ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15

பரயுடெ பாலுநுகர்ன்ன பாக்யவான்மார்க் கொரு பதினாயிரமாண்டொரல்பநேரம் அறிவபரப்ரக்ருதிக்கதீனமாயா லரநொடியாயிரமாண்டுபோலெ தோன்னும் பரத்தின் பால் நுகர்ந்த பேறுபெற்றோருக்கு பதினாயிரமாண்டென்பது ஒரு கணமே அபரஉலகுக்கு அறிவு அடிமையானாலோ அரை நொடியும் ஆயிரமாண்டாக தோன்றுமே                             (ஆத்மோபதேச சதகம் – பாடல் 15) சிலர் எப்போதுமே ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.  அவர்களுக்கு அழுவதற்கு ஒரு காரணம் வேண்டும்.  அவர்களைச் சுற்றி எப்போதுமே இருள்தான்.  ஆயினும் அவர்களை நாம் கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது.  அவர்களது மனம் மிகவும் நுட்பமானது (tender), பிறரது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14

திரிபுவன சீம கடந்நு திங்கிவீங்கும் திரிபுடி முடிஞ்ஞு தெளிஞ்ஞிடுன்ன தீபம் கபடயதிக்கு கரஸ்தமாகுவீலெ ன்னுபநிஷதுக்தி ரஹஸ்யமோர்த்திடேணம் மூவுலகெல்லை கடந்து பொங்கும் மும்மடி அறிவொடுங்கி ஒளிரும் தீபம் கபடமுனிக்கு கைவசமாகாதென்னும் உபநிடத மறையை மனதிலிருத்துவாய்.                                                              (ஆத்மோபதேச… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13

முக்குணமும் திருநீறணிந்த ஓர் ஈசனுக்கு அகமலரிட்டு வணங்கி புலனின்பம் விலக்கி அனைத்தும் ஒழிந்து தணிந்து தனிமையின் உயர்வும் போய் பேரொளியில் நின்றிடவேண்டும்                                                                           (ஆத்மோபதேச சதகம்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

தோலுமெலும்பும் மலமும் துன்பம்தரும் நாற்றங்களுமேந்தும் அகந்தையை காண்க அழியும் இதுவேறு அழிந்து முழுமையாகும் பெருமகந்தை வந்திடா வரம் அருள்க                                                              ஆத்மோபதேச சதகம் – பாடல் 12 முந்தைய பாடல்களில், அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு பண்புக்கூறுகளை விவரித்தோம்.  ஒன்று நோக்கிநிற்கும் அகம்.  மற்றொன்று உடற்செயல்பாடுகளிலும் பல்வேறு மனமாற்றங்களிலும் சிக்கிகொண்டுள்ள நனவு.  ஒருவன் தன் மெய்மையை கண்டெடுக்க முயலுகையில் அவன் தனது மெய்சார் அடையாளத்திலோ ஆன்மீக அடையாளத்திலோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  பெரும்பாலும் ‘நான்’ எனும் எண்ணம் வரும்போது… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

நான் நான் என்றுரைப்பதெல்லாம் ஆராய்கையில்அகமேயன்றி பலவல்ல ஒன்றேயாகும் அகலும் அகந்தை அனேகம் ஆகையால் அனைத்திலும் அகத்தின் பொருள் தொடர்ந்திடும்                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 11) நான்காவது பாடலில் சொல்லப்பட்ட தூய அறிவின் சித்திரம் நம் முன்னே உள்ளது.  ஐந்தாவது பாடலில் அத்தூய அறிவு நிலையில் நம்மை பொருத்திப்பார்த்துக்கொள்வது எளிதல்ல என்றார் குரு. அதற்குக் காரணம் உறங்குபவன், விழித்திருப்பவன், வேட்கைகள் உடையவன் அவற்றை வளர்த்தெடுப்பவன் என மீண்டும் மீண்டும் நிகழும் அடையாளப்படுத்தலே என்றார்.  உடலைப் பேணுதல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

இருளில் இருப்பவனே யார் நீ? என்றொருவன் கேட்க – நீயும் அவனிடம் ‘நீ யார்? என்கிறாய் இரண்டிற்கும் விடை ஒன்றே!                     (ஆத்மோபதேச சதகம் – பாடல் 10) கண்களை மூடிக்கொண்டு உங்கள் இருப்பை அகத்திலிருந்து நோக்க முயல்வீர்களேயானால் உங்கள் உடலின் எல்லை உண்மையில் எங்கு முடிகிறது  என்பதை அறிவது எளிதல்ல. இங்குமங்குமாக சில மங்கலான உணர்வுகள் தோன்றலாம்.  ஆனால் கண்களை மூடியபடி உங்கள் மண்டையோட்டின்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்! அவ்வாறிருப்பது கைகூடாதென்றால் ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும் முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்! (ஆத்மோபதேச சதகம் – பாடல் 7) முதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா? மும்மை அடிப்படைப்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள்

That Alone: The Core of Wisdom (நாராயண குருவின் ஆத்மோபதேச சதகம் மீதான சிந்தனைகள்) அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம் (1) ஆன்மாவும் புலன்களும் உடலும் தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலை பரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின் திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம் (2) புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள்

பொருள் (அர்த்தம்)

ௐ எனும் ப்ரணவத்தில் உச்சரிக்கப்படும் ஒலிகள் ‘அ, உ, ம்’ என்பவை மட்டுமே. நான்காவதாக வரும் தீர்க்கமான மெளனம் ஒலிக்கப்படும் எழுத்துக்களிலிருந்து விலகி நிற்கின்றது. அதுபோலவே வாழ்நோக்கங்களில் (புருஷார்த்தங்கள்) அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆகிய மூன்றும் ஒன்றாய் நிற்பவை. வீடுபேறு (மோட்சம்) தனியாய் நிற்கும். இருப்பு, நனவு, இனிமை (அஸ்தி-பாதி-ப்ரியம்) என்பவை முறையே அறம் பொருள் இன்பத்தை சுட்டுகின்றன.  எல்லாவற்றிலும் உயர்ந்தது வீடுபேறுதான் (மோட்சம்). இவற்றிலெல்லாம் அடங்கியிருக்கும் ஒரு ரகசியமுண்டு. அதைக் கண்டுகொண்டோமென்றால்,… Read More பொருள் (அர்த்தம்)

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

எழவேண்டும் பின் உறங்கவேண்டும் உண்ணவேண்டும் இணையவேண்டும் என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?                                                                            (ஆத்மோபதேச சதகம் – பாடல்… Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6