வேண்டுதல்கள்

 
யதார்த்தங்களின் உன்னத ஒளிவட்டம்  
 
மல்லிகை மொட்டு போல்
மென்மையாக இருக்கிறாய்
இறுகிய உலோகச் சுருள்கம்பியின் உறுதியுடன்
எப்படி இருக்க முடிகிறது உன்னால்?
அமுதவெளியை நோக்கும் உன் கண்களில்
கனவுகளன்றி எதுவும்
தெரியவில்லை எனக்கு
தர்க்கத்தின் உறுதியான நிலத்தில்
எப்படி அழுந்தி நடக்க முடிகிறது உன்னால்?  
 
வானவில்லின் பேரழகையும்
வாழ்வின் யதார்த்தங்களையும்
ஒன்றாக இணைக்கும் வலிமையை
உன்னிடமிருந்துதான் கற்கவேண்டும்  
 
(Prayerful Supplications – My Inner Profile)

Leave a comment