சௌந்தர்யலஹரீ – 1

ஶிவ: ஶக்த்யா யுக்தோ யதி ப*வதி க்த: ப்ரப*விதும்

ந சேதேவம் தேவோ ந க*லு குல: ஸ்பந்திதுமபி

அதஸ்த்வாமாராத்*யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபி*ரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத*மக்ருதபுண்ய: ப்ரப*வதி

(பாடல் – 1)

சக்தியுடன் இணைகையில்தான் சிவன் உருக்கொள்ளும் ஆற்றல் பெறுகிறான்

தனியனாக துடிக்கும் ஆற்றலும் அவனுக்கிருப்பதில்லை என்றால்

அரி அரன் அயன் முதலானோர் போற்றும் உன்னை

சிறப்பொன்றும் அடையாதோர் வணங்குதலும் போற்றுதலும் எங்ஙனம்?

**

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலின் உருவகங்களே கடவுளர் மூவர். இச்செயல்பாடுகள் தோற்றம், அறியக்கூடிய இருப்பு, இறுதி இணைவு என்ற மூன்றின் வெளிப்பாடாகவும் கருதப்படுகின்றன. இவை இந்தியத் தொன்ம மரபில் பிரம்மன், விஷ்ணு, மஹேஶ்வரன் என்று அழைக்கப்படுபவை. இப்பாடலில் பிரம்மன் விரிஞ்சி என்றும், விஷ்ணு ஹரி என்றும், மஹேஶ்வரன் ஹரன் என்றும் சுட்டப்படுகின்றனர். இந்த முக்கூறுகளும் காலச் சுழற்சிக்குள் இருப்பதால் மூன்று கடவுளருக்கும் கால வரையறை ஒன்றுண்டு. இவர்களை ‘முழுமுதல்’ அல்லது ‘சிவம்’ என்பவற்றோடு குழப்பிக்கொள்ளுதல் கூடாது.

சௌந்தர்யலஹரீயின் ஒவ்வொரு பாடலுக்கும் இணையான ஒரு மந்திரமும், யந்திரமும் உண்டு. மந்திரமாவது அண்டம் தோன்றுவதற்கு முதற்காரணமான ஆதி ஒலி எனும் நாதத்தின் பெயர், சொல், ஒலி எனும் மூன்றோடு தொடர்புடைய கூறு. யந்திரம் என்பது குறிப்பிட்ட களத்தில் மந்திரம் உருப்பெறுவதற்கான இயல்கையை வரையறை செய்யும் வடிவம். கட்புலம் சார் குறியீடு. இவற்றுக்கு மேலாக, மந்திரத்தையும் யந்திரத்தையும் தொடர்புறுத்தி இரண்டிலும் உறையும் உள ஆற்றலைப் பெறுவதற்கு உதவும் இன்னொரு கருவியும் உண்டு. மந்திரம் குறிக்கணக்கியல் (algebraic) கூறாகவும், யந்திரம் வடிவியல் (geometric) கூறாகவும் கருதப்படுகையில், இவ்விரண்டையும் இணைத்து பயன்பாட்டு முழுமை ஒன்றை உருவாக்கக்கூடிய உயிர்ப்பிக்கும் விசையியக்கவியல் (activating dynamics) கூறாக தந்திரம் அமைகிறது.

மூல வடமொழிப் பாடல் ஓவ்வொன்றிற்கும் அனைவருக்கும் பொதுவாக எளிதில் விளங்கக்கூடிய பொருள் ஒன்றும், மறைபொருள் ஒன்றும் இருக்கும். பாடல் குறிப்புணர்த்தும் மந்திரமே மறைபொருளாக அமைந்திருக்கும் ஒவ்வொரு யந்திரத்திற்கும் அதற்கேயான அக இயக்காற்றல் ஒன்றுண்டு. மெய்த்தேடல் கொண்டவர் அந்த வடிவத்தை விடாது நோக்கிக் கொண்டிருக்கையில் நுட்பமாக செயல்படுவது அது. அண்டத்தின் கருத்தாக்கக் களம் பொருட்களின் ஒலிஒளி அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைவது போல, ஒருவரது நனவு நிலையை பாதிக்கும் ஆற்றல் எல்லா வடிவங்களுக்கும் உண்டு. யந்திரத்தின் குறிப்பிட்ட அக இயக்காற்றல் யந்திரசைதன்யம் என்றும், மந்திரத்தின் அக இயக்காற்றல் மந்திரசைதன்யம் என்றும் அழைக்கப்படுகின்றன. சைதன்யம் – தூய நனவு – என்பது பிரபஞ்ச ஆன்மாவிலும், தனிப்பட்ட ஆன்மாவிலும், ஒலிஒளிக்கூறுகளிலும் காணப்படும் பொதுவான ஒருமைப் பண்பு. ஒரு மந்திரத்தை அதற்கிணையான யந்திரத்தோடு முதன் முதலாக விளக்குபவர் அதன் ரிஷியாக கருதப்படுகிறார்.

இம்முதற்பாடலுக்கான யந்திரம் 

‘க்லீம்’ என்பதே பீஜமந்திரம். சிவ-சக்தி இணைவாக அது தியானிக்கப்பட வேண்டும். தியானிக்கப்பட வேண்டிய ரிஷி கோவிந்தன். அருள்வேண்டி வணங்கப்பட வேண்டிய இறையாக மஹாத்ரிபுரசுந்தரி வீற்றிருக்கிறாள். இசைக்கப்பட வேண்டிய சந்தம் அனுஷ்டுப்பு (சுரத்தின் மேற்பாலை). அமிழ்தெனும் ஆழியால் சூழப்பட்டிருப்பதாக உணர்வதே இதன் அக இயக்காற்றல். சிவனையும் சக்தியையும் மெய்மையின் கூறுகளாக, நன்மையின் கூறுகளாக, அனைத்திலும் நிறைந்திருக்கும் அழகை மகிழ்ந்து போற்றும் பண்புகளாகக் காண்பதே ஆன்மீக வளர்ச்சியாக உணரப்பட வேண்டும்.

சௌந்தர்யலஹரீயில் சிவ-சக்தி இணைவென்பது பின்வரும் இருபத்தைந்து வகைமைகளால் வடிவமைக்கப்படுகிறது:

ஐந்து மூலக்கூறுகள்
நிலம்நீர்தீகாற்றுவெளி
ஐந்து புலன்கள்
முகர்தல்ருசித்தல்நோக்குதொடுகைகேட்டல்
ஐந்து புலனுறுப்புகள்
மூக்குநாக்குகண்தோல்காது
ஐந்து இயக்க முகமைகள்
பிறப்புறுப்புகள்வெளியேற்ற உறுப்புகள்கால்கள்கைகள்பேச்சு
சிவனின் ஐந்து வடிவங்கள்
மனம்மாயம்அறிவுமுழுமுதற் கடவுள்(மஹேஶ்வரன்)தூய முழுமுதல் (ஸதாஶிவன்)

வடமொழி உச்சரிப்பு வழிகாட்டி

க – ka

க* – kha

– ga

க* – gha

Leave a comment