கவிதைகள்

இன்று

சற்று முந்தி வந்த சூரியன்

என் ரோஜாவின் இதழ்களுக்குள்

தன் பொற்கதிர்களால்

நறுமணத்தை நிரப்பியது

நான் உன்னைத் தேடினேன்

நீ உறங்கிக் கொண்டிருந்தாய்

மாசு மறுவற்ற ஏதோ ஆழத்தில்

மூடிய கண்களுடன்

— 

வெட்கத்தால்

என் தலை கவிழும்படி

மனம் மயக்கும்

ஒரு புன்னகையே

உனது பதில் 

— 

ஆனால்

படிகம் போல

தெளிவாகவும் துல்லியமாகவும்

நீயிருக்கும்போது

நான் என்ன செய்ய முடியும்

ஒரு புத்தனைப்போல

புலன்கள் அணையும் ஆழத்திற்கு

மெளனமாக

திரும்பிச் செல்வதைத் தவிர?

 

மௌனத்தின் ஆற்றல்

ஏற்பின் ரசவாதம்

மெல்லிய உத்தரவாதம்

யதார்த்தங்களின் உன்னத ஒளிவட்டம்

இருத்தலில் இல்லாமை

காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை

கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி

அன்புகலந்த நம்பிக்கை

பற்றின்மை தரும் மெய்யறிவு

 (My Inner Profile தொகுப்பிலிருந்து)

Leave a comment