ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

மனமலர் கொய்து மஹேஶ பூஜ செய்யும் மனுஜனு மற்றொரு வேல செய்திடேண்ட வனமலர் கொய்துமதல்லயாய்கில் மாயா மனுவுருவிட்டுமிரிக்கில் மாய மாறும் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 29) மனமலர் கொண்டு இறைபோற்றுபவர் பிறிதொரு  வினையாற்ற வேண்டியதில்லை கான்மலர் கொய்க; இல்லையெனில் மாயையின் மந்திரம் ஓதவே மாயை மறையும் * முதல் பாடலிலேயே இரண்டு எதிரெதிர் உலகங்களை கண்டோம் – ஒன்று பொருட்களால் நிரம்பிய புற உலகு; மற்றொன்று எண்ணங்களாலும் புலனுணர்வுகளாலும் நிறைந்த நனவோடை போன்ற அக உலகு. … Read More ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

செசானின் ஓவிய உலகம்

இயற்கை கலையை அபிநயிக்கிறது என ஆஸ்கார் வைல்ட் சொல்வது சிலவேளை முற்றும் உண்மையாகி விடுவதுண்டு.  தென் ஃப்ரான்சின் ஐசன் ப்ராவின்ஸ் பகுதியிலுள்ள எட்ரோயின் குன்றுகளிலும் சோங் விக்டோவர் மலைச் சரிவுகளிலும் நடந்து திரிபவர்களுக்கு அங்குள்ள காட்சிகளனைத்தும் பால் செசான் (Paul Cezanne) தீட்டி வைத்துள்ள நிலக்காட்சிகளோ என்று நினைக்கத் தோன்றும்.  அது மட்டுமன்று, அப்போது பார்வையாளனின் கண்ணும் மனமும் செசானுடையதாய் உருமாற்றம் பெறும்.  ஒவ்வோர் நிலக்காட்சிக்கும் அதற்கேயுரிய உயிர் இருப்பதாய் செசான் நம்பியிருக்கக் கூடும்.  செசானின் ஓவியங்கள்… Read More செசானின் ஓவிய உலகம்

இருப்பும் அறிதலும் – 3

19-ஆம் நூற்றாண்டின் பெளதிகவாத சிந்தனையின் சிறந்த தொகுப்பாக நாம் ஹோல்பாக் (Holback) எழுதிய ‘இயற்கையின் அமைப்பு’ (System of Nature) என்ற நூலைக் கருதலாம்.  இந்நூல் இன்றுகூட ஒரு கிளாசிக் என்ற எண்ணம் எனக்குண்டு.  கருத்துமுதல் வாதத்தை கடுமையாக எதிர்க்கும் ஹோல்பாக் ‘அது ஒருவிதத்தில் அல்லது மற்றொரு விதத்தில் புலன்களுக்குச் சிக்குவது எதுவோ அதுவே பொருள்’ என்று நிர்ணயிக்கிறார்.  அடுத்த தலைமுறையின் முதன்மையான பெளதிகவாத சிந்தனையாளர் லாப்லேஸ் (Laplace) ஆவார். அவர் வழியாகவே பெளதிகவாதம் ஒரு மெய்காண்… Read More இருப்பும் அறிதலும் – 3

இருப்பும் அறிதலும் – 2

மீண்டும் நுண் அலகு இயந்திரவியலுக்கு வருவோம்.  1927-இல் இயற்பியலறிஞர்கள் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸல்ஸ் நகரில் வைத்து ஒரு சர்வதேசக் கருத்தரங்கு நடத்தினார்கள்.  இங்கு நுண்ணலகு இயந்திரவியலின் இயல்புகள் வரையறுக்கப்பட்டன. பிற்பாடு இது கோபன் ஹேகன் விளக்கம் (Copenhagen Theory) என்று அறியப்பட்டது.  பல்வேறு விளக்கங்கள் பிற்பாடு வந்துவிட்டன என்றாலும் இவ்விளக்கமே பொதுவான அங்கீகாரம் உடையதாக உள்ளது.  இதை ஐன்ஸ்டீன் தொடர்ந்து எதிர்த்தார்.  அறியமுடியாமை என்ற முடிவை விஞ்ஞானத்தின் மீது அது சுமத்துகிறது என்றார்.  முற்றிலும் புரியாததாக உள்ள… Read More இருப்பும் அறிதலும் – 2

