சௌந்தர்யலஹரீ

[சங்கரர் எழுதிய ‘சௌந்தர்யலஹரீ’ நூறு பாடல்களைக் கொண்டது. இதில் முதல் நாற்பத்தியோரு பாடல்கள் அடங்கிய ‘ஆனந்தலஹரீ’ எனும் பகுதிக்கு குரு நித்ய சைதன்ய யதி எழுதிய உரை] அறிமுகம் வேதாந்தத்தின் மரபார்ந்த உளவியலின்படி முழுமுதல் என்பது அறிவெல்லைகடந்த ‘பரா’வாகவும் உள்ளார்ந்த ‘அபரா’வாகவும் கருதப்படுகிறது. தாந்திரீகம் சற்று வேறுவகையில் இவற்றை முறையே சிவன் என்றும் சக்தி என்றும் கூறும்.  புராணங்கள் சிவனை முப்புரம் எரித்த திரிபுராந்தகன் என்று வர்ணிக்கும். புரம் அல்லது நகரம் என்பது மானுடம் சார்ந்த பல்வகைக்… Read More சௌந்தர்யலஹரீ

சௌந்தர்யலஹரீ – 41

தவாதா*ரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா நவாத்மானம் மன்யே நவரஸமஹாதாண்டவநடம் உபா*ப்யாமேதாப்*யாமுதயவிதி*முத்திஶ்ய தயயா ஸனாதா*ப்*யாம் யஜ்னே ஜனகஜனனீமஜ்ஜகதிதம் பாடல் – 41 லாஸ்ய நடமிடும் ஸமயத்துடனும் தாண்டவமாடும் ஆடலரசனுடனும் மூலாதாரத்தில் புதியதாய் அமைந்த உன்னை தியானிக்கிறேன் ஒன்பது சுவைகளையும் வெளிப்படுத்தி இருவரும் இணைந்து இவ்வுலகை மீண்டும் பிறப்பித்து தாய்தந்தையரென அமைகின்றனர் ** கன்னியொருத்தி மணமகளாகிறாள். அன்புநிறைந்த சுற்றத்தாரின் அருளும் ஆசியும் கொண்டு மணவினை கொள்கிறாள். மணவறைக்குள் நுழைந்தபின்னர் அந்நாள்வரை அவள் எதுவாக இருந்தாளோ அப்படி தன்னை அவளால்… Read More சௌந்தர்யலஹரீ – 41

சௌந்தர்யலஹரீ – 40

தடித்வந்தம் ஶக்த்யா திமிரபரிபந்தி*ஸ்பு*ரணயா ஸ்பு*ரன்னானாரத்னாப*ரணபரிணத்தே*ந்த்ரத*னுஷம் தவ ஶ்யாமம் மேக*ம் கமபி மணிபூரைகஶரணம் நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபு*வனம் பாடல் – 40 அணிகலன்களும் அருமணிகளும் பதித்த இந்திரவில்லேந்தி அனைத்திருளையும் அகற்றும் மின்னல் மிடைந்த கருமேகமென  மணிபூரகத்தில் உறையும் சக்தியான உன்னையும் உன்னுடன் இணைந்த பசுபதியையும் வணங்குகிறேன். அரனின் எரிநெருப்பில் சாம்பலென எரிந்த முப்புரங்களும் உன் மழையால் குளிர்கின்றன ** முதிர்கரு கருப்பையில் இருக்கையில், வளரும் குழந்தை எதையும் பார்ப்பதோ கேட்பதோ இல்லை. அது சுவாசிப்பதில்லை, உண்பதில்லை. அதற்கென… Read More சௌந்தர்யலஹரீ – 40

