வேண்டுதல்கள் – 1

மெல்லிய உத்தரவாதம்  

இதமானது உன் ஆன்மா

நீலநிற ஏரியைப்போலும் அமைதியானது

உன் கருணையின் ஆழத்திலிருந்து எழுகின்றன

உன் எண்ண அலைகள்

மலரும் நாளைக்கான நம்பிக்கை

இன்றைய வலிமைக்கான மெல்லிய உத்தரவாதம்

உன் மௌனப் புன்னகையின்

ரகசியத்தை மட்டும்

கற்க வேண்டும் நான்  

Leave a comment