இருப்பும் அறிதலும் – 1

மனிதனின் அறிவும், விருப்பமும் எப்படி இருந்தாலும் அவை பொருண்மைகளை எவ்வகையிலும் பாதிப்பதில்லை; அனைத்து அகவய இயக்கங்களிலிருந்தும் விலகி பிரபஞ்சப் பொருண்மை சுதந்திரமாக இருக்கிறது, இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்து மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  அறிதலுக்கு வெளியே என்னதான் இருந்தாலும் அவற்றின் இருப்பு அறிதலினூடாகவே உருவாகிறது.  இருப்பும் அறிதலும் வேறு வேறல்ல. எனவே அந்தரங்க அறிதலும் பொருண்மையும் ஒன்றுதான் என்று கூறும் ஒரு தத்துவ தரிசனமும் வெகு காலமாக மேலை, கீழை… Read More இருப்பும் அறிதலும் – 1

மொழியும் பிரபஞ்சமும் – 3

நமது சொற்புலனில் ஒலி – ஆனந்தத்தை ஆக்கும் மையம் நம்மில் உள்ள விசுத்தி சக்கரம் ஆகும்.  (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரம், அனாகரம், விசுத்தி, ஆக்ஞை, நாதம், பிந்து, சகஸ்ரம் என்று ஒன்பது சக்தி மையங்கள் நம் உடலில் உள்ளன என்று யோக – தாந்திரீக மரபு உருவகித்துள்ளது).  இந்த விசுத்தி சக்கரம் ஆக்ஞை, அனாகதம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் உள்ளது.  நம் உயிர்மூச்சின் சொல்லுக்குரிய மையம் அது. அதன் ஒலி ‘ஹ’ என்பதாகும்.  தாந்திரீக முறைப்படி பிராணன்… Read More மொழியும் பிரபஞ்சமும் – 3

மொழியும் பிரபஞ்சமும் – 2

வேதத்தினூடாக அடையும் நன்மைகள் உலகியல் சார்ந்தவை.  அவற்றை சம்சாரம் என்று கூறுகிறோம்.  இவை சார்பு நிலையானவை.  இவற்றையெல்லாம் வார்த்தைகளினூடாக மானுடன் அறிகிறான்.  ஆனால் வார்த்தையில் அடங்கியுள்ள வேறு ஒரு ரகசியம் உண்டு.  அதை நாதம் எனலாம்.  மூதாதையர் சொல்லை இணைத்து செய்யுள் உருவாக்கினர்.  வேத மந்திரங்கள் நான்கு வரிகளினாலானவை.  அவற்றை இரண்டிரண்டாகப் பிரித்தால் அவை நான்கு நான்கு எழுத்துக்களாகும்.  அதை ‘அனுஷ்டுப்பு சந்தம்’ என்பர்.  சொல் இவ்வாறு பற்பல சந்தங்களில் நிறுவப்பட்டுள்ளது.  சந்தமொன்றில் நிறுவப்படாத சொல் இல்லை. … Read More மொழியும் பிரபஞ்சமும் – 2

மொழியும் பிரபஞ்சமும் – 1

சரித்திரத்தின் புலர்காலையில் எழுந்த பறவைக் குரல் ரிக்வேதம்.  அது இசையானபோது சாமம் ஆயிற்று.  சாம வேதத்தின் துணை நூலான பிரகதாரண்யக உபநிடதம் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிப் பேசும் இடம் மொழியைப் பற்றிய புராதன இந்தியச் சிந்தனையை அறிந்துகொள்வதற்குரிய சிறந்த தொடக்கப்புள்ளியாகும். பிரகதாரண்யக உபநிடதம் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுகிறது.  அந்த சூனியத்தின் பிரதிநிதியான மரணத்தைப் பற்றி விளக்குகிறது.  நிலம், நீர், வாயு, அக்னி, வானம் எனும் ஐம்பெரும் பருக்கள் உருவானதை சித்தரிக்கிறது.  அவற்றிலிருந்து பிரஜாபதி… Read More மொழியும் பிரபஞ்சமும் – 1

விடுதலையின் மெய்யியல்

‘அடுத்து என்ன?’ என்ற கேள்வியின் விளைவாகவே எதனுடைய தொடக்கமும் நிகழ்கிறது.  ‘அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன?’ என்ற நம்முடைய கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய் சந்தர்ப்பம் எந்த நேரத்திலும் வாய்க்கலாம்.  இந்தக் கேள்வி பலரை குழப்பமடையச் செய்கிறது.  இந்தக் கேள்வியை முகங்கொள்ளும்போது, தீர்க்கப்படவேண்டிய எண்ணற்ற பிரச்சினைகளையும், சந்திக்க வேண்டிய நெருக்கடிகளையும், எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளையும் சிலர் அனுபவிக்கிறார்கள்.  மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்; ஆயிரக்கணக்கானவற்றிலிருந்து ஒரு உறுதியற்ற உணர்வால் அவர்களுடைய இயலாமையின் முடிவற்ற படுபாதாளத்தில் அவர்கள்… Read More விடுதலையின் மெய்யியல்