மரணத்தை எதிர்கொள்ளல் – 3

மரணம் என்ற பொருள், விவாதத்திலிருந்து விலக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.  குறிப்பாக சில பெண்களுக்கு முன்னால் நீங்கள் மரணத்தைப் பற்றி பேசினால் அவர்கள் உங்கள் வாய்மேல் கையை வைத்து, ‘மரணத்தைப் பற்றி பேசாதீர்கள், வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றி பேசுங்கள்’ என்று சொல்கிறார்கள்.  இதே நபர்களே அடிக்கடி ஒருவனின் மரணத்துக்கு மிகச் சிறந்த காரணகர்த்தாக்களாகவும் இருக்கிறார்கள்.   அண்மையில், இறந்துகொண்டிருந்த ஒருவரின் பக்கத்தில் இருந்தேன்.  அவருடைய மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து கடவுள், சொர்க்கம், மற்றும் மரணத்துக்குப்பின் ஆன்மாவுக்கு… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 3

மரணத்தை எதிர்கொள்ளல் – 2

நம்முடைய எந்தப் பகுதி உண்மையில் ‘நாம்’?  அது நாம் உண்ணும் உணவா, நம்முடைய எலும்புகளின் மஜ்ஜையாக மாறும் உணவு ஊட்டமா, நம் மூளையின் செல்களா, அல்லது நம்முடைய மத்திய நரம்பு மண்டலமா, அல்லது நம்முடைய தசைகளா?  நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பெரிதாகக் குறைக்காமல் நம்முடைய சில பகுதிகளை நீக்கிவிட முடியும்; வேறு சில பகுதிகளை நீக்கினால் நாம் இறந்துவிடுவோம்.  இரண்டாவதாகச் சொன்னதை ‘நாம் யாராக இருக்கிறோம்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 2

மரணத்தை எதிர்கொள்ளல் – 1

‘மரணம்’ – இந்த வார்த்தையைவிட அதிகம் அச்சம் தருகிற, ஓயாமல் நினைவில் ஊடாடிவருகிற, வஞ்சகமான பயங்கரம் நிரம்பிய வேறு வார்த்தை கிடையாது.  அது இறுதியும், முழுமையும் கொண்டது.  இருந்தும் பலருக்கு மரணம் ஓர் ஆறுதல்; அவர்களின் எல்லாத் தொல்லைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிற ஒரு வாக்குறுதி. மரணத்தைக் கண்டு பயப்படுகிறவனுக்கும், அதை விரும்பி நாடுகிறவனுக்கும் மரணம் நேர்கிறது.  மரணத்தைவிட நிச்சயமான விஷயம் இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லாவிட்டாலும் நிறையப் பேர் அதைப் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை.  எனவே, அது… Read More மரணத்தை எதிர்கொள்ளல் – 1

நோயை எதிர்கொள்ளல்

அதிர்ஷ்டம் தரும் திடீர் வாய்ப்பு இன்று அதிர்ஷ்டம் தரும் ஒரு திடீர் வாய்ப்பு பற்றி பேச விரும்புகிறேன்.  மக்கள் பொதுவாக மூன்று வகையான நோய்கள் குறித்து அச்சப்படுகிறார்கள்.  இதயநோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம்.  ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் பிழைப்பாரா என்று சொல்ல முடியாது.  மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதோ என்றால் அவர் பிழைத்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சிறிது காலமே உயிர் வாழக்கூடும்.  ஆனால், மாரடைப்பு எப்படி வந்தது என்பது… Read More நோயை எதிர்கொள்ளல்

நடராஜ குருவும் நானும் – 11

சரியாக நாற்பத்தியோராம் நாள் குரு திரும்ப வந்தார்.  குரங்குகளால் நான் பட்ட கஷ்டங்களை ஏற்கனவே அவருக்கு நான் எழுதியிருந்தேன்.  இதற்காக அவர் தன்னுடன் எடுத்துவந்த வெடிகளை நாங்கள் வெடிக்கும்போது, குரு தனது கைத்தடியை துப்பாக்கி போல் குரங்குகளை நோக்கி நீட்டுவார்.  இந்த தந்திரம் நல்ல பலனைத் தந்தது.  நாங்கள் துப்பாக்கி ஏந்தியவர்கள் என குரங்குகள் எண்ணின.  ஆனால், குருவின் கைத்தடிக்கும் வெடிக்கும் சம்பந்தம் இல்லை என்பது, சில நாட்களிலேயே குரங்குத்தலைவர்களுக்குத் தெரிந்து போனது.  நம் தந்திரத்தை மாற்றி… Read More நடராஜ குருவும் நானும் – 11

