஜ்வலிக்கும் கருவினு கண்ணுகளஞ்சுமுள்ளடக்கி த்தெருதெரெ வீணு வணங்கி ஓதிடேணம்                           [ஆத்மோபதேச சதகம் – பாடல் 1]   அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை  புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம்   ‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல்.  செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

இருப்பும் அறிதலும் – 3

19-ஆம் நூற்றாண்டின் பெளதிகவாத சிந்தனையின் சிறந்த தொகுப்பாக நாம் ஹோல்பாக் (Holback) எழுதிய ‘இயற்கையின் அமைப்பு’ (System of Nature) என்ற நூலைக் கருதலாம்.  இந்நூல் இன்றுகூட ஒரு கிளாசிக் என்ற எண்ணம் எனக்குண்டு.  கருத்துமுதல் வாதத்தை கடுமையாக எதிர்க்கும் ஹோல்பாக் ‘அது ஒருவிதத்தில் அல்லது மற்றொரு விதத்தில் புலன்களுக்குச் சிக்குவது எதுவோ அதுவே பொருள்’ என்று நிர்ணயிக்கிறார்.  அடுத்த தலைமுறையின் முதன்மையான பெளதிகவாத சிந்தனையாளர் லாப்லேஸ் (Laplace) ஆவார். அவர் வழியாகவே பெளதிகவாதம் ஒரு மெய்காண்… Read More இருப்பும் அறிதலும் – 3

இருப்பும் அறிதலும் – 2

மீண்டும் நுண் அலகு இயந்திரவியலுக்கு வருவோம்.  1927-இல் இயற்பியலறிஞர்கள் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸல்ஸ் நகரில் வைத்து ஒரு சர்வதேசக் கருத்தரங்கு நடத்தினார்கள்.  இங்கு நுண்ணலகு இயந்திரவியலின் இயல்புகள் வரையறுக்கப்பட்டன. பிற்பாடு இது கோபன் ஹேகன் விளக்கம் (Copenhagen Theory) என்று அறியப்பட்டது.  பல்வேறு விளக்கங்கள் பிற்பாடு வந்துவிட்டன என்றாலும் இவ்விளக்கமே பொதுவான அங்கீகாரம் உடையதாக உள்ளது.  இதை ஐன்ஸ்டீன் தொடர்ந்து எதிர்த்தார்.  அறியமுடியாமை என்ற முடிவை விஞ்ஞானத்தின் மீது அது சுமத்துகிறது என்றார்.  முற்றிலும் புரியாததாக உள்ள… Read More இருப்பும் அறிதலும் – 2

இருப்பும் அறிதலும் – 1

மனிதனின் அறிவும், விருப்பமும் எப்படி இருந்தாலும் அவை பொருண்மைகளை எவ்வகையிலும் பாதிப்பதில்லை; அனைத்து அகவய இயக்கங்களிலிருந்தும் விலகி பிரபஞ்சப் பொருண்மை சுதந்திரமாக இருக்கிறது, இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்து மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  அறிதலுக்கு வெளியே என்னதான் இருந்தாலும் அவற்றின் இருப்பு அறிதலினூடாகவே உருவாகிறது.  இருப்பும் அறிதலும் வேறு வேறல்ல. எனவே அந்தரங்க அறிதலும் பொருண்மையும் ஒன்றுதான் என்று கூறும் ஒரு தத்துவ தரிசனமும் வெகு காலமாக மேலை, கீழை… Read More இருப்பும் அறிதலும் – 1

மொழியும் பிரபஞ்சமும் – 3

நமது சொற்புலனில் ஒலி – ஆனந்தத்தை ஆக்கும் மையம் நம்மில் உள்ள விசுத்தி சக்கரம் ஆகும்.  (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரம், அனாகரம், விசுத்தி, ஆக்ஞை, நாதம், பிந்து, சகஸ்ரம் என்று ஒன்பது சக்தி மையங்கள் நம் உடலில் உள்ளன என்று யோக – தாந்திரீக மரபு உருவகித்துள்ளது).  இந்த விசுத்தி சக்கரம் ஆக்ஞை, அனாகதம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் உள்ளது.  நம் உயிர்மூச்சின் சொல்லுக்குரிய மையம் அது. அதன் ஒலி ‘ஹ’ என்பதாகும்.  தாந்திரீக முறைப்படி பிராணன்… Read More மொழியும் பிரபஞ்சமும் – 3