சௌந்தர்யலஹரீ – 39

தவ ஸ்வாதி*ஷ்டா*னே ஹுதவஹமதி*ஷ்டா*ய நிரதம் தமீடே ஸம்வர்தம் ஜனனி மஹதீம் தாம் ச ஸமயாம் யதாலோகே லோகான் தஹதி மஹதி க்ரோத*கலிதே தயார்த்ரா யாத்ருஷ்டி: ஶிஶிரமுபசாரம் ரசயதி பாடல் – 39 அன்னையே வேள்வி நெருப்பை உன் ஸ்வாதிஷ்டானத்தில் வைத்து உன்னை போற்றுகிறேன் எப்போதும் அதை பேரழிவைக்கொணரும் தீயாகவே காண்கிறேன் அவனது பெருஞ்சினம் உலகுகளை எரிக்கையில் உன் கருணை கண்பார்வை வழியே உலகம் இளவேனிலின் தண்மைகொள்ளட்டும் என அங்கே ஸமயத்தையும் வைக்கிறேன். ** அவிழ்க்க முடியாத புதிரென… Read More சௌந்தர்யலஹரீ – 39

சௌந்தர்யலஹரீ – 38

ஸமுன்மீலத்ஸம்வித்கமலமகரந்தைகரஸிகம் ப*ஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் யதாலாபாதஷ்டாதஶகுணிதவித்*யாபரிணதிர் யதாதத்தே தோஷாத் குணமகி*லமப்*த்ய: பய இவ பாடல் – 38 மானஸ ஏரியில் வாழும் பேரான்மாக்களின் நனவில் மலரும் அறிவெனும் தாமரைகளின் தேனை அருந்தி மகிழும்  அவ்விரு அன்னங்களை தியானிக்கிறேன் நீரிலிருந்தெடுத்த பால்போன்ற தீயதிலிருந்து பிரித்தெடுத்த நன்மை நிரம்பிய பதினெட்டு கலைகளும் அவற்றின் உரையாடலிலிருந்து முகிழ்த்தவையே ** எங்கும் பரந்த முடிவிலியில், இங்கு-இப்போது என்ற இரண்டும் நுழைத்து வைக்கப்பட்டுள்ளன. சிறியனவாகிய, கட்புலனுறுப்பாகிய நமது கண்கள் மூளையில் உள்ள… Read More சௌந்தர்யலஹரீ – 38

சௌந்தர்யலஹரீ – 37

விஶுத்தௌ* தே ஶுத்த*ஸ்ப*டிகவிஶதம் வ்யோமஜனகம் ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமானவ்யவஸிதாம் யயோ: காந்த்யா யாந்த்யா ஶஶிகிரணஸாரூப்யஸரணேர விதூ*தாந்தர்த்*வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ பாடல் – 37 உனது விஶுத்தி சக்ரத்தில்  படிகம் போன்ற தூயவனும் ஆகாயத்தை தோற்றுவிப்பவனுமான சிவனையும்  அவனுக்கிணையான சக்தியையும்  துதிக்கிறேன் இந்த இணையரிடமிருந்து பெருகி ஒழுகும் அழகிய நிலவொளியில் திளைக்கும் உலகு அக இருள் அகன்ற சகோரப் பறவை போலிருக்கிறது ** பூமியைப் பொறுத்தவரை சூரியன் கடுமையான பணி ஏவுநன். நாள் முழுவதும் அவளது… Read More சௌந்தர்யலஹரீ – 37

சௌந்தர்யலஹரீ – 36

தவாஞாசக்ரஸ்த*ம் தபனஶஶிகோடித்*யுதித*ரம் பரம் ஶம்பு*ம் வந்தே பரிமிலிதபார்ஶ்வம்  பரசிதா யமாராத்*யன் ப*க்த்யா ரவிஶஶிஶுசீனாமவிஷயே நிராதங்கே லோகே நிவஸதி ஹி பா*லோகபு*வனே பாடல் – 36 அன்னையே, கோடி சூரியசந்திரர்கள்போல் ஒளிரும்  உன் ஆஞா சக்ரத்தில் முழுமுதலாய் அமைந்திருக்கும் ஶம்புவை வணங்குகிறேன் அவனது இரு புறங்களும்  மீநனவால் ஒளியூட்டப்படுகின்றன சூரியனும் சந்திரனும் அக்னியும்  தீண்டமுடியாத இடத்தில் இருப்பதை புரிதலுக்கப்பாற்பட்டதை தனித்திருப்பதை வழிபடுபவர் தூய அக உலகில் வாழ்கிறார் ** மானுடனின் வயிறெனும் குழியுள் உறையும் நெருப்புக்கு எரிபொருள் தேவைப்படுகிறது.… Read More சௌந்தர்யலஹரீ – 36