நடராஜ குருவும் நானும் – 9

அங்கிருந்து சென்று மெளனத்தில் ஆழ்வது என்ற உறுதியுடன் எனது பொருட்களை எல்லாம் மூட்டைகட்டிக் கொண்டு, குருவை வணங்கி விடைபெறும் எண்ணத்துடன் முன் வாயிலை அடைந்தேன்.  அப்போது, நான் ஏற்கனவே வெறுப்பு கொண்டிருந்த மனிதனை அழைத்து, ‘இவன் என்னுடைய புத்தகங்களை எல்லாம் திருடிக்கொண்டு ஓடப்பார்க்கிறான்.  போலீஸைக் கூப்பிடு” என்றார் குரு.  எனக்கு அளவில்லா கோபம் வந்தது.  என் பைகளை தரையில் வீசி எறிந்து, “இங்கிருந்து எதையும் நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை! எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.  அதற்கு குரு,… Read More நடராஜ குருவும் நானும் – 9

நடராஜ குருவும் நானும் – 8

நான் சென்னைக்குத் திரும்பியபோது, விவேகானந்தா கல்லூரியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி மாணவர்களை எதிர்ப்பில் ஈடுபடச் செய்த்து.  மொத்த கல்லூரியும் வேலை நிறுத்தத்தில் இறங்கியது.  சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு செல்லப்பெயர்கள் உண்டு – மாநிலக் கல்லூரியின் இளவரசர்கள் (Princes of Presidency College), ராணி மேரி கல்லூரியின் ராணிகள் (Queens of Queen Mary), பச்சையப்பாவின் ரெளடிகள் (Rowdies of Pachayappa), கிறித்தவக் கல்லூரியின் கனவான்கள் (Gentlemen of Christian College), விவேகானந்தா கல்லூரியின் சாம்பார்கள் (Sambars… Read More நடராஜ குருவும் நானும் – 8

நடராஜ குருவும் நானும் – 7

இதற்கிடையில், கேரளாவில் ராமகிருஷ்ண மடத்தையும் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவிய சுவாமி ஆகமானந்தா என் கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னை ஒரு கருங்காலி என்றும், கல்லூரியை அழிக்கும் நோக்குடன், பிராமணர்களை வெறுக்கும் டாக்டர் நடராஜனால் நான் அங்கு அனுப்பப்பட்டேன் என்றும் எழுதியிருந்தார்.  இக்கடிதம் சுவாமி நிஶ்ரேயஸானந்தாவிடம் ரகசியமாகக் காட்டப்பட்டது.  அவர் என்னிடம் அதைக் காட்டினார்.  இக்கடிதத்தால், ‘ராமகிருஷ்ண மடத்தில் ஜாதி வெறி இருப்பதாக குரு நினைப்பது தவறோ?’ என்ற என் சந்தேகம் முற்றிலும்… Read More நடராஜ குருவும் நானும் – 7

நடராஜ குருவும் நானும் – 6

அதற்கடுத்த நாள் சென்னையிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது.  உடனடியாக விவேகானந்தா கல்லூரியின் தத்துவத் துறையில் விரிவுரையாளராகச் சேரும்படி கல்லூரியின் மேலாளர் அனுப்பிய தந்தி அது.  குரு மிகவும் மகிழ்ந்துபோனார்.  இம்முறையும் தனது இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்தார்.  சென்னைக்குப் போவதற்கு முன் உடல்நலமில்லாமல் இருந்த என் தந்தையைப் பார்க்கச் சென்றேன்.  பிச்சைக்காரனைப் போலல்லாமல் நான் எப்பொழும் நன்றாக உடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  அதற்காக விலையுயர்ந்த துணியை வாங்கினார்.  ஆனால் அதைத் தைப்பதற்கு நேரம்… Read More நடராஜ குருவும் நானும் – 6

நடராஜ குருவும் நானும் – 5

அதன் எல்லா வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை பராமரித்து வரும் அறுபடா குரு-சிஷ்ய பாரம்பர்யத்தை குரு மிகவும் உயர்வானதாகக் கருதினார்.  ஜான் ஸ்பியர்ஸ் எப்போதும் திருச்சபையை வெறுப்பவர்.  ஆதலால், குரு கத்தோலிக்க திருச்சபையைப் புகழும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து சூடான விவாதம் நிகழும்.  ஜானின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குருவை எப்போதுமே சீண்டியதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன்.  ஜான் சமநிலைக்குத் திரும்பிய பின்னர் குரு திரும்பவும் விவாதத்தைத் தொடர்ந்து தன் கருத்தை தெளிவாக விளக்குவார்.  ஜானுக்கும் குருவுக்கும்… Read More நடராஜ குருவும் நானும் – 5