புதிரான மௌனம்

மென்மையைவிட மென்மையானவன் நீ என்றாலும் என் இருதயத்தை ரணமாக்குகிறாய் அன்பெனும் புனிதப்பயணத்தில் சோர்வில்லாமல் உன் அகக் கோட்டை நோக்கி வந்துகொண்டே இருக்கிறேன் பேச்சற்று சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் உன்னை காணும்போது குழம்பிப்போகிறேன் அறிவிழந்து நிற்கிறேன் பதிலில்லா மௌனத்தில் உறைந்த உன் பிம்பம் என்னை அறியமுடியா துயரத்தில் ஆழ்த்துகிறது “என் ஆன்மாவின் பேச்சற்ற தனிமையில் கிடப்பதுதான் உன் ஊழா” என்ற குரலில்லா எண்ணம் என் அகத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது   பதிலாக வசீகரமான புன்னகையை நீ அளிக்கிறாய் நாணக்கேட்டில்… Read More புதிரான மௌனம்

வேண்டுதல்கள் – 9

காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை நீ ஒரு மலர் வண்டெதுவும் முத்தமிடாத  மலர் நீ ஒரு பாடல் மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல் என் அகத்தை தூய்மையாக்கும் இறைகூறும் இரகசியம் நீ பேரின்பப் பரவசம் நல்கும் இன்னிசைப் பாடல் நீ நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை உன்னை என் கனவுகளில் காண்பதும் நிலைபேற்றின் இன்னிசையை என உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய வேறொன்றையும் நான் விழையவில்லை   கால்களை சேறாக்கிக் கொள்ளாமல் மண்ணில் நடக்கும் ரகசியத்தை… Read More வேண்டுதல்கள் – 9

வேண்டுதல்கள் – 8

கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி   தானாடாமல் ஆட்டுவிப்பவன் இறைவன் கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி படைப்புச் செயல்களில் எல்லாம் நளினமாய் இருப்பவன் என்றாலும் என் அகத்தை சுழற்றி முறுக்கும் நீயே எனை ஆட்டுவிப்பவன் பொல்லாத கற்பனைகளைத் தூண்டும் கண்ணுக்குத் தெரியாத ஒளி நீ வாழ்வின் மணத்தை நுகர்வதற்கு  ஒரே காரணம் நீ எவ்வகையிலும் எங்கும் இருந்துகொண்டே எல்லாவற்றிலிருந்தும் விலகியிருக்கும் ரகசியத்தை உன்னிடமிருந்துதான் நான் கற்க வேண்டும்  

வேண்டுதல்கள் – 7

பற்றின்மை தரும் மெய்யறிவு என்னகத்தை அலைக்கழிக்கும் காதலின் கங்கு கசப்பின் உச்சத்தில் தாக்கும் காழ்ப்பின் சூறாவளி – என் விருப்புவெறுப்பெதையும் கவனியாமல் முரண்களின் முன் மௌனமாய் அமர்ந்திருக்கிறாய்!   உன் சமநிலையின் ரகசியத்தை கற்கவிழைகிறேன் நான்!

வேண்டுதல்கள் – 6

அன்புகலந்த நம்பிக்கை இவ்வுலகெனும் பயங்கரப் பள்ளத்தாக்கில் விழிவிரிந்த வியப்புடன் சுற்றிவருகிறாய்! பேரரசர்கள்கூட  பாதுகாப்புணர்வில்லாமல் மனச்சிதைவில் நெளியும்போது எளிய நம்பிக்கையுடன் சுகமாய் உறங்குகிறாய்!   அன்புகலந்த நம்பிக்கையின் ரகசியத்தை உன்னிடமிருந்து கற்கவேண்டும்!

வேண்டுதல்கள் – 5

இருத்தலில் இல்லாமை புகழப்படும்போது உன் விழிகள் ஒளிர்வதில்லை நிந்திக்கப்படும்போது உன்கன்னங்கள் இருள்வதில்லை நான் இதயத்தை திறக்கும்போது உன்னுள் மூழ்கி அமர்ந்திருக்கிறாய் அக்கறையின்றி நானிருக்கும்போது சேவை  புரிவதில் கவனமாய் இருக்கிறாய்   இரக்கமே உருவான உன் இருப்பில்கூட யாரும் தடுக்கிக்கொள்ளாவண்ணம் அமைதியுடன் தன்முனைப்பை அழித்தொழிக்கும் ரகசியத்தை உன்னிடம் பயிலவேண்டும்    

வேண்டுதல்கள் – 4

மௌனத்தின் ஆற்றல் புகழ்மிகு பீடத்தையே எப்போதும் எனக்களித்தாய் என்கால்கள் இளைப்பாற உன் கனிவென்னும் கம்பளத்தை விரித்தாய் இனியதும் மென்மையானதுமான பார்வையால் என்னை நீ தூய்மையாக்குவது எங்ஙனம்? உன் மௌனத்தில் பிறந்த ஞானமே என் நாவிலெழும் சொற்களானது எவ்வாறு?   அடக்கமே உருவான உன் அழகிய நெற்றியில் வெகு இயல்பாய் அமர்ந்திருக்கும் மௌனத்தின் ஆற்றலை உன்னிடமிருந்து கற்க வேண்டும்.

வேண்டுதல்கள் – 3

ஏற்பின் ரசவாதம் பிறந்த மண்ணை நீங்கி வெகுதூரம் சென்றுவிட்டாய் என்றாலும் உன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருப்பது போல் எளிதாக சுவாசிக்கிறாய்   ஏதோ மொழிபேசுவோரும் ஏதோ வழக்கம்கொண்டோருமான உன்னை எதிர்கொண்ட வண்ணம் உள்ள அன்னியரையெல்லாம் நெடுநாட்களுக்குப்பின் காணும் உறவினர் போல வாழ்த்துகிறாய்   மிக எளிதாக சமநிலை குலையாமல் ஒரு புனிதருக்கே உரிய கண்ணியத்தோடு பிறரின் ஆன்மாவில் கரைந்தழியும் ரகசியத்தை உன்னிடமிருந்து நான் கற்கவேண்டும்

வேண்டுதல்கள்

  யதார்த்தங்களின் உன்னத ஒளிவட்டம்     மல்லிகை மொட்டு போல் மென்மையாக இருக்கிறாய் இறுகிய உலோகச் சுருள்கம்பியின் உறுதியுடன் எப்படி இருக்க முடிகிறது உன்னால்? அமுதவெளியை நோக்கும் உன் கண்களில் கனவுகளன்றி எதுவும் தெரியவில்லை எனக்கு தர்க்கத்தின் உறுதியான நிலத்தில் எப்படி அழுந்தி நடக்க முடிகிறது உன்னால்?     வானவில்லின் பேரழகையும் வாழ்வின் யதார்த்தங்களையும் ஒன்றாக இணைக்கும் வலிமையை உன்னிடமிருந்துதான் கற்கவேண்டும்     (Prayerful Supplications – My Inner Profile)