சௌந்தர்யலஹரீ – 35

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி*ரஸி த்வமாபஸ்த்வம் பூ*மிஸ்த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வவபுஷா சிதானந்தாகாரம் ஶிவயுவதி பா*வேன பிப்*ருஷே பாடல் – 35 ஆஞாவில் மனமாக, விஶுத்தியில் வெளியாக அநாஹதத்தில் வளியாக ஸ்வாதிஷ்டானத்தில் காற்றின் சாரதியாக மணிபூரகத்தில் நீராக இருக்கிறாய் உன் தோற்றம் எனும் வடிவன்றி வேறொன்றும் இல்லை உனது சுயத்திலிருந்து தோற்றம் கொள்வதற்கென இந்தப் பிரபஞ்ச வடிவு கொண்ட நீ பேரின்ப நனவெனும் வடிவு கொண்ட நீ சிவனை… Read More சௌந்தர்யலஹரீ – 35

சௌந்தர்யலஹரீ – 34

ஶரீரம் த்வம் ஶம்போ*: ஶஶிமிஹிரவக்ஷோருஹயுகம் தவாத்மானம் மன்யே ப*கவதி நவாத்மானமனக*ம் அத: ஶேஷ: ஶேஷீத்யயமுப*யஸாதா*ரணதயா ஸ்தி*த: ஸம்பந்தோ* வாம் ஸமரஸபரானந்தபரயோ: பாடல் – 34 ஶம்புவின் உடலே நீ சூரிய சந்திரரே உன் இரு முலைகள் உன் ஆன்மாவையே  பா*வத்தின் தூய ஆன்மாவாகக் கொள்கிறேன் அருளப்பட்டவளே நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நிறைவுசெய்து ஒருவரது சாரமே மற்றொருவர் என உணர்ந்து ஒன்றேபோல் பேரின்பத்தில் திளைக்கிறீர்கள் ** உடல் கொண்ட மனிதர்கள் நாம். ஒருவர் தன் கண்களைத் திறந்து பல… Read More சௌந்தர்யலஹரீ – 34

சௌந்தர்யலஹரீ – 33

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதயமிதமாதௌ தவமனோர் நித்*யாயைகே நித்யே நிரவதி*மஹாபோ*கரஸிகா: ப*ஜந்தித்வாம் சிந்தாமணிகுணனிபத்தா*க்ஷவலயா: ஶிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபி*க்ருததா*ராஹுதிஶதை: பாடல் -33 தனித்தவளே, அழிவிலாதவளே, பேரின்பம் துய்க்கும் எண்ணற்ற போகிகள் உன் மந்திரத்திற்கு முன்னொட்டாக ஸ்மரன், யோனி, லக்ஷ்மி (ஐம், ஹ்ரீம், ஶ்ரீம்) என்ற முத்தொகுதியை சேர்த்து சிந்தாமணிகளால் ஆன ஜபமாலையுடன் விழைந்ததை அருளும் சுரபி எனும் பசுவின் நெய்யை சிவமெனும் நெருப்பில் இடைவிடாது ஆகுதி செய்து உன்னை வழிபடுகின்றனர் ** மனிதர் மகிழ்ச்சியை நாடுகின்றனர். புலனின்பங்களில் ஒரு… Read More சௌந்தர்யலஹரீ – 33